அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

பிரத்தியேகச் சேனல்களின் மூலம் விளம்பரச் செயல்திறனைக் கண்காணித்தல்

பிரத்தியேகச் சேனல்களின் மூலம் விளம்பர யூனிட்களின் செயல்திறனை நீங்கள் கண்காணிக்கலாம். உங்களின் சொந்தப் பிரத்தியேகச் சேனல்களை வடிவமைத்து உங்களுக்கேற்ற வகையில் அவற்றின் மூலம் விளம்பர யூனிட்களின் செயல்திறனைப் பார்க்க முடியும். உங்களின் AdSense தயாரிப்புகள் ஒவ்வொன்றுக்கும் 500 பிரத்தியேகச் சேனல்கள் வரை உருவாக்க முடியும்.

பிரத்தியேகச் சேனல்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

விளம்பர யூனிட்களின் குழுவைக் கண்காணித்தல்

பிரத்தியேகச் சேனல்களின் மூலம் விளம்பர யூனிட்களைக் கண்காணிக்க இவை போன்ற குழுக்களாகப் பிரிக்கலாம்:

  • விளம்பர அளவுகள்
  • பக்கத்தில் விளம்பரங்களை வைக்கும் இடம் - இடதுபுறம் vs வலதுபுறம், உள்ளடக்கத்தில் உட்பொதித்தவை vs அதன் மேலுள்ளவை
  • பக்கத் தலைப்புகள் - விளையாட்டுக் கட்டுரைகள் vs பொழுதுபோக்குக் கட்டுரைகள்

பிரத்தியேகச் சேனல் ஐடி மூலம் விளம்பர யூனிட்களைக் கண்காணித்தல்

உங்கள் விளம்பர யூனிட் குறியீட்டில் பிரத்தியேகச் சேனல் ஐடிகளைச் சேர்ப்பதன் மூலமும் விளம்பர யூனிட்களைக் கண்காணிக்கலாம். உங்கள் வலைதளத்தில் உள்நுழைந்த பயனர்களிடமிருந்தும் உள்நுழையாத பயனர்களிடமிருந்தும் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பதை நீங்கள் கண்காணிக்க விரும்புவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இரண்டு பிரத்தியேகச் சேனல்களை உருவாக்கி, உங்கள் வலைதளத்தில் உள்நுழைந்த பயனர்களுக்குக் காட்டும் விளம்பர யூனிட்களில் முதலாவது பிரத்தியேகச் சேனலின் ஐடியையும் அதில் உள்நுழையாத பயனர்களுக்குக் காட்டும் விளம்பர யூனிட்களில் இரண்டாவது பிரத்தியேகச் சேனலின் ஐடியையும் சேர்க்கவும். பிரத்தியேகச் சேனல்கள் அறிக்கையில் இந்த இரண்டு பிரத்தியேகச் சேனல்களின் செயல்திறன்களையும் இப்போது நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உதாரணம்

பிரத்தியேகச் சேனல் ஐடியாக 1234 சேர்க்கப்பட்ட விளம்பர யூனிட் குறியீட்டின் உதாரணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1234567890123456" crossorigin="anonymous"></script>
<!-- signed_in_ad_unit -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-1234567890123456"
     data-ad-slot="0123456789"
     data-ad-format="auto"
     data-ad-channel="1234"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

பிரத்தியேகச் சேனலை உருவாக்குதல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகச் சேனல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேனலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் AdSense தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணம்: "உள்ளடக்கம்", "தேடல்" போன்றவை.
  7. பிறகு பார்க்கும்போது அடையாளம் தெரியும் விதத்தில் உங்கள் பிரத்தியேகச் சேனலுக்குப் பொருத்தமான பெயர் ஒன்றை வழங்கவும். உதாரணமாக, car_pages அல்லது large_squares போன்ற பெயர்களை வழங்கலாம்.
  8. இந்தச் சேனல் மூலம் நீங்கள் கண்காணிக்க விரும்பும் விளம்பர யூனிட்களைத் தேர்ந்தெடுக்கவும். கவனத்திற்கு: உள்ளடக்கத்திற்கான AdSense, தேடலுக்கான AdSense ஆகிய தயாரிப்புகளில் மட்டுமே இந்த விருப்பம் ஆதரிக்கப்படுகிறது.
  9. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

    உங்கள் பிரத்தியேகச் சேனல் இப்போது செயல்பாட்டில் உள்ளது.

பிரத்தியேகச் சேனல்களை எப்படி அகற்றுவது, முடக்குவது மற்றும் செயல்படுத்துவது என அறிக.

பிரத்தியேகச் சேனலுக்கான அறிக்கையைப் பார்த்தல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகச் சேனல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. டேபிளில் உங்கள் பிரத்தியேகச் சேனலுக்கு அடுத்துள்ள ’அறிக்கையைக் காட்டு’ View report என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. (விரும்பினால்) சேனல் தரவைப் பிரித்துப் பார்ப்பதற்கான பரிமாணங்களையும் சேர்க்க முடியும்.
    உதவிக்குறிப்பு: நாடுகள் பரிமாணத்துடனும் பிரத்தியேகச் சேனல்களுக்கான அறிக்கையை ஒன்றிணைத்துக் கொள்ளலாம்.
கவனத்திற்கு: பிரத்தியேகச் சேனல்களுக்கான அறிக்கைகளைப் பார்க்கும்போது பல்வேறு சேனல்களில் கண்காணிக்கப்பட்ட சில இம்ப்ரெஷன்களையும் கிளிக்குகளையும் நீங்கள் பார்க்கக்கூடும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரத்தியேகச் சேனல்களில் ஒரு விளம்பர யூனிட்டைச் சேர்த்தாலோ ஒரு விளம்பர யூனிட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரத்தியேகச் சேனல்களை ஒதுக்கினாலோ அந்தப் பிரத்தியேகச் சேனல்கள் ஒவ்வொன்றுக்கும் அந்த விளம்பர யூனிட்டிலிருந்து கிளிக்குகளும் இம்ப்ரெஷன்களும் பதிவுசெய்யப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2316882858279292506
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false