அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் வலைதளத்தில் விளம்பர அனுபவத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் வலைதளங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை சிறந்த விளம்பரத் தரநிலைகளை மீறுகின்றன

உங்கள் வலைதளங்களில் ஏதேனுமொன்று "தோல்வி" அல்லது "எச்சரிக்கை" நிலையில் இருப்பதாக நீங்கள் அறிவிப்பைப் பெற்றிருந்தால் சிறந்த விளம்பரத் தரநிலைகளுடன் இணங்காத விளம்பர அனுபவங்களை உங்கள் வலைதளத்தில் Google சிஸ்டங்கள் கண்டறிந்துள்ளன என்று அர்த்தம். வெளியீட்டாளர்கள் தங்கள் விளம்பர அனுபவங்களை மேம்படுத்துவதற்கு உதவ, தினமும் வலைதளங்களை மதிப்பாய்வு செய்வதுடன் இணங்காததாகக் கண்டறியப்பட்ட விளம்பர அனுபவங்களின் வீடியோக்களைப் பதிவுசெய்வோம். உங்கள் வலைதளம் "தோல்வி" அல்லது "எச்சரிக்கை" நிலையில் இருந்தால், இந்த வீடியோ காட்சிகளுடன் சிறந்த விளம்பரத் தரநிலைகள் குறித்த தகவல்களும் சிக்கல்கள் உங்கள் வலைதளத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்த தகவல்களும் உங்கள் விளம்பர அனுபவ அறிக்கையில் இடம்பெறும்.

Google நிறுவனம் உலகளாவிய, தொழில்துறை அளவிலான Coalition for Better Ads அமைப்பின் உறுப்பினராக உள்ளதோடு, சிறந்த விளம்பரத் தரநிலைகளை முழுமையாக ஆதரிக்கிறது. சிறந்த விளம்பரத் தரநிலைகளுடன் இணங்குவது Google வெளியீட்டாளர் கொள்கைகளின்படி அவசியம். தங்கள் விளம்பர அனுபவ அறிக்கையைப் பார்க்குமாறும் அதில் சிக்கல்கள் எதுவும் கண்டறியப்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யுமாறும் AdSense வெளியீட்டாளர்களுக்கு மிகவும் வலியுறுத்துகிறோம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

  1. அறிக்கையை அணுகுதல்

    Google Search Console சேவையின் ஒரு பகுதியாக விளம்பர அனுபவ அறிக்கை இருப்பதால், அந்த அறிக்கையை அணுக சரிபார்க்கப்பட்ட முழு உரிமையுள்ளவராக இருக்க வேண்டும். உரிமையாளராகவோ பயனராகவோ உங்களைச் சேர்க்குமாறு உங்கள் வலைநிர்வாகியிடம் கேட்கலாம் அல்லது நீங்களே உரிமையைச் சரிபார்க்கலாம். மேலும் அறிக.

  2. அறிக்கையைப் புரிந்துகொள்ளுதல்

    உங்கள் வலைதளம் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதன் நிலை "எச்சரிக்கை" அல்லது "தோல்வி" என்றிருந்தால் உங்கள் பார்வையாளர்களை எரிச்சலூட்டக்கூடிய அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பர அனுபவங்களின் வீடியோக்களை அந்த அறிக்கை காட்டும். கண்டறியப்பட்ட குறிப்பிட்ட அனுபவங்களைக் காண, டெஸ்க்டாப் அல்லது மொபைல் அறிக்கைகளைக் கிளிக் செய்யவும்.

    கவனத்திற்கு: 30 நாட்களுக்கு மேல் உங்கள் வலைதளத்தின் மதிப்பாய்வு நிலை "தோல்வி" என்றிருந்தால் அதிலுள்ள விளம்பரங்களை Chrome வடிகட்டும். டெஸ்க்டாப் மற்றும் மொபைல் மதிப்பாய்வுகள் தனித்தனியே நிர்வகிக்கப்படுவதை நினைவில் கொள்ளவும். உதாரணமாக, மொபைல் விளம்பர அனுபவங்களுக்கான (டெஸ்க்டாப் விளம்பர அனுபவங்களுக்கானது அல்ல) உங்கள் வலைதளத்தின் நிலை "தோல்வி" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அறிவிப்புக் காலமான 30 நாட்களுக்குள் நீங்கள் சிக்கல்களைச் சரிசெய்யவில்லை எனில் மொபைல் சாதனங்களிலுள்ள (டெஸ்க்டாப் சாதனங்களில் அல்ல) Chromeமில் விளம்பரங்கள் வடிகட்டப்படும்.
  3. சிக்கல்களைச் சரிசெய்து மதிப்பாய்விற்குக் கோருதல்

    தரநிலைகளை மீறுவதாகக் கண்டறிந்த அனுபவங்களை அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். அதன்பிறகு, ஒவ்வொரு சிக்கலையும் எவ்வாறு சரிசெய்தீர்கள் என்பதை "மதிப்பாய்விற்குக் கோருக" எனும் பகுதியில் விவரித்து நான் இதைச் சரிசெய்துவிட்டேன் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மதிப்பாய்வு செயலில் உள்ளதைத் தெரிவிக்கும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். மேலும் அறிக.

விளம்பர அனுபவ அறிக்கையிலுள்ள அனைத்துச் சிக்கல்களையும் சரிசெய்த பிறகு உங்கள் AdSense கணக்கிலுள்ள அறிவிப்பு நீக்கப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14231012247482487140
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false