அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

ஒப்பந்த நிறுவனம்: Google Asia Pacific Pte. Ltd.

 

சிங்கப்பூரில் பில்லிங் முகவரியைக் கொண்டுள்ள வெளியீட்டாளர்கள் சிங்கப்பூர் சரக்கு மற்றும் சேவை வரிக்கு (GST - Goods and Services Tax) பதிவுசெய்திருக்கக்கூடும். அதன்படி, அவர்கள் வழங்கும் சேவைகளுக்கான Google GSTயை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கலாம்.

GST செலுத்தியதற்கான இன்வாய்ஸை நீங்கள் அனுப்ப வேண்டியிருந்தால் கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். தேவையான தகவல்கள் அனைத்தையும் இன்வாய்ஸில் சேர்த்திருப்பதையும் அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை ஒப்புக்கொள்வதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள். இல்லையெனில் இன்வாய்ஸை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பு: உங்கள் இன்வாய்ஸை PDF வடிவில்தான் அனுப்ப வேண்டும். வேறு வடிவங்களில் அனுப்பினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதற்குச் செல்க: தேவையான தகவல்கள் | மாதிரி இன்வாய்ஸ் | உங்கள் இன்வாய்ஸைச் சமர்ப்பித்தல்

தேவையான தகவல்கள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் உங்கள் இன்வாய்ஸில் இருக்க வேண்டும்:

  • "வரி விவரப்பட்டியல்" எனும் சொற்கள்
  • உங்கள் பெயரும் முகவரியும் (உங்கள் AdSense, AdMob அல்லது Ad Exchange கணக்கில் உள்ளபடி)
  • உங்கள் GST பதிவு எண்
  • இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி
  • இன்வாய்ஸ் அடையாள எண்
  • Google Asia Pacific நிறுவனத்தின் GST பதிவு எண்: 200817984R
  • Google Asia Pacific நிறுவனத்தின் முழுப் பெயரும் முகவரியும் பின்வருமாறு இருக்க வேண்டும்:
    Google Asia Pacific Pte. Ltd.
    Mapletree Business City II
    70 Pasir Panjang Road, #03-71
    Singapore 117371
    குறிப்பு: இந்த இருப்பிட முகவரிக்கு இன்வாய்ஸை அனுப்ப வேண்டாம். மாறாக, இதை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.
  • வழங்கப்படும் சேவைகளின் விளக்கம் (உதாரணம்: இணைய விளம்பரச் சேவைகள்) பின்வருபவை உட்பட:
    • பேமெண்ட் தேதி (பேமெண்ட் பெறப்பட்ட தேதி)
    • பேமெண்ட் எண் (உங்கள் பேமெண்ட் ரசீதில் கண்டறியலாம்)
  • GSTயைத் தவிர்த்து வரிப்பிடித்தத்திற்கு உட்பட்ட தொகை (பேமெண்ட் தொகை)
    கவனத்திற்கு: AdSense, AdMob, Ad Exchange ஆகியவற்றில் இருந்து பெறப்படும் நிகர வருமானம் மட்டுமே இந்தச் செயலாக்கத்திற்கு உட்பட்டதாகும்.
  • சிங்கப்பூரில் தற்போதைய GST விகிதம்
  • செலுத்த வேண்டிய GST தொகை (GST%ன்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான தொகை)
  • மொத்தத் தொகை (GST உட்பட)
  • செலுத்த வேண்டிய நிகரத் தொகை (செலுத்திய தொகைக்கு விதிக்கப்படும் GSTக்குச் சமமான தொகை)
    கவனத்திற்கு: வெளிநாட்டு நாணய மதிப்பில் குறிக்கப்பட்டுள்ள இன்வாய்ஸ்களைப் பொறுத்தவரை, வரி விவரப்பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள பின்வரும் தொகைகளை சிங்கப்பூர் டாலர்களாக நீங்கள் மாற்றுவதை உறுதிசெய்துகொள்ளவும்:
    • மொத்தத் தொகை (GST தவிர்த்து)
    • மொத்தத் தொகை (GST உட்பட)
    • செலுத்த வேண்டிய GST தொகை

மாதிரி இன்வாய்ஸ்

பின்வரும் தகவல்கள் உங்கள் வரி விவரப்பட்டியலில் இருக்க வேண்டும்:

  1. "வரி விவரப்பட்டியல்" எனும் சொற்கள்
  2. Google Asia Pacific நிறுவனத்தின் முழுப் பெயர், முகவரி, GST பதிவு எண் ஆகியவை.
  3. சரக்கு மற்றும் சேவைகளின் விளக்கம்
  4. GST விகிதம்
  5. உங்கள் பெயரும் முகவரியும்
  6. உங்கள் GST பதிவு எண்
  7. இன்வாய்ஸ் தேதி
  8. இன்வாய்ஸ் அடையாள எண்
  9. GSTயைத் தவிர்த்து செலுத்த வேண்டிய மொத்தத் தொகை (S$)
  10. மொத்த GST (S$)
  11. GST உட்பட செலுத்த வேண்டிய மொத்தத் தொகை (S$)

உங்கள் இன்வாய்ஸைச் சமர்ப்பித்தல்

தேவையான தகவல்கள் அனைத்தையும் சேர்த்த பிறகு இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் இன்வாய்ஸைச் சமர்ப்பியுங்கள். செயலாக்குவதற்கு இதிலுள்ள விதிமுறைகளை ஒப்புக்கொள்ளுங்கள்: சிங்கப்பூர் GST இன்வாய்ஸ் சமர்ப்பிப்புப் படிவம்.

GST செலுத்தியதற்கான உங்களின் முழுமையான இன்வாய்ஸைப் பெற்றதும் நாங்கள் அதை மதிப்பாய்வு செய்து செயலாக்குவோம். இன்வாய்ஸ் செயலாக்கத்திற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம்.

Googleளுடனான உங்கள் ஒப்பந்த விதிமுறைகளின்படி, நீங்கள் வழங்கிய சேவைகளுக்கு Google செலுத்தும் பேமெண்ட்டுகளே இறுதியானது. மேலும் இந்தப் பேமெண்ட்டுகள் பொருந்தக்கூடிய வரிகள் (ஏதேனும் இருந்தால்) அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

எனினும் உள்ளூர் அரசாங்க விதிகளின்படி நீங்கள் கூடுதல் வரி விவரங்களையோ வரிக்கான இன்வாய்ஸையோ அனுப்ப வேண்டுமெனில் கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம். படிவங்கள் அல்லது இன்வாய்ஸ்கள் அனைத்தையும் நாங்கள் செயலாக்குவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Google Asia Pacific Pte. Ltd.
Mapletree Business City II
70 Pasir Panjang Road, #03-71
Singapore 117371

200817984R என்ற எங்கள் GST எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளவும்.

வரி விவகாரங்கள் தொடர்பாக Google உங்களுக்கு ஆலோசனை வழங்காது. உள்நாட்டு வரிக் கடமைகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் உள்ளூர் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கிற்கான சரியான ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வுசெய்துள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள். வரி விவரங்களுக்காக உங்கள் ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டறிவது எப்படி என்பதை அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16234788019105632913
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false