Google தளங்களையும் ஆப்ஸையும் சேவைகளையும் பயன்படுத்தும்போது நீங்கள் மேற்கொள்ளும் சில செயல்பாடுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இந்தச் செயல்பாடுகளை ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் கண்டறிந்து நீக்கலாம், பெரும்பாலான செயல்பாடுகள் சேமிக்கப்படுவதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம்.
'எனது செயல்பாடுகள்' பற்றி
நீங்கள் தேடியவை, பார்த்த இணையதளங்கள், பார்த்த வீடியோக்கள் உள்ளிட்ட உங்கள் செயல்பாடுகளை 'எனது செயல்பாடுகள்' என்ற ஒரே பக்கத்தில் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.
செயல்பாடுகளைக் கண்டறிதல் மற்றும் பார்த்தல்
உங்கள் Google செயல்பாட்டுத் தரவு தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் மிகவும் சமீபத்தியவை முதலில் காட்டப்படும்.
செயல்பாடுகளைக் கண்டறிதல்
- உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
- இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில் தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள எனது செயல்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- செயல்பாடுகளை அணுக:
- நாள் மற்றும் நேரத்தின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உங்கள் செயல்பாடுகளை பிரவுஸ் செய்யவும்.
- குறிப்பிட்ட செயல்பாட்டைப் பார்க்க, மேற்பகுதியில் உள்ள தேடல் பட்டியையும் ஃபில்டர்களையும் பயன்படுத்தவும்.
உங்கள் செயல்பாடுகளை நிர்வகியுங்கள்
செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களைப் பெறுதல்
ஒரு செயல்பாட்டைப் பற்றிய விவரங்களைப் பார்க்க: செயல்பாட்டின் கீழ் உள்ள விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்தச் செயல்பாட்டின் தேதி மற்றும் நேரமும் அது சேமிக்கப்பட்டதற்கான காரணமும் உங்களுக்குக் காட்டப்படும். இருப்பிடம், சாதனம், ஆப்ஸ் ஆகியவை குறித்த தகவல்களையும் நீங்கள் கண்டறியக்கூடும்.செயல்பாடுகளை நீக்குதல்
'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உள்ள முந்தைய தேடல்கள், இதுவரை இணையத்தில் பார்த்தவை மற்றும் பிற செயல்பாடுகளை எப்படி நீக்குவது எனத் தெரிந்துகொள்ளுங்கள். பழைய செயல்பாடுகளைத் தானாக நீக்கும்படியும் நீங்கள் அமைக்கலாம்.
'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உள்ள உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் கண்டறிய கூடுதல் படியை அமைத்தல்
பலர் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தனியுரிமையை வலுப்படுத்த, 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்ப்பதற்குக் கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படும் வகையில் நீங்கள் அமைக்கலாம்.
- activity.google.com தளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே உள்ள 'எனது செயல்பாடுகள்' சரிபார்ப்பை நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூடுதல் சரிபார்ப்பை இயக்கவும் அல்லது முடக்கவும்.
செயல்பாட்டை முடக்குதல் மற்றும் நீக்குதல்
‘எனது செயல்பாடுகள்’ பக்கத்தில் உள்ள பெரும்பாலான தகவல்களையும் தரவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
- உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
- இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே, நீங்கள் சேமிக்க விரும்பாத செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ கிளிக் செய்யவும்.
- நீங்கள் சேமிக்க விரும்பாத அமைப்புக்குக் கீழே உள்ள முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அமைப்பை முடக்குவதற்கான வழிமுறையைப் பின்பற்றவும் அல்லது முடக்கு என்பதையோ முடக்கி செயல்பாட்டை நீக்கு என்பதையோ தேர்வுசெய்யவும்.
- முடக்கி செயல்பாட்டை நீக்கு என்பதைத் தேர்வுசெய்தால், நீக்க விரும்பும் செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய அதற்கான வழிமுறையைப் பின்பற்றவும்.
உதவிக்குறிப்பு: சில செயல்பாடுகள் ‘எனது செயல்பாடுகளில்’ சேர்க்கப்படுவதில்லை.
செயல்பாடுகள் சேமிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துதல்
நீங்கள் மறைநிலைப் பயன்முறையில் உலாவலாம்.
உதவிக்குறிப்பு: மறைநிலை உலாவல் சாளரத்தின் மூலம் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்தால் உங்கள் தேடல் செயல்பாடு அந்தக் கணக்கில் சேமிக்கப்படலாம்.
சிக்கல்களைச் சரிசெய்தல்
பிற செயல்பாடுகளைக் கண்டறிதல்
உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படாமல் இருக்கலாம்.
உதாரணமாக, காலப்பதிவு அம்சம் இயக்கப்பட்டிருந்தால் அந்தத் தரவு உங்கள் Maps காலப்பதிவில் சேமிக்கப்பட்டிருக்கும்.
உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பிற வகையான செயல்பாடுகளைக் கண்டறிய:
- கம்ப்யூட்டரில் உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
- இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதில் எனது செயல்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் செயல்பாட்டிற்கு மேலே, தேடல் பட்டியில் உள்ள மூன்று புள்ளி மெனுவை
கிளிக் செய்து
பிற செயல்பாடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் கண்டறிய விரும்பும் செயல்பாட்டுக்குக் கீழே, உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பற்றியும் அவற்றை ஏன் சேகரிக்கிறோம் என்பதைப் பற்றியும் மேலும் அறிக.
பிற கணக்குத் தகவல்களைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.