Google கணக்கைப் பயன்படுத்தி Google தயாரிப்புகள் பலவற்றை அணுகலாம். உங்களிடம் Google கணக்கு இருந்தால்:
- Gmailலைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம் பெறலாம்
- YouTubeல் உங்களுக்குப் பிடித்த மற்றும் புதிய வீடியோக்களைக் கண்டு ரசிக்கலாம்
- Google Playயில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கலாம்
படி 1: Google கணக்கின் வகையைத் தேர்வுசெய்யவும்
முக்கியம்: உங்கள் பிசினஸிற்காக Google கணக்கை உருவாக்கும்போது, பிசினஸ் பிரத்தியேகமாக்கல் அம்சத்தை இயக்கலாம். பிசினஸ் கணக்கு, Google Business Profile அமைப்பதை எளிதாக்குகிறது. இது உங்கள் பிசினஸ் தெரிவுநிலையை மேம்படுத்தவும் ஆன்லைன் தகவலை நிர்வகிக்கவும் உதவுகிறது.
Google கணக்கைத் தொடங்கும்போது, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைச் சேர்க்குமாறு கேட்போம். சரியான தகவலை வழங்குவது கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்கள் சேவைகளை மேலும் பயனுள்ளதாக்கவும் உதவும்.
- Google கணக்கு உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
- கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ் தோன்றும் மெனுவில், இந்தக் கணக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- எனது தனிப்பட்ட உபயோகத்திற்கு
- எனது பிள்ளையின் உபயோகத்திற்கு
- பிசினஸ்
- கீழ் தோன்றும் மெனுவில், இந்தக் கணக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
- உங்களுக்கு Gmail முகவரிகளை Google பரிந்துரைக்கும். பரிந்துரைக்கப்படும் முகவரிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், உங்களுக்கென சொந்தமான Gmail முகவரியை உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள மூன்றாம் தரப்பு மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் பிறந்தநாளையும் பாலினத்தையும் சேர்க்கும்படி கேட்கப்படுவீர்கள்.
- "பயனர்பெயர்" புலத்தில் பயனர்பெயரை டைப் செய்யவும்.
- உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்து உறுதிப்படுத்தவும்.
- உதவிக்குறிப்பு: மொபைலில் கடவுச்சொல்லை டைப் செய்யும்போது முதல் எழுத்தில் பேரெழுத்து சிற்றெழுத்து வித்தியாசம் இருக்காது.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- விரும்பினால், உங்கள் கணக்கிற்கான மொபைல் எண்ணைச் சேர்த்து உறுதிப்படுத்தவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
Gmail கணக்கும் Google கணக்கும் ஒன்றா?
உங்கள் Gmail கணக்கும் Google கணக்கும் வெவ்வேறு. உங்களிடம் Google கணக்கு இருந்தால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றும் தரவைச் சேமிக்கக்கூடிய பல Google சேவைகளில் Gmail கணக்கும் ஒன்றாகும். உங்கள் Google கணக்கின் மூலம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற சேவைகள்:
- YouTube
- Google Drive
- Calendar
- Google Play
ஏற்கெனவே உள்ள மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல்
Google கணக்கை உருவாக்க உங்களிடம் Gmail முகவரி இருக்க வேண்டிய அவசியமில்லை. Gmail அல்லாத மின்னஞ்சல் முகவரியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் விரும்பும் வேறொரு மின்னஞ்சல் வழங்குநரைக் கண்டறிந்து கணக்கை அமைக்க “இலவச மின்னஞ்சல் வழங்குநர்கள்” என்று தேடவும். புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியதும், அதைப் பயன்படுத்தி Google கணக்கை அமைக்கவும்.
புதிய Gmail முகவரிக்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் மின்னஞ்சல் முகவரி
- Google கணக்கு உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
- கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ் தோன்றும் மெனுவில் இருந்து எனது தனிப்பட்ட உபயோகத்திற்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் அடிப்படைத் தகவல்களை டைப் செய்யவும்.
- உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களின் தற்போதைய மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களிடம் ஏற்கெனவே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட குறியீட்டின் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும். கடவுச்சொல்லை உருவாக்கவும் செயல்முறையை நிறைவுசெய்யவும் திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
படி 2: மீட்புத் தகவலை வழங்குவதன் மூலம் கணக்கைப் பாதுகாக்கவும்
கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ உங்கள் அனுமதி இல்லாமல் வேறொருவர் உங்கள் கணக்கைப் பயன்படுத்தினாலோ நீங்கள் வழங்கும் மீட்புத் தகவல் உங்கள் கணக்கை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
சிக்கல்களைச் சரிசெய்தல்
உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கு உள்ளதா என்பதைச் சரிபார்த்தல்Gmail, Maps, YouTube போன்ற ஏதேனும் Google தயாரிப்பில் இதற்கு முன்பு உள்நுழைந்திருந்தால் உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கு உள்ளது. பிற Google தயாரிப்புகளில் உள்நுழைவதற்கும் நீங்கள் உருவாக்கிய அதே பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தலாம்.
உள்நுழைந்துள்ளீர்களா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாமல் இருந்து உங்களிடம் கணக்கு உள்ளதா என்று பார்க்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய Google கணக்கு இல்லையெனில் உங்களுக்கு மெசேஜ் காட்டப்படும்.
கணக்கு தொடர்பான அறிவிப்புகள் இயல்பாகவே உங்களின் புதிய Gmail முகவரிக்கோ, வேறு மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்திருந்தால் உங்களின் Google அல்லாத மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படும்.
அறிவிப்புகளைப் பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரியை மாற்ற உங்கள் தொடர்பு மின்னஞ்சல் முகவரியை மாற்றுங்கள்.
உதவிக்குறிப்பு: உங்களிடமுள்ள Google அல்லாத மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியும் நீங்கள் Google கணக்கை உருவாக்கலாம்.
புதிய கணக்கிற்கு இந்த மின்னஞ்சல் முகவரியை உங்களால் தேர்வுசெய்ய முடியாது. இந்த மின்னஞ்சல் முகவரி உங்களுடையதுதான் என்றால், நீங்கள்:
- ஏற்கெனவே Google கணக்கிற்குப் பதிவு செய்திருக்கலாம். உங்கள் Google கணக்கை மீட்டெடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- இந்த மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்பட்ட வருகையாளர் அமர்வு மூலம் Google Workspace பயனருடன் கூட்டுப்பணி செய்திருக்கலாம். உங்கள் வருகையாளர் அமர்வை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பின்வரும் சூழல்களில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் பயனர்பெயரில் Google கணக்கை உருவாக்க முடியாது:
- ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பது.
- ஏற்கெனவே இருக்கும் பயனர்பெயர் போன்றே கிட்டத்தட்ட இருப்பது.
- உதவிக்குறிப்பு: example@gmail.com என்ற முகவரி ஏற்கெனவே இருந்தால் examp1e@gmail.com என்பதை நீங்கள் பயன்படுத்த முடியாது.
- இதற்குமுன் ஒருவர் பயன்படுத்திவிட்டு நீக்கியது.
- ஸ்பேம் அல்லது தவறான பயன்பாட்டைத் தடுக்க Google ஒதுக்கியது.