உங்கள் கணக்கில் செயல்பாடுகளை அணுகுதலும் கட்டுப்படுத்துதலும்

Google தளங்களையும் ஆப்ஸையும் சேவைகளையும் பயன்படுத்தும்போது நீங்கள் மேற்கொள்ளும் சில செயல்பாடுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இந்தச் செயல்பாடுகளை ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் கண்டறிந்து நீக்கலாம், பெரும்பாலான செயல்பாடுகள் சேமிக்கப்படுவதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம்.

'எனது செயல்பாடுகள்' பற்றி

செயல்பாடுகளை (நீங்கள் தேடியவை, பார்த்த இணையதளங்கள், பார்த்த வீடியோக்கள் போன்றவை) 'எனது செயல்பாடுகள்' எனும் ஒரே பக்கத்தில் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

'செயல்பாடுகள்' எப்படி வேலை செய்கிறது?

உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க Search, YouTube, Chrome போன்ற சில Google சேவைகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் உங்கள் கணக்கில் தரவாகச் சேமிக்கப்படும். மிகவும் பயனளிக்கும் வகையில் விரைவான அனுபவத்தை Googleளில் பெற இந்தச் செயல்பாடுகள் உதவும்.

'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்கள் உள்ள செயல்பாட்டு வகைகள் காட்டப்படும். மேலும் அவை நீங்கள் எந்த Google தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள், எந்தச் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை இயக்கியுள்ளீர்கள் என்பவற்றின் அடிப்படையில் இருக்கும்.

செயல்பாடுகள் எனது கணக்கில் எப்போது சேமிக்கப்படும்?

Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது செயல்பாடுகள் சேமிக்கப்படும்.

கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பெரும்பாலான செயல்பாடுகளைச் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தும்.

செயல்பாடுகளைக் கண்டறிதல் மற்றும் பார்த்தல்

உங்கள் செயல்பாடுகள் தனித்தனியாகப் பட்டியலிடப்படும். மிகவும் சமீபத்தியவை முதலில் காட்டப்படும்.

செயல்பாடுகளைக் கண்டறிதல்​

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில் தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள எனது செயல்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. செயல்பாடுகளை அணுக:
    • நாள் மற்றும் நேரத்தின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உங்கள் செயல்பாடுகளை உலாவவும்.
    • குறிப்பிட்ட செயல்பாட்டைக் கண்டறிய, மேற்பகுதியில் உள்ள தேடல் பட்டியையும் வடிப்பான்களையும் பயன்படுத்தவும்.

செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களைப் பெறுதல்

ஒரு செயல்பாட்டைப் பற்றிய விவரங்களைப் பார்க்க: செயல்பாட்டின் கீழ் உள்ள விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்தச் செயல்பாட்டின் தேதி மற்றும் நேரமும் அது சேமிக்கப்பட்டதற்கான காரணமும் உங்களுக்குக் காட்டப்படும். இருப்பிடம், சாதனம், ஆப்ஸ் ஆகியவை குறித்த தகவல்களையும் நீங்கள் கண்டறியக்கூடும்.

செயல்பாடுகளை நீக்குதல்

'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உள்ள முந்தைய தேடல்கள், இதுவரை இணையத்தில் பார்த்தவை மற்றும் பிற செயல்பாடுகளை எப்படி நீக்குவது எனத் தெரிந்துகொள்ளுங்கள். பழைய செயல்பாடுகளைத் தானாக நீக்குமாறும் நீங்கள் அமைக்கலாம்.

'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உள்ள உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்க்க, கூடுதல் படி தேவைப்படுமாறு அமைத்தல்

பலர் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தனியுரிமையை வலுப்படுத்த 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்ப்பதற்குக் கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படுமாறு நீங்கள் அமைக்கலாம்.

  1. activity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே உள்ள 'எனது செயல்பாடுகள்' சரிபார்ப்பை நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கூடுதல் சரிபார்ப்பை இயக்கவும் அல்லது முடக்கவும்.

முடக்குதல் & செயல்பாட்டை நீக்குதல்

‘எனது செயல்பாடுகள்’ பக்கத்தில் உள்ள பெரும்பாலான தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே, நீங்கள் சேமிக்க விரும்பாத செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் சேமிக்க விரும்பாத அமைப்புக்குக் கீழே உள்ள முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அமைப்பை முடக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது முடக்கு என்பதையோ முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதையோ தேர்வுசெய்யவும்.
    • முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதைத் தேர்வுசெய்தால் எந்தச் செயல்பாட்டை நீக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: சில செயல்பாடுகள் ‘எனது செயல்பாடுகளில்’ சேர்க்கப்படுவதில்லை.

செயல்பாடுகள் சேமிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துதல்

நீங்கள் தனிப்பட்ட முறையில் இணையத்தில் தேடலாம் உலாவலாம்.

உதவிக்குறிப்பு: மறைநிலை உலாவல் சாளரத்தின் மூலம் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்தால் உங்கள் தேடல் செயல்பாடு அந்தக் கணக்கிலேயே சேமிக்கப்படக்கூடும்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் செயல்பாடுகள் காட்டப்படவில்லை

நீங்கள் தேடியவை, பார்த்த இணையதளங்கள் அல்லது பிற செயல்பாடுகள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படவில்லையெனில் இவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

  • கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மட்டுமே செயல்பாடுகள் சேமிக்கப்படும்.
  • உங்கள் சாதனம் ஆன்லைனில் இருக்க வேண்டும். உங்கள் சாதனம் இணையத்துடன் இணைக்கப்படவில்லையெனில், உங்களின் எந்தவொரு ஆஃப்லைன் செயல்பாடும் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படாது.
  • சரியான அமைப்புகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் செயல்பாட்டு வகைகளைச் சேமிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ள உங்கள் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைச் சரிபார்க்கவும்.
  • ஒரு கணக்கில் மட்டுமே உள்நுழைந்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில் ஒரே உலாவியிலோ சாதனத்திலோ பல கணக்குகளில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், உங்கள் செயல்பாடுகள் இயல்புக் கணக்கில் சேமிக்கப்படக்கூடும்.

கவனத்திற்கு: செயல்பாடுகள் உங்கள் கணக்கில் சேமிக்கப்படுவதைச் சில Google சேவைகள் ஆதரிப்பதில்லை.

உங்களால் அடையாளங்காண முடியாத செயல்பாடுகள் காட்டப்படுதல்

உங்களுக்குப் பழக்கமற்ற இந்த வகையான செயல்பாடுகள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படக்கூடும்.

Google சேவைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களிலும் ஆப்ஸிலும் மேற்கொள்ளும் செயல்பாடுகள்

சில இணையதளங்களும் ஆப்ஸும் Search, Maps, Ads போன்ற Google சேவைகளைப் பயன்படுத்துகின்றன. உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது இந்த இணையதளங்களுக்கும் ஆப்ஸிற்கும் நீங்கள் சென்றால், உங்கள் செயல்பாடுகள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படக்கூடும். பலர் பயன்படுத்தும் சாதனத்தைப் பயன்படுத்தினாலோ பல கணக்குகளில் உள்நுழைந்திருந்தாலோ, நீங்கள் உள்நுழைந்திருக்கும் வேறொரு கணக்கில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை நீங்கள் கண்டறியக்கூடும்.

சில இணையதளங்களும் ஆப்ஸும் சில செயல்பாடுகளை Google உடன் பகிரக்கூடும்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு குறித்து மேலும் அறிக.

கணிக்கப்பட்ட செயல்பாடுகள்

சிலநேரங்களில் Google நீங்கள் அடுத்து எதைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைக் கணித்து அந்த உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்கும்.

  • உதாரணமாக, YouTube தானியங்கி இயக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஏற்கெனவே பார்த்தவற்றின் அடிப்படையில் தானாகப் பிளே செய்யப்பட்ட வீடியோக்கள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படக்கூடும்.

பிற பழக்கமற்ற செயல்பாடுகள்

பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்களுக்குப் பழக்கமற்ற செயல்பாடுகள் காட்டப்படக்கூடும்:

  • ஒரே சமயத்தில் ஒரே உலாவியிலோ சாதனத்திலோ பல கணக்குகளில் நீங்கள் உள்நுழைந்திருத்தல்.
    • வேறொரு கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் சேமிக்கப்படக்கூடும்.
  • நீங்கள் இயக்க நினைக்காதபோதும் தற்செயலாக இயக்கப்படுவதை Google Assistant கண்டறிதல்.
  • பொதுக் கம்ப்யூட்டர் போன்ற பலர் பயன்படுத்தும் சாதனத்தில் இருந்து நீங்கள் வெளியேறாமல் இருத்தல்.
  • உங்கள் சாதனத்தில் வேறொரு தேதியையும் நேரத்தையும் அமைத்திருத்தல்.
    • இந்தச் சாதனத்தில் உள்ள செயல்பாடுகள் தவறான தேதியுடன் காட்டப்படக்கூடும்.
  • உங்கள் அனுமதியின்றி வேறொருவர் உங்கள் கணக்கை அணுகுதல்.

உங்கள் கணக்கில் காட்டப்படும் செயல்பாடு வேறொருவர் மேற்கொண்டது என நினைத்தால் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பிற செயல்பாடுகளைப் பார்த்தல்

உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளுமே 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் காட்டப்படுவதில்லை. உதாரணமாக, இதுவரை சென்ற இடங்கள் அம்சம் இயக்கப்பட்டிருந்தால் அந்தத் தரவு உங்கள் Maps காலப்பதிவில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பிற வகையான செயல்பாடுகளைக் கண்டறிய:

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்"என்பதில் எனது செயல்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே உள்ள தேடல் பட்டியில், மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பிற Google செயல்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் பார்க்க விரும்பும் செயல்பாட்டுக்குக் கீழே, உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பற்றியும் அவற்றை ஏன் சேகரிக்கிறோம் என்பதைப் பற்றியும் மேலும் அறிக.

பிற கணக்குத் தகவல்களைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4798090250481816258
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false