அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

உங்கள் அறிக்கைகளின் நேர மண்டலத்தை மாற்றுதல்

உங்களுக்குப் பொருந்தக்கூடிய நேர மண்டலத்தில் அறிக்கையைப் பார்ப்பதற்காக, உங்கள் கணக்கின் நேர மண்டலத்தை மாற்றிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமைகளிலோ திங்கட்கிழமைகளிலோ பெறப்படும் டிராஃபிக்கின் காரணமாக வார இறுதி அறிக்கைகளின் துல்லியத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க இது உதவலாம். பில்லிங் நேர மண்டலத்திலும் அறிக்கைகளைப் பார்க்கலாம் (உதாரணமாக, பசிஃபிக் டைம், PST).

கணக்கின் நேர மண்டலத்தை மாற்றுவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டியவை

நேர மண்டலத்தை மாற்றும்போது இவற்றை நினைவில்கொள்ளுங்கள்:

  • கணக்கின் நேர மண்டலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் அவற்றைச் செய்த நேரத்தில் இருந்து மட்டுமே தரவில் பிரதிபலிக்கும். ஏப்ரல் 3ம் தேதி நீங்கள் நேர மண்டலத்தை ESTயில் இருந்து PSTக்கு மாற்றி, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை அறிக்கையை உருவாக்கினால், அறிக்கையில் ஏப்ரல் 3ம் தேதிக்கு முந்தைய தரவு அனைத்தும் ESTயில் இருக்கும். ஏப்ரல் 3ம் தேதிக்குப் பிந்தைய அறிக்கையில் உள்ள தரவு PSTயிலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர மண்டலத்திலோ இருக்கும்.
  • கணக்கின் நேர மண்டலத்தை மாற்றிய தேதியை உள்ளடக்கிய அறிக்கைகளில் தரவில் மாற்றங்கள் ஏதுமில்லை என்றோ அவை அதிகரித்துள்ளதைப் போன்றோ காட்டப்படலாம். இந்த மாறுபாடுகள் நேர மாற்றம் காரணமாகவே ஏற்படுகின்றன. இவை உங்கள் பேமெண்ட்டுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பில்லிங் நேர மண்டலத்தில் (PST) அறிக்கைகளைப் பார்க்கும்போது இந்த மாறுபாடுகள் இருக்காது.
  • நீங்கள் ஏற்கெனவே சேமித்துள்ள அறிக்கைகளும் சேமிக்கத் திட்டமிட்டுள்ள அறிக்கைகளும் தானாகவே புதிய நேர மண்டலத்திற்கு மாற்றப்படும். நீங்கள் சேமித்துள்ள அல்லது சேமிக்கத் திட்டமிட்டுள்ள அறிக்கைகள் அனைத்தும் அவை சேமிக்கப்படும்போது பயன்படுத்தப்பட்ட நேர மண்டலத்தையே இனிமேல் காட்டும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள அறிக்கைகள் உங்கள் கணக்கின் நேர மண்டலத்தில் காட்டப்படும். உங்கள் பேமெண்ட்டுகள் பில்லிங் நேர மண்டலத்தில் (PST) கணக்கிடப்பட்டுக் காட்டப்படும்.

கணக்கின் நேர மண்டலத்தை மாற்றுதல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கு அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு கணக்கு விவரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "கணக்கு விவரம்" பிரிவில் "நேர மண்டலம்" என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  4. கீழ் தோன்றும் பட்டியில் இருந்து உங்கள் நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: இப்போது உங்கள் அறிக்கைகளைப் பார்க்கும்போது, கணக்கின் நேர மண்டலத்திற்கும் AdSense பில்லிங் நேர மண்டலத்திற்கும் இடையே மாறுவதற்கான விருப்பம் அறிக்கை அமைப்புகளில் காட்டப்படும். உதாரணமாக, PST/PDT.

அறிக்கையில் நேர மண்டலங்களுக்கு இடையே மாறுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது அந்தப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நேர மண்டலம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ் தோன்றும் பட்டியில் இருந்து கணக்கு நேர மண்டலத்தையோ பில்லிங் நேர மண்டலத்தையோ தேர்வுசெய்யவும்.
கவனத்திற்கு: சில நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால மாதங்களில் அவற்றின் அதிகாரப்பூர்வ நேரத்தில் சிறிய மாற்றங்களைச் செய்கின்றன. உங்கள் கணக்கிற்குத் தேர்ந்தெடுத்த நேர மண்டலம் பகலொளிச் சேமிப்பு நேரமாக இருந்தால், உங்கள் AdSense கணக்கின் புள்ளிவிவரங்கள் அதற்கேற்ப சரிசெய்யப்படும் (AdSense பில்லிங் நேர மண்டலமான PST/PDTக்கும் உங்கள் கணக்கின் நேர மண்டலத்திற்கும் இடையே நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்).

கோடைக்காலத்தின் முடிவில் உங்கள் கணக்கின் நேர மண்டலம் இயல்பான நேரத்திற்கேற்ப சரிசெய்யப்படும். இந்தச் சரிக்கட்டல் நிகழும் நாள் 23 மணிநேரமாகவோ 25 மணிநேரமாகவோ மாற்றப்படும். இந்தக் காலகட்டத்தில் வருமானத்தில் சிறிய அதிகரிப்பையோ குறைவையோ நீங்கள் பார்க்கக்கூடும்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10240047134403932300
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false