மீட்பு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை அமைத்தல்

உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியாத நிலை ஏற்படும்போது கணக்கை மீட்டெடுக்க, மீட்புத் தகவலைச் சேர்க்கவும்.

மீட்டெடுப்பு விருப்பங்களைச் சேருங்கள்

முக்கியம்: பணி, பள்ளி, பிற குழு போன்றவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட கணக்கைப் பயன்படுத்தினால் இந்த வழிமுறைகள் வேலை செய்யாமல் போகலாம். உதவி பெற உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

மீட்புத் தகவல் உங்களுக்கு எப்படி உதவுகிறது?

பின்வரும் சூழல்களில் உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க மீட்பு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி உதவுகிறது:

  • நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால்
  • உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தும்போது
  • வேறு ஏதேனும் காரணத்திற்காக உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாதபோது

உதவிக்குறிப்பு: மீட்பு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை நீங்கள் மாற்றினாலும் மாற்றியதற்கு அடுத்த 7 நாட்களுக்கு உங்களின் பழைய மீட்பு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்குச் சரிபார்ப்புக் குறியீடுகளை Google தொடர்ந்து அனுப்பக்கூடும். யாரேனும் உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பயன்படுத்தத் தொடங்கினால் உடனடியாக அதன் அமைப்புகளைப் பாதுகாக்க இது உதவும்.

மீட்பு மொபைல் எண்ணைச் சேர்த்தல்/மாற்றுதல்

    1. Öppna Gmail-appen på en iPhone eller iPad.
    2. Tryck på profilbilden eller initialen uppe till höger அதன் பிறகு Google-konto. Om du inte använder Gmail besöker du myaccount.google.com.
  1. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  2. "இது நீங்கள்தான் என்பதைச் சரிபார்க்கும் வழிகள்" என்பதற்குக் கீழேயுள்ள மீட்பு மொபைல் எண்ணைத் தட்டவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  3. இங்கே நீங்கள்:
    • மீட்பு மொபைல் எண்ணைச் சேர்க்கலாம்.
    • மீட்பு மொபைல் எண்ணை மாற்றலாம்: மொபைல் எண்ணிற்கு அடுத்துள்ள மாற்று Edit என்பதைத் தட்டவும்.
    • மீட்பு மொபைல் எண்ணை நீக்கலாம்: மொபைல் எண்ணிற்கு அடுத்துள்ள நீக்கு Delete என்பதைத் தட்டவும்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் மீட்பு மொபைல் எண்ணை நீக்கிவிட்டீர்கள் என்றாலும் அது பிற Google சேவைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம். மொபைல் எண்களை நிர்வகிக்க, உங்கள் கணக்கிற்குச் செல்லவும்.

எந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது?

பின்வரும் தகுதிகளை உடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்துங்கள்:

  • மெசேஜ்களைப் பெறக்கூடியது
  • உங்களுக்கு மட்டுமே சொந்தமானது
  • உங்களுடனே வைத்திருந்து நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவது

மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்தல்/மாற்றுதல்

    1. Öppna Gmail-appen på en iPhone eller iPad.
    2. Tryck på profilbilden eller initialen uppe till höger அதன் பிறகு Google-konto. Om du inte använder Gmail besöker du myaccount.google.com.
  1. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  2. "இது நீங்கள்தான் என்பதைச் சரிபார்க்கும் வழிகள்" என்பதற்குக் கீழேயுள்ள மீட்பு மின்னஞ்சல் முகவரியைத் தட்டவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  3. இங்கே நீங்கள்:
    • மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கலாம்.
    • உங்கள் மீட்பு மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்/நீக்கலாம்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

எந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவது?

பின்வரும் தகுதிகளை உடைய மின்னஞ்சல் முகவரியைத் தேர்வுசெய்யவும்:

  • நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவது
  • உங்கள் Google கணக்கில் உள்நுழையப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி அல்லாத வேறு மின்னஞ்சல் முகவரி

மீட்புத் தகவல் எப்படிப் பயன்படுகிறது?

உங்கள் கணக்கை மீட்டெடுப்பதற்கும், அதைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் மீட்புத் தகவல்கள் உதவுகின்றன.

மீட்பு மொபைல் எண்

மீட்பு மொபைல் எண் இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தப்படலாம்:

  • உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாத சமயத்தில் அதை மீட்டெடுப்பதற்கான குறியீட்டை அனுப்புவதற்கு
  • உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு
  • கணக்கு உங்களுடையதுதான் என்பதை எளிதாக உறுதிசெய்வதற்கு
  • கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு

உங்கள் கணக்கில் நீங்கள் சேர்த்துள்ள வேறொரு மொபைல் எண்ணும் மீட்பு மொபைல் எண்ணும் ஒன்றாக இருந்தால் அது வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம். மொபைல் எண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிக.

மீட்பு மின்னஞ்சல் முகவரி

மீட்பு மின்னஞ்சல் முகவரி இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தப்படலாம்:

  • மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய பிறகு பயனர்பெயரை உறுதிசெய்வதற்கு
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ வேறு காரணத்திற்காக உள்நுழைய முடியவில்லை என்றாலோ கணக்கை மீட்டெடுக்க உதவுவதற்கு
  • சேமிப்பிடம் நிரம்பவுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு
  • கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு

சிக்கல்களைச் சரிசெய்தல்

உள்நுழைய முடியவில்லை

கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்திற்குச் சென்று உங்களால் முடிந்தவரை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளியுங்கள். இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

பின்வரும் சூழல்களில் கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்தைப் பயன்படுத்தவும்:

  • நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால்.
  • வேறொருவர் உங்கள் கடவுச்சொல்லை மாற்றியிருந்தால்.
  • வேறொருவர் உங்கள் கணக்கை நீக்கியிருந்தால்.
  • வேறு காரணத்திற்காக உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாதபோது.

உதவிக்குறிப்பு: நீங்கள் சரியான கணக்கில்தான் உள்நுழைய முயல்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ள, உங்கள் பயனர்பெயரை மீட்டெடுக்க முயலவும்.

மீட்புத் தகவல்களை மாற்ற முடியவில்லை

நீங்கள் உள்நுழையும் முறையில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக இருந்தால் உங்கள் மீட்புத் தகவல்களை மாற்றுவதற்கான விருப்பம் காட்டப்படாமல் போகலாம். அத்தகைய சமயங்களில்:

  • உள்நுழைவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சாதனத்தில் இருந்து மீண்டும் முயலவும்.
  • வழக்கமாக உள்நுழையும் இடத்தில் இருந்து மீண்டும் முயலவும்.
  • தற்போது பயன்படுத்தும் சாதனத்தில் இருந்து அடுத்த வாரம் மீண்டும் முயலவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16825399845870382590
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false