உங்கள் Gmail சேவையை நீக்குதல்

உங்கள் Gmail முகவரியும் மின்னஞ்சல்களும் இனி தேவையில்லை என்றால், அவற்றை உங்கள் Google கணக்கில் இருந்து அகற்றிக் கொள்ளலாம். அவற்றை நீக்குவதால் உங்கள் ஒட்டுமொத்த Google கணக்கும் நீக்கப்படாது.

உங்கள் Gmail சேவையை நீக்கும்போது என்ன ஆகும்?

  • உங்கள் மின்னஞ்சல்களும் அஞ்சல் அமைப்புகளும் நீக்கப்படும்.
  • உங்கள் Gmail முகவரியை இனி எப்போதும் மின்னஞ்சல் அனுப்புவதற்கோ பெறுவதற்கோ பயன்படுத்த முடியாது. மனதை மாற்றிக்கொண்டால், உங்கள் Gmail முகவரியை உங்களால் திரும்பப் பெற முடியலாம்.
  • எதிர்காலத்தில் உங்கள் Gmail முகவரியை வேறு யாராலும் பயன்படுத்த முடியாது.
  • உங்கள் Google கணக்கு நீக்கப்படாது; உங்கள் Gmail சேவை மட்டுமே அகற்றப்படும். Google Playயில் நீங்கள் வாங்கியவையும் உங்கள் செயல்பாடும் தொடர்ந்து இருக்கும்.

Gmailலை நீக்குதல்

உங்கள் பணியிடம், பள்ளி அல்லது வேறு குழுவின் மூலமாக Gmailலைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. உங்கள் Gmail சேவையை நீக்குவதற்கு முன்னர் உங்கள் தரவைப் பதிவிறக்கவும்.
  2. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  3. இடது வழிசெலுத்தல் பேனலில் தரவு & பிரத்தியேகமாக்குதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்கு, நீக்கு அல்லது எனது தரவிற்குத் திட்டத்தை உருவாக்கு என்னும் பேனலில் சேவை/எனது கணக்கை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Google சேவையை நீக்கு என்னும் பேனலில் சேவையை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  6. "Gmail" என்பதற்கு அடுத்துள்ள நீக்கு Delete என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கவனத்திற்கு: Gmail Offline ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் உலாவியின் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிப்பது அவசியம்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் Gmail முகவரி & மின்னஞ்சல்களை மீட்டெடுக்க வேண்டுமா?

மனதை மாற்றிக்கொண்டால், உங்கள் Gmail முகவரியை உங்களால் திரும்பப் பெற முடியலாம். உங்கள் Gmail சேவையை அகற்றி சில காலம் ஆகியிருந்தால், உங்கள் மின்னஞ்சல்களை உங்களால் திரும்பப் பெற முடியாமல் போகலாம்.

  1. Gmailலுக்குச் செல்லவும்.
  2. திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் ஒட்டுமொத்த Google கணக்கையும் நீக்க வேண்டுமா?

உங்கள் Google கணக்கை எவ்வாறு நீக்குவது என்பதைப் பற்றி அறிக. இது உங்கள் Gmail சேவையை மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த Google கணக்கையும் நீக்கிவிடும்.

உங்களால் உள்நுழைய முடியாது

உங்கள் Gmail சேவையை நீக்குவதற்கு முன் நீங்கள் உள்நுழைய வேண்டும். உங்கள் கணக்கை அணுகுவதற்கு உதவி பெறுக.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12269399895420403897
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false