Google உங்களுக்கு எப்போது மெசேஜ் அனுப்பக்கூடும்?

Google உங்களுக்கு மெசேஜ் (SMS) அனுப்புவதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை, கடவுச்சொல்லை ரீசெட் செய்ய விரும்புகிறீர்கள்

உங்கள் கணக்கில் ஒரு மீட்பு மொபைல் எண்ணைச் சேர்த்திருந்தால் Google, குறியீட்டை மெசேஜில் அனுப்பலாம். கடவுச்சொல்லை ரீசெட் செய்துவிட்டு மீண்டும் கணக்கில் உள்நுழைய இந்தக் குறியீடு உதவும். உங்கள் மொபைலை மீட்டெடுப்பு விருப்பமாகப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இருபடிச் சரிபார்ப்பை இயக்கியுள்ளீர்கள்

நீங்கள் இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தினால், உள்நுழையும்போது மெசேஜ் மூலம் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவதைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள். இந்தக் குறியீடு உங்கள் கணக்கில் ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கிறது. இருபடிச் சரிபார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

புதிய கணக்கை உருவாக்கும்போது, நீங்கள் ரோபோ இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்

நீங்கள் ஒரு Google கணக்கை உருவாக்கும்போது, உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீட்டை வழங்கும்படி நாங்கள் கேட்கக்கூடும். மெசேஜ் மூலம் உங்கள் கணக்கை உறுதிப்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உள்நுழைய முயல்வது நீங்கள்தான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்

இதுபோன்ற சூழல்களில் ஒரு கூடுதல் உள்நுழைவுப் படியை நிறைவுசெய்யும்படி சிலநேரங்களில் நாங்கள் கேட்கலாம்:

  • நீங்கள் புதிய இடத்திலிருந்து உள்நுழையும்போது.
  • நீங்கள் புதிய சாதனத்தில் உள்நுழையும்போது.

இந்தக் கூடுதல் படியில், உங்கள் மொபைலுக்கு நாங்கள் மெசேஜில் அனுப்பிய குறியீட்டை வழங்கும்படி கேட்கப்படுவதும் அடங்கும். வழக்கத்திற்கு மாறான உள்நுழைவுகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கணக்கில் நீங்கள் மாற்றங்களைச் செய்துள்ளீர்கள்

உங்கள் கணக்கில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் (உதாரணத்திற்கு, கடவுச்சொல் மாற்றம்) உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். எனினும், இந்த அறிவிப்புகள் மெசேஜ் மூலமும் அனுப்பப்படலாம். பாதுகாப்பு அறிவிப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கேட்காதபோது மெசேஜ் (SMS) மூலம் ஒரு குறியீட்டைப் பெற்றுள்ளீர்கள்

மெசேஜில் வந்த குறியீட்டை நீங்கள் புறக்கணித்துவிட்டு நீக்கலாம். குறியீடுகளை யாரோடும் பகிரக்கூடாது. உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கான தனிப்பட்ட பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு, பாதுகாப்புச் சரிபார்ப்பு செயல்முறையை அவ்வப்போது மேற்கொள்ளவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14753486701444158838
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false