முக்கியமான செயலை நீங்கள்தான் நிறைவுசெய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துதல்

முக்கியம்: நீங்கள் Google Workspace பயனராகவோ நிர்வாகியாகவோ இருந்தால் Workspace கணக்குகளுக்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். பணியிடத்தில் வழங்கப்பட்ட Google கணக்கை வைத்திருந்தால் இதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உங்கள் நிறுவனம் வழங்கிய சாதனம் மூலம் உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம்.

உங்கள் கணக்கையும் தரவையும் பாதுகாக்க, முக்கியமான செயல்களை நிறைவுசெய்யும்போது அவற்றை நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பல அடுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கான Googleளின் அணுகுமுறை இது.

ஹேக்கரால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க Google இதைப் பயன்படுத்துகிறது. இந்தப் பாதுகாப்பு அம்சம் இருப்பதால் உங்கள் தனிப்பட்ட விவரங்களும் உள்நுழைவுத் தகவலும் ஹேக்கருக்குக் கிடைத்தாலும் உங்கள் கணக்கில் முக்கியமான செயல்களை நிறைவுசெய்வது அவருக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

உங்கள் கணக்கு அமைப்புகளில் செய்யக்கூடிய முக்கியமான செயல்கள்:

  • Google கணக்கில் சேமித்துள்ள செயல்பாடுகளைப் பார்த்தல்.
  • கடவுச்சொல்லை மாற்றுதல்.
  • சேமித்த கடவுச்சொற்களைப் பார்த்தல்.
  • இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்.
  • தரவைப் பதிவிறக்குதல்.

நீங்கள் Google தயாரிப்புகளுக்குள் முக்கியமான மாற்றங்களைச் செய்யும்போது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி நாங்கள் கேட்கலாம். முக்கியமான மாற்றங்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்:

  • YouTube Studioவில் சேனல் உரிமையை மாற்றுதல்.
  • Google Ads கணக்கின் பட்ஜெட்டை மாற்றுதல்.
  • Googleளில் இருந்து பிற தயாரிப்பையோ சேவையையோ வாங்குதல்.
    • எடுத்துக்காட்டு: Google Storeரில் இருந்து Google Pixel அல்லது Nest சாதனத்தை வாங்குதல்.
  • Gmailலில் முக்கியமான மின்னஞ்சல் வடிப்பான்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், முன்னனுப்பும் முகவரியைச் சேர்த்தல் அல்லது IMAP அணுகலை இயக்குதல்.

நீங்கள்தான் என்பதை நிரூபிக்க, குறைந்தது 7 நாட்களுக்கு உங்கள் கணக்குடன் பதிவுசெய்யப்பட்டுள்ள சாதனத்தையோ பாதுகாப்பு விசையையோ வைத்திருக்கவும். இவற்றைப் பயன்படுத்தலாம்:

முக்கியம்: ஒரு செயலை நீங்கள்தான் நிறைவுசெய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனில் முக்கியமான செயலை 7 நாட்களுக்கு நிறைவுசெய்ய உங்களை Google அனுமதிக்காமல் போகலாம். இந்தத் தாமதம் உங்கள் கணக்கும் தரவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும்.

  • இந்த 7 நாட்களின்போது: உங்கள் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தவும் அணுகவும் முடியும். ஆனால் நீங்கள்தான் ஒரு செயலைச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தாத வரை பாதுகாக்கவேண்டிய தகவலை மாற்றவோ முக்கியமான செயல்களை நிறைவுசெய்யவோ அனுமதிக்கப்படமாட்டீர்கள்.
  • 7 நாட்களுக்குப் பிறகு: சரிபார்ப்புச் செயல்முறை இல்லாமலேயே தொடர்புடைய முக்கியமான செயலை நீங்கள் அணுகலாம்.

சில சமயங்களில் கணக்கின் நியாயமான உரிமையாளர்கள் மொபைல் அல்லது மொபைல் எண்ணிற்கான அணுகலை இழக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். 7 நாட்களுக்கு முக்கியமான செயல்களுக்கான அணுகலை மட்டும் கட்டுப்படுத்துகிறோம். சில பர்ச்சேஸ்களைச் செய்யும்போது உங்கள் பர்ச்சேஸைத் தொடர விருந்தினர் செக்-அவுட்டைப் பயன்படுத்தலாம்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தாலும் முக்கியமான செயலை நீங்கள்தான் நிறைவுசெய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனில் கீழே உள்ள தொடர்புடைய பிரிவிற்குச் செல்லவும்.

"முக்கியமான செயல் தடுக்கப்பட்டுள்ளது" என்ற மெசேஜ் காட்டப்படுகிறது

உங்கள் கணக்கைப் பாதுகாக்க, இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தது 7 நாட்களுக்கு உங்கள் Google கணக்குடன் இணைக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் சில முக்கியமான செயல்களை நிறைவுசெய்யும்போது நீங்கள் தடுக்கப்படலாம்:

  • Google கணக்கில் உள்நுழைய நீங்கள் பயன்படுத்தும் சாதனம்
  • மொபைல் எண்
  • பாதுகாப்பு விசை

இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான விருப்பம் காட்டப்படவில்லை எனில் இதைச் செய்யலாம்:

உங்கள் சாதனத்தைப் பயன்படுத்த முடியவில்லை

Android சாதனம் ஆஃப்லைனில் உள்ளது

இணையத்துடன் இணைக்கப்படாத Android சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்திருந்தாலும் முக்கியமான செயலைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

  1. நிறைவுசெய்ய வேண்டிய முக்கியமான செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. "இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவும்" திரையில் சரிபார்ப்பதற்கான பல வழிகள் அதன் பிறகு Android மொபைலில் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவும் என்பதைத் தட்டவும்.
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

Android சாதனத்தில் பாதுகாப்புக் குறியீடுகளைப் பெறுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

சாதனத்தைப் பயன்படுத்த முடியவில்லை

உங்கள் சாதனத்தைப் பயன்படுத்த முடியவில்லை எனில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வேறொரு சாதனத்திலிருந்து மீண்டும் முயன்று இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.

உங்கள் சாதனத்தில் அறிவிப்பைப் பெறவில்லை

சில நிமிடங்களுக்குள் அறிவிப்பைப் பெறவில்லை எனில்:

  1. உங்கள் சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
    • அறிவிப்புகளைப் பெற வைஃபை அல்லது மொபைல் டேட்டாவை இயக்க வேண்டும்.
  2. சாதனத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. உள்நுழைவுத் திரைக்குச் சென்று அதன் பிறகு மீண்டும் அனுப்பு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: பாதுகாக்கவேண்டிய தகவலை நீங்கள் சமீபத்தில் மாற்றியிருந்தால் மாற்றம் செய்தபிறகு முழுமையாக 7 நாட்கள் காத்திருந்து மீண்டும் முயலவும். இப்போதும் அறிவிப்பைப் பெறவில்லை எனில் வேறு வழியில் முயலவும் என்பதைத் தட்டி வேறொரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மெசேஜ் வரவில்லை

சில நிமிடங்களுக்குள் மெசேஜைப் பெறவில்லை எனில்:

  1. உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள சரியான மீட்பு மொபைல் எண்ணுக்குரிய மொபைல் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. நெட்வொர்க் சிக்னல் நன்றாக இருப்பதை அல்லது மொபைலுக்கு வைஃபை இணைப்பு உள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. உள்நுழைவுத் திரைக்குச் சென்று மீண்டும் அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இப்போதும் மெசேஜைப் பெறவில்லை எனில் வேறு வழியில் முயலவும் அதன் பிறகு Android மொபைலில் பாதுகாப்புக் குறியீட்டைப் பெறவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: பாதுகாக்கவேண்டிய தகவலை நீங்கள் சமீபத்தில் மாற்றியிருந்தால் மாற்றம் செய்தபிறகு முழுமையாக 7 நாட்கள் காத்திருந்து மீண்டும் முயலவும். Android சாதனத்தில் பாதுகாப்புக் குறியீட்டைப் பெறுவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

Google கணக்கில் உள்நுழைய முடியவில்லை

Gmail, Drive, Photos போன்ற Google சேவைகளைப் பயன்படுத்த Google கணக்கில் உள்நுழைய முடியவில்லை எனில் Google கணக்கை மீட்டெடுப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9977299747452498880
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false