உங்கள் Google கணக்கில் சமீபத்தில் உள்நுழைந்துள்ள அல்லது உள்நுழைந்திருந்த கம்ப்யூட்டர்கள், மொபைல்கள் மற்றும் பிற சாதனங்களைப் பார்க்கலாம். உங்கள் கணக்கில் வேறு யாரும் உள்நுழையவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள google.com/devices தளத்தில் சரிபார்க்கலாம்.
சாதனங்களைப் பார்த்தல்
-
எனது Google கணக்கு என்பதற்குச் செல்லவும்.
-
இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் சாதனங்கள் பேனலில், அனைத்துச் சாதனங்களையும் நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் Google கணக்கில் நீங்கள் சமீபத்தில் உள்நுழைந்துள்ள சாதனங்கள் அல்லது கடந்த சில வாரங்களில் உள்நுழைந்திருந்த சாதனங்களைப் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, ஒரு சாதனம் அல்லது அமர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
-
நீங்கள் வெளியேறிவிட்ட சாதனங்கள் அல்லது அமர்வுகளில் “வெளியேறிவிட்டீர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கும்.
-
ஒரே சாதன வகைக்குப் பல்வேறு அமர்வுகள் காட்டப்பட்டால் அவை அனைத்தும் ஒரு சாதனத்தில் இருந்தோ பல்வேறு சாதனங்களில் இருந்தோ காட்டப்படலாம். அவற்றின் விவரங்களைப் பார்த்து, இந்த அமர்வுகள் அனைத்தும் உங்கள் சாதனங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டவைதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் அவற்றில் இருந்து வெளியேறவும்.
அமர்வு என்றால் என்ன?
சில சமயங்களில், தனிப்பட்ட சாதனங்களுக்குப் பதிலாக அமர்வுகள் என்பது காட்டப்படக்கூடும். அமர்வு என்பது சாதனத்தில் உலாவி, ஆப்ஸ் அல்லது சேவையில் எங்கள் Google கணக்கின் மூலம் நீங்கள் உள்நுழைந்திருந்த நேரத்தைக் குறிக்கும் கால அளவாகும். ஒரே சாதனத்தில் பல அமர்வுகள் இருப்பது பொதுவான ஒன்றுதான்.
பின்வரும் சமயங்களில், சாதனத்தில் தனிப்பட்ட அமர்வு உருவாக்கப்படலாம்:
- புதிய சாதனத்தில் நீங்கள் உள்நுழையும்போது
- நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதைச் சரிபார்க்க, கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடும்போது
- புதிய உலாவி, ஆப்ஸ் அல்லது சேவையில் உள்நுழையும்போது
- உங்கள் கணக்குத் தரவை அணுக ஓர் ஆப்ஸிற்கு அணுகல் வழங்கும்போது
- மறைநிலைப் பயன்முறை அல்லது மறைநிலை உலாவல் சாளரத்தில் உள்நுழையும்போது
உங்கள் பாதுகாப்பிற்காக, இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு அமர்வு குறித்த விவரங்களும் காட்டப்படும். இதன் மூலம் அமர்வு குறித்த விவரங்களைப் பார்த்து, அது உங்கள் அமர்வுதான் என உறுதியாகத் தெரியவில்லை எனில் அதில் இருந்து வெளியேறலாம்.
காட்டப்படும் நேரம் எதைக் குறிக்கிறது?
பக்கத்தில் காட்டப்படும் நேரங்கள், ஒவ்வொரு இடத்திலும் சாதனம்/அமர்வு மற்றும் Googleளின் சிஸ்டங்களுக்கு இடையே கடைசியாகத் தகவல் பரிமாற்றம் நடந்த நேரத்தைக் குறிக்கின்றன.
இந்தத் தகவல் பரிமாற்றத்தில் பின்வருபவை இருக்கலாம்:
- Google கணக்கு அல்லது Google ஆப்ஸை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்ற பயனர் செயல்பாடுகள்
- ஒரு சேவை மற்றும் Google இடையே பின்னணியில் நிகழும் தானியங்கு ஒத்திசைவு
இதன் காரணமாக, சாதனத்தைக் கடைசியாகப் பயன்படுத்திய நேரம் காட்டப்படாமல் மிகச் சமீபத்திய நேரம் காட்டப்படக்கூடும்.
இனிமேல் நீங்கள் பயன்படுத்தாத சாதனத்தில் இருந்து வெளியேறுதல்
உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பின்வரும் சாதனங்களில் இருந்து வெளியேறவும்:
- தொலைந்தவை அல்லது இனிமேல் பயன்படுத்தாதவை
- உங்களுக்குச் சொந்தமில்லாதவை
முக்கியம்: ஒரு சாதனத்தை அடையாளங்காண முடியவில்லை என்றாலோ உங்கள் கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு நிகழ்ந்தாலோ உங்கள் கணக்கைப் பாதுகாக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.
-
எனது Google கணக்கு என்பதற்குச் செல்லவும்.
-
இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் சாதனங்கள் பேனலில், அனைத்துச் சாதனங்களையும் நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
சாதனத்தைத் தேர்ந்தெடுத்து வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
-
ஒரே சாதனப் பெயருடன் பல்வேறு அமர்வுகள் காட்டப்பட்டால் அவை அனைத்தும் ஒரே சாதனத்தில் இருந்தோ பல்வேறு சாதனங்களில் இருந்தோ காட்டப்படலாம். ஒரு சாதனத்திற்குக் கணக்கு அணுகல் இல்லை என்பதை உறுதிசெய்ய விரும்பினால் அந்தச் சாதனப் பெயரில் காட்டப்படும் அனைத்து அமர்வுகளில் இருந்தும் வெளியேறவும்.
பரிச்சயமற்ற சாதனம் காட்டப்பட்டால் உங்கள் கணக்கைப் பாதுகாத்திடுங்கள்
-
எனது Google கணக்கு என்பதற்குச் செல்லவும்.
-
இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் சாதனங்கள் பேனலில், அனைத்துச் சாதனங்களையும் நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் இந்த அறிகுறிகள் தென்படும்:
- ஒரு சாதனத்தை உங்களால் அடையாளங்காண முடியாமல் போவது. பின்வரும் சமயங்களில், நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டையே உங்களால் அடையாளங்காண முடியாமல் போகலாம்:
- புதிய சாதனத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தால்.
- வேறொருவரின் சாதனம் அல்லது பொதுக் கம்ப்யூட்டரை (உதாரணமாக நூலகத்தில்) பயன்படுத்தியிருந்தால். உங்களுக்கு அருகில் இல்லாத பொதுச் சாதனத்தில் இருந்து வெளியேறுவது எப்படி என அறிக.
- சமீபத்தில் உங்கள் சாதனத்தை ஆரம்பநிலை அமைப்புகளுக்கு மீட்டமைத்திருந்தால். இருப்பினும் அந்தச் சாதனம் காட்டப்படக்கூடும்.
- காட்டப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்ட இருப்பிடத்தில் நீங்கள் இருந்திருக்கவில்லை. பின்வரும் சமயங்களில், நீங்கள் இருந்த இருப்பிடத்தையே உங்களால் அடையாளங்காண முடியாமல் போகலாம்:
- அந்த இடத்திற்குப் பயணம் செய்திருக்கலாம் அல்லது சிறிது நேரம் (உதாரணமாக விமான நிலையத்தில்) இருந்திருக்கலாம்.
- சரியான இருப்பிடத்திற்குப் பதிலாக அருகிலுள்ள இடம் காட்டப்பட்டால். சாதனத்தின் இருப்பிடத்தை எப்படித் தீர்மானிக்கிறோம் என அறிக.
- குறிப்பிட்ட தேதியிலும் நேரத்திலும் உங்கள் கணக்கைப் பயன்படுத்தியதாக உங்களுக்கு நியாபகம் இல்லாமல் இருப்பது. உங்கள் Google கணக்குடன் இணைக்கப்படும் Gmail, Calendar போன்ற ஆப்ஸ் உங்களிடம் இருந்தால் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை உங்களால் அடையாளங்காண முடியாமல் போகலாம். ஏனெனில், உங்கள் நினைவில் இருப்பதைவிட நேரங்கள் மிகவும் சமீபத்தியதாக இருக்கக்கூடும்.
- நீங்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உலாவியாக (உதாரணமாக Chrome அல்லது Safari) இல்லாமல் வேறொரு உலாவி காட்டப்படுவது.