அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

Topics மற்றும் AdSense

Topics என்பது என்ன?

ஆன்லைனில் மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் இணையத் தொழில்நுட்பங்களைத் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் வழங்குகிறது. அத்துடன், சிறந்த டிஜிட்டல் பிசினஸ்களை நிறுவனங்களும் டெவெலப்பர்களும் உருவாக்குவதற்கான கருவிகளையும் இது வழங்குகிறது. இதன்மூலம் இணையத்தை அனைவரும் பயன்படுத்தலாம் அணுகலாம்.

Topics என்பது Chromeமில் தற்போது பரிசோதனை செய்யப்படும் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் முன்மொழிவுகளில் ஒன்றாகும். மூன்றாம் தரப்புக் குக்கீகளை உலாவிகள் அகற்றுவதால், தொடர்புடைய விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள விளம்பரதாரர்களுக்குப் புதிய வழிகள் தேவைப்படுகின்றன. இதைச் சிறப்பாகச் செய்வதற்கான புதிய, தனியுரிமையைப் பாதுகாக்கும் வழியை Topics பரிந்துரைக்கிறது.

Topics API மூலம், காலம் என்றழைக்கப்படும் (தற்போது 'ஒரு வாரம்' எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது) குறிப்பிட்ட காலத்தின்போது பயனர்களின் உலாவல் செயல்பாட்டின் அடிப்படையிலான தலைப்புகளை (உதாரணமாக "நாட்டுப்புற இசை," "மேக்-அப் & அழகுப் பொருட்கள்," "சைவ உணவுவகை") பயனரின் உலாவி பரிந்துரைக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் தலைப்பானது அந்தக் காலகட்டத்தின்போது பயனர் அதிகம் பார்த்த முதல் ஐந்து தலைப்புகளில் இருந்து ரேண்டமாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

Topics மூலம் விளம்பரங்களை AdSense இயக்கும் விதம்

கிடைக்கும்பட்சத்தில் Ad Manager/AdSense குறிச்சொற்கள் Topics APIயில் இருந்து தலைப்புகளை மீட்டெடுத்து ஏலக் கோரிக்கைகளில் அவற்றை அனுப்பும். Topics API பரிசோதனையில் பங்கேற்க வெளியீட்டாளர்கள் வெளிப்படையாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. விளம்பரக் கோரிக்கைகளின் ஒரு சிறிய சதவீதத்தை அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் பரிசோதனை முறையில் வழங்க AdSense திட்டமிடுகிறது. விரும்பினால், Topicsஸில் இருந்து விலகுவதற்கு வெளியீட்டாளர்கள் தேர்வுசெய்யலாம்.

டிராஃபிக்கின் ஒரு சிறிய சதவீதத்தினருக்கு விளம்பரக் கோரிக்கைகளில் Topicsஸின் தொடக்கப் பரிசோதனையை உலகளவில் AdSense தொடங்கும். வடிவமைக்கப்பட்டுள்ளபடி எங்கள் சிஸ்டங்கள் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க இந்தத் தொடக்கப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் வெளியீட்டாளர் வருவாயிலோ செயல்திறனிலோ மாற்றம் ஏற்படாது.

தடுக்கும் கட்டுப்பாடுகளும் Topicsஸும்

AdSense தயாரிப்புத் திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன் எங்களுக்கு உதவக்கூடிய கட்டுப்பாட்டு வகைகள் பற்றிய கருத்தைப் பகிருமாறு வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கிறோம். விரும்பினால், Topicsஸில் இருந்து விலகுவதற்கு வெளியீட்டாளர்கள் தேர்வுசெய்யலாம்.

Topicsஸில் இருந்து விலகுதல்

Chromeமின் Topicsஸில் இருந்து விலக விரும்பினால், Chromeமின் அனுமதிகள் கொள்கையைப் பயன்படுத்துங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4609922239016787599
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false