அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தனியுரிமையும் பாதுகாப்பும்

பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த உத்திகள்

பயனர் உருவாக்கிய உள்ளடக்கமானது உலகில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் தளத்திற்கு வரலாம். உங்கள் தளமோ ஆப்ஸோ வளரும்போது ஒருவர் மதிப்பாய்வு செய்யக்கூடியதைவிட அதிகமான, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை நீங்கள் பெறக்கூடும்.

சில பரிந்துரைக்கப்பட்ட உத்திகளும் தீர்வுகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

உள்ளடக்கக் கொள்கையை வெளியிடுதல்: நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பயனர்களிடம் கூறுதல்
உள்ளடக்கக் கொள்கை ஒன்றை உருவாக்கி வெளியிடுங்கள். எவையெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன, எவையெல்லாம் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை இதன் மூலம் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் கொண்ட பக்கம் மூலம் வருமானம் ஈட்டத் தொடங்குவதற்கு முன்பு அதிலுள்ள சிக்கல்களைக் கவனமாக மதிப்பிடுதல்
உங்கள் தளத்திலோ ஆப்ஸிலோ பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் எங்கே தோன்ற வேண்டும் என்பதையும் பயனர் உருவாக்கிய தீங்கிழைக்கும் உள்ளடக்கம் மூலம் உங்கள் தளம் அல்லது ஆப்ஸின் நற்பெயருக்கு என்னென்ன சிக்கல்கள் வரக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் தோன்றுவதற்கு அனுமதிக்கும் முன்பு அந்தச் சிக்கல்களைக் குறைத்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைக் காட்டக்கூடிய சிறந்த பக்கங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்தல்
சிறிது நேரம் ஒதுக்கி பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கொண்ட சிறந்த பக்கங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுங்கள். நீங்கள் பார்க்கும் உள்ளடக்கம் எங்கள் அனைத்துத் திட்டக் கொள்கைகளுடனும் இணங்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தில் "கொள்கை மீறலைப் புகாரளி" என்ற இணைப்பைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் பயனர்களிடம் உதவி கோருதல்
பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தின் ஒவ்வொரு உறுப்பிற்கு அருகிலும் "கொடியிடு" அல்லது "கொள்கை மீறலைப் புகாரளி" என்ற இணைப்பைச் சேருங்கள். சிக்கலுக்குரிய உள்ளடக்கத்தைப் பற்றி உங்களிடம் புகாரளிக்க அவை பயனர்களை அனுமதிக்கும். இந்தப் புகார்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதையும் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
ரோபோக்களை அடையாளம் காணக்கூடிய கேப்ட்சாவை உள்ளடக்கச் சமர்ப்பிப்பில் பயன்படுத்துதல்
பயனர்கள் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கும் முன்பு கேப்ட்சாவைப் பயன்படுத்தி அவர்கள் ரோபோக்கள் இல்லை மனிதர்கள்தான் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதற்கான ஒரு பிரபலமான சிஸ்டம் Googleளின் reCAPTCHA ஆகும்.
வெவ்வேறு நிலைகளில் நம்பகமான பயனர்களை உருவாக்குதல்
தனது தளத்திலோ ஆப்ஸிலோ இதுவரை பார்த்தவை மற்றும் தேடியவை இல்லாத புதிய பயனர்களின் சமர்ப்பிப்புகள் தோன்றுவதை அனுமதிக்கும் முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்யுங்கள். பயனர்கள் தங்களின் நம்பகத்தன்மையை நிரூபித்ததும் அவர்களின் இடுகைகள் தோன்றுவதை அனுமதிப்பதன் மூலம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரியுங்கள்.

இதில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டால், நம்பகமற்ற பயனர்கள் சமர்ப்பிக்கக்கூடிய உள்ளடக்க வகைகளைக் குறையுங்கள். உதாரணமாக, படங்களையோ இணைப்புகளையோ அனுமதிக்காமல் வார்த்தைகளை மட்டும் அனுமதிப்பது.

பயனர் மதிப்பீட்டாளர்களை நியமித்தல்
உங்கள் தளமோ ஆப்ஸோ வளரும்போது அதனைச் சுற்றி ஒரு சமூகமே உருவாகிறது. இந்தச் சமூகம் உங்கள் தளத்தையோ ஆப்ஸையோ பயன்படுத்துவதால் அவை சிறப்பாக வளர வேண்டுமென விரும்புகிறது. உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் சமூக உரையாடலின் உயர்தரத்தைப் பராமரிக்க உங்களுக்கு உதவுவதற்கும் பயனர் மதிப்பீட்டாளர்களை நியமியுங்கள்.

உங்கள் தளத்திலோ ஆப்ஸிலோ இருக்கும் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய, ரோபோ அல்லாத உள்ளடக்க மதிப்பாய்வாளர்களையோ மதிப்பீட்டாளர்களையோ நியமிப்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

இடுகை மதிப்பாய்வு செய்யப்படும் வரை விளம்பரச் சேவையை முடக்குதல்
ஓர் இடுகை மதிப்பாய்வு செய்யப்படாமல் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்தப் பக்கத்தில் தோன்ற அதற்கு அனுமதி உண்டு. ஆனால் அந்தப் பக்கத்தில் விளம்பரச் சேவை முடக்கப்படும். எங்கள் திட்டக் கொள்கைகளுடன் அந்த இடுகை இணங்குகிறது என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே விளம்பரச் சேவையை இயக்குங்கள்.
தானியங்கு உள்ளடக்க வடிகட்டுதல் சிஸ்டமை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல்
பெரும்பாலும் உங்கள் தளமோ ஆப்ஸோ அதிகமாகப் பெறும் உள்ளடக்க மீறல்களின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளும்போது தானாக மீறல்களைக் கண்டறிந்து அந்த உள்ளடக்கத்தில் விளம்பரச் சேவையை முடக்க, ஓர் உள்ளடக்க வடிகட்டுதல் சிஸ்டமை நீங்கள் உருவாக்கலாம். உள்ளடக்க வடிகட்டுதல் பற்றி மேலும் அறிக.
கருத்து தெரிவிக்க மூன்றாம் தரப்புக் கருவிளையோ செருகுநிரல்களையோ பயன்படுத்துதல்
சொந்தமாகக் கருத்து தெரிவிக்கும் அமைப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, உங்களுக்காகக் கருத்து தெரிவிப்பதை இயக்கும் பிரபலமான மூன்றாம் தரப்புக் கருவிகளையோ செருகுநிரல்களையோ நீங்கள் பயன்படுத்தலாம். இந்த சிஸ்டங்களில் பெரும்பாலானவை வலிமையான மாற்றத்தையும் உள்ளமைந்த உள்ளடக்க வடிகட்டுதல் முறையையும் கொண்டுள்ளன.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6051794101211922038
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false