அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர இலக்கிடல்

ஆர்வம் மற்றும் டெமோகிராஃபிக்ஸ் சார்ந்த வகைகளை Google புரிந்துகொள்ளும் விதம்

YouTube, எங்கள் கூட்டாளர் இணையதளங்கள் போன்ற Google வலைதளங்களைப் பயனர்கள் உலாவுவதால் ஒரு பயனர் பார்க்கும் உள்ளடக்க வகைகளைப் புரிந்துகொள்ள விளம்பரக் குக்கீயை அவரின் உலாவியில் Google சேமிக்கும். பயனர்களின் ஆர்வங்கள் மற்றும் டெமோகிராஃபிக்ஸைப் புரிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் அவர்களை ஈர்க்கக்கூடிய விளம்பரங்களைக் காட்ட இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு பயனர் AdSense விளம்பரங்களைக் கொண்ட விளையாட்டு தொடர்பான பல இணையதளங்களை உலாவினாலோ விளையாட்டு தொடர்பான வீடியோக்களை YouTubeல் பார்த்தாலோ அவரது குக்கீ அல்லது Google கணக்குடன் விளையாட்டு ஆர்வத்தைத் தொடர்புபடுத்தி அவருக்கு விளையாட்டு தொடர்பான பல விளம்பரங்களை Google காட்டக்கூடும். அதேபோல், வலைதளங்களின் பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தால் பயனரின் குக்கீ அல்லது அவரது Google கணக்குடன் "பெண்" டெமோகிராஃபிக்ஸ் வகை தொடர்புபடுத்தப்படக்கூடும். Google கணக்குகளில் இருந்தும் டெமோகிராஃபிக்ஸை நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

சில சமயங்களில், பிரத்தியேகமான விளம்பரங்களுக்குச் சேவைக் கட்டணத்தை Google விதிக்கக்கூடும். இந்தச் சமயங்களில், ஏலத்திற்கு முன் விளம்பரதாரரின் அதிகபட்ச ஏலத் தொகை குறைக்கப்பட்டு இறுதி ஏலத் தொகையில் கட்டணம் சேர்க்கப்படும்.

தங்களின் தகவல்களையும் டெமோகிராஃபிக்ஸையும் Google எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பயனர்கள் அறிந்துகொள்ளலாம், விளம்பர அமைப்புகளில் விளம்பரப் பிரத்தியேகமாக்கலில் இருந்து விலகலாம்.

கூட்டாளர் வலைதளங்களிலிருந்து நாங்கள் சேகரிக்கும் பயனர் தகவல்கள் Googleளின் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கப் பயன்படுத்தப்படுகின்றன. இனம், மதம், பாலியல் நாட்டம், உடல்நலம், பாதுகாக்கவேண்டிய நிதி வகைகள் போன்ற பாதுகாக்கவேண்டிய தகவல் அல்லது ஆர்வங்களின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டமாட்டோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5648869070658698750
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false