குரல் தேடல் மூலம் வீடியோக்களைக் கண்டறிதல்

வீடியோக்களைக் கண்டறிய குரல் தேடலைப் பயன்படுத்துதல்.

YouTube குரல் தேடலில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை நிர்வகித்தல்

முக்கியம்: பிற அமைப்புகளின் அடிப்படையில் ஆடியோ ரெக்கார்டிங்குகள் வேறு இடங்களிலும் சேமிக்கப்படலாம்.

Google சேவையான YouTube குரல் தேடல் அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் பேசும்போது அந்த ஆடியோவைச் செயலாக்கி உங்களுக்குப் பதிலளிக்க, Google தனது ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.

YouTube ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு, YouTubeல் குரல் தேடல் அம்சத்துடன் நீங்கள் பேசுகின்றவற்றின் ஆடியோ ரெக்கார்டிங்குகளை உங்கள் Google கணக்கில் YouTube செயல்பாடுகளில் சேமிக்கும். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, Google அதன் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த உங்கள் YouTube செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் இயக்கும் வரை இந்த ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்.

ஆடியோ ரெக்கார்டிங்குகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

YouTube செயல்பாடுகளில் ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேமிக்கத் தேர்வுசெய்தால், தனது ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களையும் அவற்றைப் பயன்படுத்தும் YouTube குரல் தேடல் போன்ற Google சேவைகளையும் உருவாக்க மற்றும் மேம்படுத்த Google அந்த ஆடியோ ரெக்கார்டிங்குகளைப் பயன்படுத்தும்.

சில ஆடியோ தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு, பயிற்சி பெற்ற மதிப்பாய்வாளர்கள் ஆடியோ மாதிரிகளைக் கேட்டு எழுத்தாக்கம் செய்து விரிவுரையைச் சேர்ப்பார்கள். இதனால் Google சேவைகளால் ஆடியோவை மேலும் சிறப்பாகப் பகுப்பாய்வு செய்ய முடியும். மதிப்பாய்வாளர்கள் ஆடியோவைப் பகுப்பாய்வு செய்யும்போது, உங்கள் கணக்கில் இருந்து ஆடியோவைப் பிரித்து தனியாக வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் Google மேற்கொள்ளும்.

குரல் தேடலைத் தொடங்குதல்

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. தேடுக Search என்பதைத் தட்டவும்.
  3. மைக்கை தட்டவும்.
  4. மைக்ரோஃபோனுக்கான அணுகலை வழங்கவும். ரெக்கார்டிங் உடனடியாகத் தொடங்கும்.
    • ரெக்கார்டிங்கை நிறுத்த: மைக்கை தட்டவும்.
    • பின்செல்ல அல்லது ரெக்கார்டிங்கை ரத்துசெய்ய: அகற்று Remove என்பதைத் தட்டவும்.

மைக்ரோஃபோன் அனுமதிகளை மாற்றுதல்

நீங்கள் ஏற்கெனவே மைக்ரோஃபோன் அனுமதிகளை நிராகரித்திருந்தால், மொபைல் அமைப்புகளுக்குச் சென்று மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்குமாறு கேட்கப்படும்.

  1. மைக்ரோஃபோன் அனுமதிகளுக்கான அறிவிப்பு காட்டப்பட்டால்: அமைப்புகளுக்குச் செல்ல அறிவிப்பைத் தட்டவும்.
  2. மைக்ரோஃபோன் அனுமதிகளுக்கான அறிவிப்பு காட்டப்படவில்லை என்றால்: உங்கள் ஃபோனில் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  3. ஆப்ஸ் & அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. YouTube ஆப்ஸைக் கண்டறியவும்.
  5. YouTube அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. அனுமதிகள் என்பதைத் தட்டவும்.
  7. மைக்ரோஃபோன் என்பதைத் தட்டவும்.
  8. ஆப்ஸை உபயோகிக்கும்போது மட்டும் அனுமதி என்பதையோ ஒவ்வொரு முறையும் கேள் என்பதையோ தட்டவும்.

அதன்பிறகு YouTube ஆப்ஸைப் பயன்படுத்தும்போது உங்களால் குரல் மூலம் தேட முடியும்.

உங்கள் குரலைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் வழிகள்

தற்போது இந்தக் கட்டளைகள் Androidல் மட்டுமே கிடைக்கின்றன. சில கட்டளைகள் சில மொழிகளில் கிடைக்காமல் போகலாம்.

குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பார்த்தல் அல்லது கேட்டல்

  • ஏதோ ஒரு டிராக் அல்லது வீடியோவிற்கு நேரடியாகச் செல்ல: "ஏதாவது மியூசிக் பிளே பண்ணு" எனச் சொல்லவும்.
  • குறிப்பிட்ட கலைஞரின் வீடியோ அல்லது மியூசிக்கைப் பிளே செய்ய: "அனிருத் பாடல்களைப் பிளே பண்ணு" எனச் சொல்லவும்.
  • குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த வீடியோ அல்லது மியூசிக்கைப் பிளே செய்ய: "நாதஸ்வர மியூசிக் பிளே பண்ணு" எனச் சொல்லவும்.
  • உங்கள் மனநிலைக்கு ஏற்ப வீடியோ அல்லது மியூசிக்கைப் பிளே செய்ய: "அமைதியான மியூசிக் பிளே பண்ணு" எனச் சொல்லவும்.
  • பரிந்துரைகளில் இருக்கும் வீடியோவைப் பிளே செய்ய: “பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களைப் பிளே பண்ணு” எனச் சொல்லவும்.

YouTubeல் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்லுதல்

  • சந்தாக்களுக்குச் செல்ல: "என்னோட சந்தாக்களைக் காட்டு" அல்லது "என்னோட சந்தால புதுசா என்ன இருக்கு?" எனச் சொல்லவும்
  • இதுவரை பார்த்தவைக்குச் செல்ல: "இதுவரை பார்த்தவையைக் காட்டு" எனச் சொல்லவும்.
  • லைப்ரரிக்குச் செல்ல: "என்னோட லைப்ரரியைக் காட்டு" எனச் சொல்லவும்.
  • கிரியேட்டரின் சமீபத்திய பதிவேற்றங்களுக்குச் செல்ல: "TeamYouTubeன் சமீபத்திய வீடியோக்களைக் காட்டு" எனச் சொல்லவும்.
  • இப்போது நீங்கள் பார்க்கும் வீடியோவுடன் தொடர்புடைய வீடியோக்களைப் பார்க்க: "தொடர்புடைய வீடியோக்களைக் காட்டு" எனச் சொல்லவும்.
  • ஒரு புதிய வீடியோவைக் கண்டறிய: "YouTubeல என்ன இருக்கு?" எனச் சொல்லவும்

ஆடியோ ரெக்கார்டிங்குகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. உங்கள் சாதனத்தின் Settings ஆப்ஸைத் திறந்து அதன் பிறகு Google என்பதற்குச் செல்லவும்.
  2. Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதன் கீழ் உள்ள YouTube செயல்பாடுகள் என்பதைத் தட்டவும்.
  5. அமைப்பை இயக்க/முடக்க, "ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

இவை அனைத்தும் நடந்திருந்தால் மட்டுமே Google கணக்கின் YouTube செயல்பாடுகளில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்கும்

  • உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்க வேண்டும்.
  • ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் உள்நுழைந்திருந்தாலும் Google கணக்கின் YouTube செயல்பாடுகளில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்காது.
  • YouTubeல் நீங்கள் குரல் மூலம் தேட வேண்டும்.
    • Google Search அல்லது Assistantடைப் பயன்படுத்தி YouTubeல் தேடும்போது ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு ஆடியோவைச் சேமிக்காது.

ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள நிலையில் YouTubeல் குரல் தேடலை இயக்கினால், உங்கள் Google கணக்கின் YouTube செயல்பாடுகளில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்கும். Google Search அல்லது Assistantடைப் பயன்படுத்தி YouTubeல் தேடும்போது இந்த அமைப்பு ஆடியோவைச் சேமிக்காது.

ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பு முடக்கப்பட்ட நிலையில் YouTubeல் நீங்கள் குரல் தேடலை இயக்கும்போது, உள்நுழைந்திருந்தாலும் Google கணக்கின் YouTube செயல்பாடுகளில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்காது. நீங்கள் Google சேவைகளுடன் பேசும்போது உங்களுக்குப் பதிலளிக்க எங்களுக்கு உதவுவதற்காக Google உங்கள் ஆடியோவைத் தொடர்ந்து செயலாக்கும்.

YouTube வீடியோக்களைக் குரல் மூலம் தேட நீங்கள் பயன்படுத்தக்கூடிய Google Search, Assistant போன்ற பிற Google சேவைகளால் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஆடியோவை YouTube குரல் தேடல் ஆடியோ அமைப்பு பாதிக்காது. Google Search, Assistant, Maps ஆகியவற்றில் இருந்து உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடுகளில் ஆடியோ சேமிக்கப்பட வேண்டுமா என்பதை activity.google.com தளத்தில் கட்டுப்படுத்தலாம்.

ஆடியோ ரெக்கார்டிங் அமைப்பை முடக்கினால், ஏற்கெனவே சேமிக்கப்பட்ட ஆடியோ நீக்கப்படாது. எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளை நீங்கள் நீக்கலாம்.

ஆடியோ ரெக்கார்டிங்குகளைக் கண்டறிதல் அல்லது நீக்குதல்

ஆடியோ ரெக்கார்டிங்குகளைக் கண்டறிதல்

முக்கியம்: "டிரான்ஸ்கிரிப்ட் இல்லை" என்னும் மெசேஜ் காட்டப்பட்டால் ரெக்கார்டிங்கில் பின்புல இரைச்சல் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

உங்கள் Google கணக்கு அமைப்புகளுக்கு ஏற்ப ஆடியோ ரெக்கார்டிங்குகள் வேறு இடங்களிலும் சேமிக்கப்படலாம்.

YouTube செயல்பாடுகளில் சேமிக்கப்பட்டுள்ள YouTube குரல் தேடல் ஆடியோவைக் கண்டறிய:

  1. உங்கள் சாதனத்தின் Settings ஆப்ஸைத் திறந்து அதன் பிறகு Google என்பதற்குச் செல்லவும்.
  2. Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதன் கீழ் உள்ள YouTube செயல்பாடுகள் அதன் பிறகு செயல்பாடுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். நீங்கள்:
    • உங்கள் கடந்தகாலச் செயல்பாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம். ஆடியோ உள்ள செயல்பாடுகளில் ரெக்கார்டிங் இருக்கும்.
    • ரெக்கார்டிங்கைப் பிளே செய்ய: ஆடியோ என்பதற்கு அடுத்துள்ள விவரங்கள் அதன் பிறகு ரெக்கார்டிங்கைக் காட்டு அதன் பிறகு பிளே செய் Play என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்ப்பதற்கான கூடுதல் சரிபார்ப்புப் படியைக் கேட்குமாறு அமைக்கலாம்.

YouTube செயல்பாடுகளில் இருந்து ரெக்கார்டிங்குகளை நீக்குதல்

ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் நீக்குதல்

  1. உங்கள் சாதனத்தின் Settings ஆப்ஸைத் திறந்து அதன் பிறகு Google என்பதற்குச் செல்லவும்.
  2. Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  3. தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதன் கீழ் உள்ள YouTube செயல்பாடுகள் அதன் பிறகு செயல்பாடுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
    • உங்கள் கடந்தகாலச் செயல்பாடுகள் பட்டியல் காட்டப்படும்.
    • ஆடியோ உள்ள செயல்பாடுகளில் ரெக்கார்டிங் இருக்கும்.
  5. நீக்க விரும்பும் செயல்பாட்டிற்கு அடுத்துள்ள நீக்கு Remove அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.

ஒரே நேரத்தில் அனைத்தையும் நீக்குதல்

இந்தப் படிகளைப் பின்பற்றினால் ரெக்கார்டிங் உள்ள செயல்பாடுகள் மட்டுமின்றி YouTube செயல்பாடுகள் பட்டியலில் இருக்கும் அனைத்துச் செயல்பாடுகளும் நீக்கப்படும்.

  1. உங்கள் சாதனத்தின் Settings ஆப்ஸைத் திறந்து அதன் பிறகு Google என்பதற்குச் செல்லவும்.
  2. Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  3. தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதன் கீழ் உள்ள YouTube செயல்பாடுகள் அதன் பிறகு செயல்பாடுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
    • உங்கள் கடந்தகாலச் செயல்பாடுகள் பட்டியல் காட்டப்படும்.
    • ஆடியோ உள்ள செயல்பாடுகளில் ரெக்கார்டிங் இருக்கும்.
  5. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே, நீக்கு Down Arrow என்பதைத் தட்டவும்.
  6. இதுவரை அனைத்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. உங்கள் செயல்பாட்டை நீக்க, வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளைத் தானாகவே நீக்குதல்

தானாக நீக்கும் விருப்பம் ஆடியோ ரெக்கார்டிங் உள்ள செயல்பாடுகளை மட்டுமின்றி YouTube செயல்பாடுகள் பட்டியலில் இருக்கும் அனைத்துச் செயல்பாடுகளையும் நீக்கும்.

  1. உங்கள் சாதனத்தின் Settings ஆப்ஸைத் திறந்து அதன் பிறகு Google என்பதற்குச் செல்லவும்.
  2. Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  3. தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்” என்பதன் கீழ் உள்ள YouTube செயல்பாடுகள் அதன் பிறகு தானாக நீக்குதல் என்பதைத் தட்டவும்.
  5. YouTube செயல்பாடுகளைத் தானாக நீக்குவதற்கான ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  6. இதற்கு முந்தைய செயல்பாடுகளைத் தானாக நீக்கு என்பதைத் தட்டவும்.
  7. செயல்பாடுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. அடுத்து என்பதைத் தட்டவும்.
  9. உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.

உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் தேவைப்படவில்லை எனில் ஆடியோவை Google முன்னதாகவே நீக்கக்கூடும். உதாரணமாக, காலப்போக்கில் சில மொழிகளுக்குக் குறைவான ஆடியோவே தேவைப்படக்கூடும்.

ஆடியோ ரெக்கார்டிங்குகளை நிர்வகித்தல்

YouTube செயல்பாடுகளில் சேமிக்கப்படும் ஆடியோ ரெக்கார்டிங்குகளை activity.google.com தளத்தில் நிர்வகிக்கலாம். உதாரணமாக நீங்கள்:

  • YouTube செயல்பாடுகள் அமைப்பின் கீழ், ஆடியோ ரெக்கார்டிங் அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம் முடக்கலாம்.
  • உங்கள் ஆடியோவைக் கேட்கலாம்.
  • தானாக நீக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஆடியோவை நீங்களே நீக்கலாம்.
    • உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் தேவைப்படவில்லை எனில் ஆடியோவை Google முன்னதாகவே நீக்கக்கூடும். உதாரணமாக, காலப்போக்கில் சில மொழிகளுக்குக் குறைவான ஆடியோவே தேவைப்படக்கூடும்.
  • உங்கள் ஆடியோவை takeout.google.com தளத்தில் பதிவிறக்கலாம்.

Google சேமிக்கும் பிற தரவைப் பற்றியும், அவை சேமிக்கப்படுவதற்கான காரணத்தைப் பற்றியும், எங்கள் சேவைகளை மேம்படுத்த அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் policies.google.com தளத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். உங்கள் தகவல்களைத் தொழில்நுட்பங்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதையும், எங்கள் சேவைகளில் தனியுரிமையை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுகள் உங்களுக்கு எப்படி உதவுகின்றன என்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

ஆடியோ ரெக்கார்டிங்குகள் சேமிக்கப்படக்கூடிய வேறு இடங்கள்

YouTube வீடியோக்களைக் குரல் மூலம் தேட நீங்கள் பயன்படுத்தக்கூடிய Google Search, Assistant போன்ற பிற Google சேவைகளால் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஆடியோவை YouTube குரல் தேடல் ஆடியோ அமைப்பு பாதிக்காது. Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் பேசும்போது பதிவாகும் ஆடியோ உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடுகளில் சேமிக்கப்பட வேண்டுமா என்பதை activity.google.com தளத்தில் கட்டுப்படுத்தலாம்.

பிற நோக்கங்களுக்காக உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஆடியோவையும் இந்த அமைப்பு பாதிக்காது. உதாரணமாக, உங்கள் பிரத்தியேக Voice Matchசை அமைக்கும்போது, மேம்படுத்தும்போது அல்லது உங்கள் சாதனத்தில் ஆடியோ தொழில்நுட்பங்களைப் பிரத்தியேகப்படுத்தும்போது சேமிக்கப்படும் ஆடியோவை இது பாதிக்காது.

ஃபெடரேட்டட் லேர்னிங் அல்லது எஃபிமெரல் லேர்னிங்கைப் பயன்படுத்தும் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த, இந்த அமைப்பினால் கட்டுப்படுத்தப்படாத பிற மெஷின் லேர்னிங் செயல்முறைகளை Google பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு:

  • 'Gboardஐ மேம்படுத்த உதவுக' அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது, பேச்சு அறிதல் தொழில்நுட்பங்களை அனைவருக்கும் மேம்படுத்த Gboard உங்கள் சாதனத்தில் ஆடியோவைச் சேமித்து, செயலாக்கக்கூடும். நீங்கள் பேசுவதை அது சேவையகத்திற்கு அனுப்பாது. Gboard எப்படி மேம்படுகிறது என்பதை அறிக.
  • எஃபிமெரல் லேர்னிங்கைப் பயன்படுத்தும் தனது ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த, Google உங்கள் ஆடியோவை நிகழ்நேரத்தில் செயலாக்கிப் பகுப்பாய்வு செய்யக்கூடும். இந்தச் செயல்முறை உங்கள் YouTube செயல்பாடுகளில் ஆடியோவைச் சேமிக்காது. மேலும் அறிய yt.be/speechlearningmodels தளத்தைப் பார்க்கவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14286995402279434411
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false