Google கணக்கு அல்லது Gmailலை மீட்டெடுப்பது எப்படி?

உங்கள் கடவுச்சொல் அல்லது பயனர்பெயரை மறந்துவிட்டாலோ சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற முடியாவிட்டாலோ உங்கள் Google கணக்கை மீட்டெடுக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும். இதன் மூலம் Gmail, Photos, Google Play போன்ற சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

உதவிக்குறிப்புகள்:

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?

  1. Google கணக்கு அல்லது Gmailலை மீட்டெடுப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  2. கடவுச்சொல்லை மீட்டமைக்கும்படி கேட்கப்படும் போது கடவுச்சொல்லை மீட்டமைக்கவும். இந்தக் கணக்கில் ஏற்கெனவே பயன்படுத்தாத வலிமையான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது என அறிக.

உள்நுழையப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை மறந்துவிட்டீர்களா?

  1. உங்கள் பயனர்பெயரைக் கண்டறிய இந்தப் படிகளைப் பின்பற்றவும்:. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியவை:
    • கணக்கிற்கான மொபைல் எண் அல்லது மீட்பு மின்னஞ்சல் முகவரி.
    • உங்கள் கணக்கின் முழுப் பெயர்.
  2. நீங்கள் மீட்டெடுக்க முயல்வது உங்கள் கணக்குதான் என்பதை உறுதிப்படுத்த அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  3. உங்கள் கணக்குடன் பொருந்தும் பயனர்பெயர்களின் பட்டியல் காட்டப்படும்.

உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகிறாரா?

உங்கள் Google கணக்கை அனுமதியின்றி வேறொருவர் பயன்படுத்துகிறார் என நீங்கள் நினைத்தால் ஹேக் அல்லது ஹைஜேக் செய்யப்பட்ட Google கணக்கையோ Gmailலையோ மீட்டெடுக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

வேறு காரணத்தால் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லையா?

வேறு சிக்கல் இருந்தால் உள்நுழைவதற்கான உதவியைப் பெறுக.

நீக்கப்பட்ட Google கணக்கை மீட்டெடுத்தல்

உங்கள் Google கணக்கைச் சமீபத்தில் நீங்கள் நீக்கியிருந்தால் இந்த வழிகளைப் பின்பற்றி கணக்கை மீட்டெடுக்கலாம்.

இன்னும் உள்நுழைய முடியவில்லையா?

புதிய கணக்கை உருவாக்குங்கள்

உங்களால் உள்நுழைய முடியவில்லை எனில் கணக்கை மீட்டெடுக்க இந்த உதவிக்குறிப்புகளை முயலலாம்.

உங்கள் கணக்கை இப்போதும் மீட்டெடுக்க முடியவில்லை என்றால் புதிய Google கணக்கை உருவாக்கலாம். அப்படி உருவாக்கும்போது, உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியாமல் போவதைத் தவிர்க்க இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.

கணக்கு மற்றும் கடவுச்சொல் மீட்டெடுப்புச் சேவைகளைத் தவிர்த்திடுங்கள்

பாதுகாப்புக் காரணங்களால், கணக்கில் உள்நுழைய உதவும்படி நீங்கள் Googleளை ஃபோனில் தொடர்புகொள்ள முடியாது. கணக்கு, கடவுச்சொல் தொடர்பாக உதவுவதாகக் கூறும் எந்தச் சேவையுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றவில்லை. உங்கள் கடவுச்சொற்களையோ சரிபார்ப்புக் குறியீடுகளையோ யாரோடும் பகிர வேண்டாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6995398972097564287
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false