அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

Protected Audience API மற்றும் AdSense

எங்கள் பரிசோதனையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 2022ல் Protected Audience API (FLEDGE என முன்பு அறியப்பட்டது) மூலம் விளம்பரங்களை AdSense ரென்டரிங் செய்யத் தொடங்கியது. குறைந்த AdSense டிராஃபிக் சதவீதத்தில்தான் தற்போது Protected Audience ஏலங்களை இயக்குகிறோம்.

Protected Audience API என்றால் என்ன?

தனியுரிமை சாண்ட்பாக்ஸ் என்பது ஆன்லைனில் பொதுமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் இணையத் தொழில்நுட்பங்களை வழங்குகிறது. மேலும் இது நிறுவனங்களுக்கும் டெவெலப்பர்களுக்கும் சிறந்த டிஜிட்டல் பிசினஸ்களை உருவாக்குவதற்கான கருவிகளையும் அளிக்கிறது. இவற்றின் மூலம் இணையத்தை அனைவரும் அணுகக்கூடியதாக வைத்திருக்கிறது.

Protected Audience API (FLEDGE என முன்பு அறியப்பட்டது) என்பது Chromeமில் பரிசோதிக்கப்பட்டு வருகின்ற தனியுரிமை சாண்ட்பாக்ஸ் முன்மொழிவுகளில் ஒன்றாகும். ரீமார்க்கெட்டிங், பிரத்தியேகமான பார்வையாளர் தீர்வுகள் ஆகியவற்றுக்கு உதவ புதிய தனியுரிமைப் பாதுகாப்பு வழிகளை Protected Audience API வழங்குகிறது. இதனால் விளம்பரதாரர்கள் வலைதளத்திற்குத் திரும்பிவரும் பார்வையாளர்களுடன் மீண்டும் ஈடுபாட்டை ஏற்படுத்த முடியும்.

விளம்பரங்களைக் காட்ட, Protected Audience API மூலம் உலாவி விளம்பரதாரர் வரையறுத்த பயனர் ஆர்வக் குழுக்களைச் சேமிப்பதோடு சாதனத்தில் ஏலங்களை ஹோஸ்ட் செய்கிறது. இன்று ஆர்வக் குழுக்கள் எப்படிச் செயல்படுகின்றனவோ அதுபோலவே, வெவ்வேறு தயாரிப்பு வகைகளைக் காட்சிப்படுத்துதல், கன்வெர்ஷனாகாத வருகையாளர்களிடம் வேறு வகையில் முயலுதல், ஷாப்பிங் கார்ட்டில் உள்ளவற்றை வாங்காமல் விட்டுவிட்ட வருகையாளர்களை மீண்டும் ஈடுபட வைத்தல் போன்றவற்றைச் செய்ய மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கு Protected Audience API உதவும். எனினும் இன்று இருப்பதைப் போல, நிறுவனங்களால் மூன்றாம் தரப்புக் குக்கீகள் மூலம் இணையதளம் முழுவதும் பயனர்களைத் தனித்தனியாகக் கண்காணிக்க முடியாது.

Protected Audience API மூலம் AdSense எப்படி விளம்பரங்களை வழங்கும்?

ஒரு பயனர் விளம்பரதாரரின் இணையதளத்திற்கு வருகை தரும்போது, குறிப்பிட்ட ஓர் ஆர்வக் குழுவுடன் அந்தப் பயனரை இணைக்குமாறு இணையதளம் (அல்லது இணையதளத்தில் உட்பொதிக்கப்பட்ட விளம்பரத் தொழில்நுட்ப வழங்குநர்) பயனரின் உலாவியிடம் கேட்கக்கூடும். ஒவ்வொரு ஆர்வக் குழுவிலும் பயனருக்குக் காட்டப்படக்கூடிய சாத்தியமான விளம்பரங்கள் குறித்த தகவல்களை (விளம்பரதாரர்களிடமிருந்து பெறும் தகவல்கள் உட்பட) பயனரின் உலாவி அவ்வப்போது பெறும்.

பிறகு, ஒரு வெளியீட்டாளர் பயனருக்கு விளம்பரத்தைக் காட்ட விரும்பும்போது AdSenseஸுக்கு ஒரு விளம்பரக் கோரிக்கை அனுப்பப்படும். இந்தக் கோரிக்கையில் Protected Audience API ஆர்வக் குழுக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இருக்காது. மூன்றாம் தரப்புக் குக்கீகள் நிறுத்தப்பட்ட பிறகு, கோரிக்கையில் மூன்றாம் தரப்புக் குக்கீ தரவு எதுவும் இருக்காது.

அதன் பிறகு, ஆர்வக் குழுவில் இல்லாதோருக்கான சிறந்த விளம்பரத்தைத் தேர்ந்தெடுக்க சேவையகம் தரப்பில் ஒரு ஏலத்தை AdSense இயக்கும். சேவையகம் தரப்பில் நடத்தப்படும் ஏலத்தின்போது வழக்கம்போல் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சேவையகம் தரப்பில் நடத்தப்படும் ஏலத்தைத் தொடர்ந்து, ஆர்வக் குழுவில் இல்லாதோருக்கான சிறந்த விளம்பரத்தையும் சாதனத்தில் ஏலத்திற்குப் பயன்படுத்த வேண்டிய வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களையும் உலாவிக்கு AdSense அனுப்பும்.

இறுதியாக, உலாவி ஆர்வக் குழுவில் இருப்பவர்களுக்கான அனைத்து விளம்பரங்களுக்கும் ஆர்வக் குழுவில் இல்லாதோருக்கான சிறந்த விளம்பரத்திற்கும் இடையே சாதனத்தில் ஏலத்தை இயக்கும். வெற்றிபெறும் விளம்பரம் பிறகு ரென்டரிங் செய்யப்படும்.

Protected Audience APIயில் இருந்து விலகுதல்

Chromeமின் Protected Audience APIயில் இருந்து விலக விரும்பினால், Chromeமின் அனுமதிகள் கொள்கையைப் பயன்படுத்துங்கள்:

  • ஆரம்பக்கட்ட பரிசோதனையின்போது HTTP பதில் ஹெடரில் Permissions-Policy:run-ad-auction=() என அமையுங்கள். இது உங்கள் தளத்தில் யாரும் (AdSense உட்பட) Protected Audience API ஏலங்களை இயக்காதபடி தடுக்கும்.
  • விளம்பரதாரர்கள் உங்கள் வலைதளத்திலுள்ள ஆர்வக் குழுக்களில் பயனர்களைச் சேர்ப்பதைத் தடுக்க Permissions-Policy:join-ad-interest-group=() என்பதையும் நீங்கள் அமைக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3015685533345899243
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false