செயலில் இல்லாத Google கணக்கிற்கான கொள்கை

ஒரே பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி Google Ads, Gmail, YouTube போன்ற பெரும்பாலான Google தயாரிப்புகளை Google முழுவதும் பயன்படுத்துவதற்கான அணுகலை Google கணக்கு உங்களுக்கு வழங்குகிறது.

செயலில் இல்லாத Google கணக்கு என்பது 2 ஆண்டுகளில் ஒருமுறைகூடப் பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்காகும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு Google சேவை எதையும் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், செயலில் இல்லாத Google கணக்கு மட்டுமின்றி அதன் செயல்பாட்டையும் தரவையும் நீக்குவதற்கான முழு அதிகாரமும் Googleளுக்கு உள்ளது.

இந்தக் கொள்கை உங்களின் தனிப்பட்ட Google கணக்கிற்குப் பொருந்தும். பணி, பள்ளி அல்லது பிற நிறுவனத்தின் மூலம் உங்களுக்காக அமைக்கப்பட்ட எந்தவொரு Google கணக்கிற்கும் இந்தக் கொள்கை பொருந்தாது.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட ஒரு தயாரிப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில் அந்தத் தயாரிப்பில் இருக்கும் தரவை நீக்குவதற்கான முழு அதிகாரமும் Googleளுக்கு உள்ளது. ஒவ்வொரு தயாரிப்பின் செயலற்ற நிலை தொடர்பான கொள்கையின் அடிப்படையில் இந்தக் கால அளவு தீர்மானிக்கப்படும்.

Google எப்படிச் செயல்பாட்டை வரையறுக்கிறது?

பயன்பாட்டில் உள்ள ஒரு Google கணக்கு செயலில் உள்ளதாகக் கருதப்படுகிறது. நீங்கள் Google கணக்கில் உள்நுழையும்போது அல்லது உள்நுழைந்திருக்கும்போது செய்யும் இந்தச் செயல்கள் ‘செயல்பாட்டில்’ அடங்கலாம்:

  • மின்னஞ்சலைப் படித்தல் அல்லது அனுப்புதல்
  • Google Driveவைப் பயன்படுத்துதல்
  • YouTube வீடியோவைப் பார்த்தல்
  • படத்தைப் பகிர்தல்
  • ஆப்ஸைப் பதிவிறக்குதல்
  • Google Searchசைப் பயன்படுத்துதல்
  • மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் உள்நுழைய 'Google மூலம் உள்நுழைக' அம்சத்தைப் பயன்படுத்துதல்

Google கணக்கின் செயல்பாடுகள் சாதனத்தின் அடிப்படையில் அல்லாமல் கணக்கின் அடிப்படையிலேயே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள எந்தச் சாதனத்திலும் (உதாரணமாக உங்கள் ஃபோன்) நீங்கள் இந்தச் செயல்களைச் செய்யலாம்.

உங்கள் சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகளை அமைத்திருந்தால், ஒவ்வொரு கணக்கையும் 2 ஆண்டுகளில் ஒருமுறையாவது பயன்படுத்தியிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

உங்கள் Google கணக்கு செயலில் இல்லையெனில் என்ன நடக்கும்?

உங்கள் Google கணக்கு 2 வருடக் காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலற்றதாகக் கருதப்படுவதுடன் அதன் அனைத்து உள்ளடக்கமும் தரவும் நீக்கப்படலாம். இது நடப்பதற்கு முன்பு, Google இவற்றை உங்களுக்கு அனுப்பும்போது நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்:

  • உங்கள் Google கணக்கிற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் அறிவிப்புகள்
  • உங்களிடம் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஏதேனும் இருந்தால் அதற்கு அனுப்பப்படும் அறிவிப்புகள்

குறிப்பிட்ட தயாரிப்பில் உங்கள் கணக்கு 2 வருடக் காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், உங்கள் தரவை நீக்குவதற்கான முழு அதிகாரமும் Google தயாரிப்புகளுக்கு உள்ளது.

இந்தக் கொள்கையின்படி டிசம்பர் 1, 2023ல் இருந்து Google கணக்கு நீக்கப்படும்.

இந்தக் கொள்கையில் உள்ள விலக்குகள்

2 ஆண்டுகளில் ஒருமுறைகூடக் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நிகழ்ந்திருந்தால் Google கணக்கு செயலில் உள்ளதாகக் கருதப்படும்:

  • Google தயாரிப்பு, ஆப்ஸ், சேவை அல்லது தற்போதைய/நடப்பில் உள்ள சந்தாவை வாங்க உங்கள் Google கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது.
  • உங்கள் Google கணக்கில் பேலன்ஸுடன் கிஃப்ட் கார்டு இருப்பது.
  • உங்கள் Google கணக்கு மூலம் ஓர் ஆப்ஸ் அல்லது கேம் வெளியிடப்பட்டிருப்பது. அவை நடப்பிலுள்ள மற்றும் செயலில் உள்ள சந்தாக்களையும் அவற்றுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளையும் கொண்டிருக்க வேண்டும். இது Google Play Storeரில் சொந்தமாக ஆப்ஸை வைத்திருக்கும் Google கணக்காக இருக்கலாம்.
  • Family Link மூலம் வயது வராதோருக்கான செயலில் உள்ள கணக்கை உங்கள் Google கணக்கு நிர்வகிப்பது.
  • புத்தகம், திரைப்படம் போன்ற டிஜிட்டல் உள்ளடக்கத்தை வாங்க உங்கள் Google கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது.

உங்கள் கணக்கை நீக்க வேண்டுமெனில்

உங்கள் Google கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். மேலும் அறிக.
உங்கள் கணக்கின் தரவைப் பதிவிறக்க வேண்டுமெனில்
நீங்கள் பயன்படுத்தும் Gmail, Photos, YouTube போன்ற Google தயாரிப்புகளில் இருந்து தரவை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம் பதிவிறக்கலாம். மேலும் அறிக.
உங்கள் கணக்கை மீட்டெடுக்க வேண்டுமெனில்
உங்கள் Google கணக்கை நீக்கியபிறகு அது வேண்டுமென நினைத்தால் கணக்கை நீங்கள் மீட்டெடுக்கலாம். மேலும் அறிக.
உங்கள் கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமெனில்
உங்கள் Google கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். ராணுவப் பணியில் இருக்கும்போது மேற்கொள்ளும் பயணங்கள், சிறைத் தண்டனைகள், புனித யாத்திரைகள் போன்றவற்றின்போது நீங்கள் கணக்கை இடைநிறுத்த விரும்பலாம். மேலும் அறிக.
உங்கள் செயல்பாட்டு நிலையை எப்படிச் சரிபார்ப்பது?
உங்கள் Google கணக்கு செயலில் இருக்கிறதா இல்லையா என உறுதியாகத் தெரியவில்லை எனில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

இன்னும் உதவி தேவையா?

உங்களுக்கு இன்னமும் சிக்கல்களோ கேள்விகளோ இருந்தால் சமூகத்திடம் கேட்கலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8583627722922406053
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false