உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், நீக்குதல்

உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களையும் செயல்பாடுகளையும் நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக. Google சேவைகள் முழுவதிலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க எந்த வகையான செயல்பாட்டைச் சேமித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உங்கள் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்த்தல்

தனியுரிமைச் சரிபார்ப்புப் பக்கத்தில், கீழே விளக்கப்பட்டுள்ள பெரும்பாலான அமைப்புகளை நீங்கள் விரைவாகக் கண்டறியலாம் மாற்றலாம்.

எந்தெந்தச் செயல்பாடுகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் கணக்கில் எந்தெந்த வகையான செயல்பாடுகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்கான அமைப்புகளைப் பயன்படுத்தவும். செயல்பாட்டிற்கான எடுத்துக்காட்டுகள்:

  • நீங்கள் தேடுபவை
  • நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள்
  • நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்
  • நீங்கள் செல்லும் இடங்கள்

விரைவான தேடல் மூலம் சிறந்த அனுபவத்தையும், Google தயாரிப்புகளில் மிகவும் பிரத்தியேகமாக்கப்பட்ட அனுபவத்தையும் உங்களுக்கு வழங்க செயல்பாட்டுத் தரவு உதவுகிறது.

உங்கள் கணக்கில் எந்தச் செயல்பாடு சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து மேலும் அறிக.

உங்கள் தகவலைக் கண்காணித்தல் மற்றும் நீக்குதல்

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள செயல்பாட்டைச் சரிபார்க்கவும் கட்டுப்படுத்தவும் இந்தத் தகவல்கள் உதவும்.

உங்கள் தரவை மேலோட்டமாகப் பார்த்தல்

Gmail, Drive, Calendar போன்ற வெவ்வேறு Google சேவைகளுக்கான உங்கள் தரவின் சுருக்கவிவரத்தைப் பார்க்க, உங்களின் Google Dashboardஐப் பார்க்கவும்.

உங்கள் செயல்பாடுகளையும் ஃபைல்களையும் கண்டறிந்து நீக்குதல்

எனது செயல்பாடு

நீங்கள் தேடியவை, பார்வையிட்ட இணையதளங்கள் போன்ற செயல்பாடுகளை எனது செயல்பாடுகள் பக்கத்தில் கண்டறிந்து நீக்கலாம்.

உங்கள் செயல்பாடுகளை நீக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்க்க கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படுமாறு நீங்கள் அமைக்க முடியும்.

உங்கள் ஃபைல்கள்

தொடர்புடைய Google தயாரிப்புகளுக்குச் சென்று உங்கள் படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஃபைல்களைக் கண்டறிந்து நீக்கலாம். உதாரணமாக:

நீங்கள் சென்ற இடங்கள் குறித்த தரவைக் கண்டறிந்து நீக்குதல்

‘இதுவரை சென்ற இடங்கள்’ என்பது ஒரு Google கணக்கு அமைப்பாகும். நீங்கள் சென்ற இடங்கள், வழிகள், பயணங்கள் ஆகியவற்றை நினைவுகூர உதவும் வகையில் ஒரு தனிப்பட்ட வரைபடமான ‘காலப்பதிவை’ இது உருவாக்கும். இதுவரை சென்ற இடங்கள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் நீங்கள் Google ஆப்ஸைப் பயன்படுத்தாத போதும் உங்கள் சாதனம் அதன் துல்லியமான இருப்பிடத்தை உங்கள் சாதனங்களிலும் Googleளின் சேவையகங்களிலும் தொடர்ந்து சேமிக்கும். உங்கள் ‘இதுவரை சென்ற இடங்கள்’ தரவை நீங்கள் மட்டுமே அணுக முடியும்.

இதுவரை சென்ற இடங்கள் தரவை நிர்வகிப்பது அல்லது நீக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

Google முழுவதும் மிகவும் பிரத்தியேகமாக்கப்பட்ட அனுபவத்தை 'இதுவரை சென்ற இடங்கள்' தரவு உங்களுக்கு வழங்கலாம். உதாரணமாக, நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களின் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படலாம்.

பிற இருப்பிடத் தரவை நிர்வகித்தல்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற பிற அமைப்புகளை இயக்கியிருந்து, இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இடைநிறுத்தியிருந்தாலோ அதிலுள்ள இருப்பிடத் தரவை நீக்கியிருந்தாலோ, பிற Google தளங்கள், ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது நடைபெறும் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் Google கணக்கில் இருப்பிடத் தரவு தொடர்ந்து சேமிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் உங்கள் இருப்பிடம் குறித்த தகவல் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் அடங்கும்.

உதாரணமாக, உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்புகள் இயக்கப்பட்டிருக்கும்போது, Search, Maps ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, நீங்கள் இருக்கும் பொதுவான பகுதி சேமிக்கப்படலாம். உங்களின் துல்லியமான இருப்பிடம் உட்பட பிற இருப்பிடங்கள் உங்கள் கேமரா ஆப்ஸ் அமைப்புகளைப் பொறுத்து உங்கள் படங்களுடன் சேமிக்கப்படலாம்.

Chrome மற்றும் பிற உலாவிகளில் இருந்து தேடல் விவரங்களையும் குக்கீகளையும் நீக்குதல்

முகவரிப் பட்டியில் சிறப்பான பரிந்துரைகளைப் பெற இதுவரை தேடியவை மற்றும் குக்கீகள் தரவு உங்களுக்கு உதவலாம். இதன் மூலம், நீங்கள் தேடுவதை விரைவாகக் கண்டறியலாம்.

பிற Google செயல்பாடுகளைப் பார்த்தல்

நீங்கள் பிற Google செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தலாம்.

Google சேவைகளில் உங்களுக்கு வழங்கப்படும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மேம்படுத்த இந்தத் தகவல் உதவலாம்.

உங்கள் கணக்கில் இருந்து சாதனத்தை அகற்றுதல்
உங்கள் கணக்கில் சமீபத்தில் உள்நுழைந்த சாதனங்களைச் சரிபார்க்கலாம். ஏதேனும் ஒரு சாதனத்தை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்றாலோ அது உங்களுடையது இல்லை என்றாலோ அதை உங்கள் கணக்கில் இருந்து அகற்றவும்.
தயாரிப்பு அல்லது உங்கள் கணக்கை நீக்குதல்
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கையும் நீக்கலாம். நீக்கிய பிறகு உங்களால் மீண்டும் அதே கணக்கைப் பெற முடியாமல் போகலாம்.

தனிப்பட்ட தகவலை மாற்றுதல்

உங்கள் தனிப்பட்ட தகவலை மாற்றுவதற்கும் அதை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் என்னைப் பற்றி என்ற பிரிவுக்குச் செல்லவும். Gmail போன்ற Google சேவைகளில் பிறர் உங்களைத் தொடர்புகொள்ளவோ அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களைக் கண்டறியவோ இந்தத் தனிப்பட்ட தகவல் உதவும்.

உங்கள் தனிப்பட்ட தகவலை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

விளம்பர அமைப்புகளை மாற்றுதல்

உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட Google பயன்படுத்தும் தகவலை விளம்பர அமைப்புகளுக்குச் சென்று கட்டுப்படுத்தலாம்.

உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட இந்தத் தரவு உதவும்.

Google விளம்பரங்கள் மற்றும் விளம்பர அமைப்புகளைப் பற்றி மேலும் அறிக.

உங்கள் Google தரவைப் பதிவிறக்குதல்

படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள், தொடர்புகள் போன்ற தரவை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பதிவிறக்கலாம் அல்லது இடமாற்றலாம். இதன் மூலம், Google சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தினாலோ Google கணக்கை நீக்கினாலோ நீங்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

தரவைப் பதிவிறக்குவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7687595308424784556
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false