அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பிராண்டு பாதுகாப்பு

AdSenseஸில் விளம்பரதாரர் URLகளைத் தடுத்தல்

உங்கள் பக்கங்களில் குறிப்பிட்ட வலைதளங்களிலிருந்து விளம்பரங்கள் காட்டப்படுவதைத் தடுக்கும் #blockadvertiserURLs #blockingcontrols

குறிப்பிட்ட URLகளுடன் இணைக்கும் (அல்லது கிளிக் செய்வதன் மூலம் அவற்றுடன் இணைக்கும்) விளம்பரங்களை நீங்கள் தடுக்கலாம். உங்கள் வலைதளத்தில் குறிப்பிட்ட விளம்பரங்களைக் காட்ட விரும்பாதபோது இது உதவியாக இருக்கும்.

உதாரணமாக, உங்கள் போட்டியாளரின் www.example.com வலைதளத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து விளம்பரங்களையும் நீங்கள் தடுக்க விரும்பலாம். www.example.com போன்ற முதல்நிலை டொமைனைத் தடுப்பதன் மூலம் அந்த டொமைனுக்குக் கீழுள்ள துணை டைரக்டரிகளுடன் இணைக்கப்படும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்க முடியும்.

இந்தக் கட்டுரையில்:

உதவிக்குறிப்பு: 500 URLகள் வரை நீங்கள் தடுக்கலாம்.

வலைதளத்தில் விளம்பரதாரர் URLகளைத் தடுத்தல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பிராண்டு பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் தயாரிப்பைக் கிளிக் செய்யவும். உதாரணமாக, உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தடுக்கும் கட்டுப்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தடுக்க விரும்பும் வலைதளத்தின் பெயரை டைப் செய்து, தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. "வலைதளங்களைத் தேடுங்கள்" உரையாடலில், வலைதளத்தின் பெயரைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: உங்கள் வலைதளம் அதில் இல்லை எனில் வலைதள நிர்வாகம் அம்சத்தைப் பயன்படுத்தி அதைச் சேர்க்கலாம்.
  7. விளம்பரதாரர் URLகளை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. “விளம்பரதாரர் URLகள்” பக்கத்தில் நீங்கள் தடுக்க விரும்பும் URLகளை உள்ளிடவும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட URLகளைக் காற்புள்ளிகளாலோ புதிய வரிகளினாலோ பிரித்துக் காட்டலாம்.

  9. URLகளைத் தடு என்பதைக் கிளிக் செய்யவும்.

    URLகள் தடுக்கப்பட்ட பின்பு 24 மணிநேரத்திற்குள் உங்கள் பக்கங்களில் விளம்பரங்கள் காட்டப்படுவது நிறுத்தப்படும்.

அனைத்து வலைதளங்களிலும் விளம்பரதாரர் URLகளைத் தடுத்தல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பிராண்டு பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் தயாரிப்பைக் கிளிக் செய்யவும். உதாரணமாக, உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தடுக்கும் கட்டுப்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விளம்பரதாரர் URLகளை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. “விளம்பரதாரர் URLகள்” பக்கத்தில் நீங்கள் தடுக்க விரும்பும் URLகளை உள்ளிடவும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட URLகளைக் காற்புள்ளிகளாலோ புதிய வரிகளினாலோ பிரித்துக் காட்டலாம்.

  7. URLகளைத் தடு என்பதைக் கிளிக் செய்யவும்.

    URLகள் தடுக்கப்பட்ட பின்பு 24 மணிநேரத்திற்குள் உங்கள் பக்கங்களில் விளம்பரங்கள் காட்டப்படுவது நிறுத்தப்படும்.

கவனத்திற்கு: தடுக்க விரும்பும் URLகளைக் கண்டறிய, உங்கள் சொந்த விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம்—இவ்வாறு செய்வது திட்டக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்க.

URLகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்

செயல் / பாகம் வழிகாட்டுதல்
நீங்கள் தடுக்க விரும்பும் விளம்பரப்படுத்தல் URLகளை உள்ளிடும்போது
  • ஒன்றுக்கும் மேற்பட்ட URLகளைக் காற்புள்ளிகளாலோ புதிய வரிகளினாலோ பிரித்துக் காட்டலாம்.
  • அதிகபட்சமாக 500 URLகள் வரை நீங்கள் தடுக்கலாம்.
URL தடங்களுக்கு
  • example.com என உள்ளிடுவது example.com, example.com/sub ஆகியவற்றுடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்கும்.
  • example.com/sub என உள்ளிடுவது example.com/products உடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்காது.
வினவல் தடங்களுக்கு
  • example.com/1?2=3 என உள்ளிடுவது example.com/1?4=5 உடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்கும்
துணை டொமைன்களுக்கு
  • example.com என உள்ளிடுவது www.example.com, forums.example.com ஆகியவற்றுடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்கும்.
  • www.example.com என உள்ளிடுவது www.example.com, forums.example.com, example.com ஆகியவற்றுடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்கும்.
  • forums.example.com என உள்ளிடுவது forums.example.com உடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்கும். ஆனால் example.com, www.example.com, admin.example.com ஆகியவற்றுடன் இணைக்கும் விளம்பரங்களைத் தடுக்காது.
ஆப்ஸுக்கு Google Play ஸ்டோருக்காகவும் iTunesகளுக்காகவும் URLகள் மறுவடிவமைக்கப்படும். எனவே ஆப்ஸை உங்கள் உடைமையில் விளம்பரப்படுத்துவதைத் தடுக்க, அதன் ஒரு URL வடிவத்தை மட்டுமே சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, itunes.apple.com/app/id12345, itunes.apple.com/us/app/id12345 ஆகியவை ஒரே ஆப்ஸுக்கானவை எனில் ஆப்ஸை முழுவதுமாகத் தடுக்க, இவற்றில் ஏதேனும் ஒரு URLலை மட்டுமே உள்ளிட வேண்டும்.
YouTube வீடியோக்களுக்கு
  • ஒரு வீடியோவைத் தடுக்க அதன் URLலை உள்ளிடவும்: youtube.com/watch?v=videoID
  • அனைத்து YouTube வீடியோக்களையும் தடுக்க இந்த URLலை உள்ளிடவும்: youtube.com/watch
  • YouTube சேனல் முழுவதையும் தடுக்க, இந்த watch டொமைனை உள்ளிடவும்: youtube.com/channel/channelID
முதல்நிலை டொமைனும் தேசக் குறியீடு முதல்நிலை டொமைனும் சேர்ந்து வரும் URLகளுக்கு (google.com.br போன்றவை) URLலின் பகுதியாகத் தேசக் குறியீடு முதல்நிலை டொமைனை வெளிப்படையாகச் சேர்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11881566340394214588
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false