அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Google Analyticsஸைப் பயன்படுத்தி டிராஃபிக்கைக் கண்காணித்தல்

தரவுப் புள்ளிவிவரங்கள் மூலம் டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்தல்

Google Analytics என்பது உங்கள் வலைதளம்/ஆப்ஸின் டிராஃபிக் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வழங்கும் வலை ஆய்வுகள் தீர்வாகும். பார்வையாளர் தரவைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைத் திட்டமிடலாம். அத்துடன் உங்கள் பிளாட்ஃபார்மின் தோற்றம் & உணர்வு, வழிசெலுத்தல், பயனர் மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கலாம்.

இந்தக் கட்டுரையில்:

Analytics புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்தல்

  • டிராஃபிக்கைக் கண்காணித்து வலைதளத்தின் இயல்பான டிராஃபிக் பேட்டர்ன்களை அறிந்துகொள்ளவும்.
  • குறிப்பிட்ட விளம்பர யூனிட்கள், CTRகள், பக்கப்பார்வைகள் ஆகியவற்றுக்கான AdSense அறிக்கைகளை விரிவாக ஆய்வுசெய்யவும்.
  • Analytics மூலம் பெறப்படும் டிராஃபிக் அறிக்கைகளை எளிதாகப் புரிந்துகொள்ளும்படி பகுதிகளாகவோ சேனல்களாகவோ பிரிக்கவும்.
  • மேலே பட்டியலிடப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய டிராஃபிக் மூலங்களையோ கிளிக்குகளையோ கண்டறியவும்.
  • உங்கள் விளம்பரச் செயலாக்கம் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • இன்னும் ஏதாவது கேள்வி உள்ளதா? அவ்வாறு இருந்தால் AdSense உதவி மன்றத்திடம் கலந்துரையாடவும்.
  • முடிவாக, செல்லாத செயல்பாடு ஏதாவது இருந்தால் AdSense குழுவினரிடம் புகாரளிக்கவும்.

Analytics புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி வருவாயை மேம்படுத்துதல்

Analyticsஸுடன் தொடர்புடைய சேவைகளை உங்கள் AdSense வருவாய் அறிக்கையுடன் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தலாம். உங்கள் வலைதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என விரிவாகவும் ஆழமாகவும் பகுப்பாய்வு செய்ய இது உதவும்.

  1. AdSense கணக்கை Analyticsஸுடன் இணைக்கவும்.
  2. Analyticsஸில், "செயல்பாடு" அறிக்கைகள் என்பதற்குக் கீழுள்ள "வெளியீட்டாளர்கள்" அறிக்கைப் பிரிவுக்குச் செல்லவும்.
  3. "வெளியீட்டாளர்கள்" அறிக்கைப் பிரிவில் பின்வரும் இரண்டாம் நிலை ஃபில்டர்களைத் தேர்ந்தெடுக்கவும்: பயனர் டெமோகிராஃபிக்ஸ், நாடு, டிராஃபிக் மூலம், உலாவியின் மொழி, திரையின் தெளிவுத்திறன் போன்றவை.
  4. வெவ்வேறு பயனர் டெமோகிராஃபிக்ஸை (எ.கா. பாலினம், வயது, நாடு) சார்ந்த வருகையாளர்கள் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்ற விவரங்களைப் பார்க்கலாம்.
  5. ஒரு குறிப்பிட்ட URLலில் பயனர் மூலம் கிடைக்கும் வருவாயை வெவ்வேறு நேர இடைவெளிகளில் பார்க்கலாம் (எ.கா. மணிநேரம்).

மேற்கண்டவற்றிலிருந்து கிடைக்கும் அனைத்துத் தரவையும் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட டிராஃபிக் மூலங்கள், பக்கங்கள், பயனர் குழுக்கள் ஆகியவற்றைப் பல்வேறு பரிமாணங்களில் பகுப்பாய்வு செய்யலாம்.

சரியான டிராஃபிக்கைப் பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • விளம்பர டிராஃபிக்கையும் வலைதளத்தின் பயனர்களையும் புரிந்துகொள்ள Analyticsஸைப் பயன்படுத்துங்கள். URL சேனல்கள், பிரத்தியேகச் சேனல்கள், AdSenseஸில் உள்ள விளம்பர யூனிட்களின் அறிக்கைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி டிராஃபிக் விவரங்களைப் பார்க்கலாம்.
  • டெஸ்க்டாப், மொபைல் ஆகிய இரண்டிலும், ஒவ்வொரு வலைதளத்திற்கும் வெவ்வேறு விளம்பர யூனிட்களை உருவாக்குங்கள். தனித்துவமான விளம்பர யூனிட் ஐடிகளைக் கொண்டு வெவ்வேறு விளம்பரக் காட்சிப்படுத்தும் இடங்களைத் தனித்தனியாகப் பிரித்திடுங்கள்.
  • இவற்றின் பாட் செயல்பாடுகளை அடையாளம் காணுங்கள்: சுயமாக அடையாளம் காணும் பாட்கள், ஸ்பைடர்கள், தேடல் இன்ஜின் கிராலர்கள்.
  • டிராஃபிக் மூலங்கள் குறித்தும் பயனர்கள் குறித்தும் புரிந்துகொள்ளவும் தவறான டிராஃபிக்கைத் தடுக்கவும் டிராஃபிக்கைப் பகுதிகளாகப் பிரித்துப் பாருங்கள்.
  • சந்தேகத்திற்குரிய டிராஃபிக்கைத் தவிர்க்க, நம்பகமான டிராஃபிக் கூட்டாளர்களுடன் பணியாற்றுங்கள்.
  • கட்டண டிராஃபிக் சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு முன்பாக அவற்றின் தரத்தைச் சரிபார்ப்பது அவசியம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஏதேனும் டிராஃபிக் சேவை வழங்குநருடன் கலந்துரையாடும் உதவியைப் பெற, டிராஃபிக் சேவை வழங்குநர் சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்துங்கள்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15971854087192797584
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false