அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் வேலைகளைத் தேடுதல்

நீங்கள் வேலை வாய்ப்புகளை Googleளில் தேட முடியும். உதாரணமாக இவற்றை நீங்கள் தேடலாம்:  எனக்கு அருகிலுள்ள வேலைகள் அல்லது நிதி சார்ந்த தொடக்கநிலை வேலைகள்.

கவனத்திற்கு: இந்த அம்சம் அனைத்து மொழிகளில் அல்லது நாடுகளில் கிடைக்காது. 

இந்தத் தரவு எங்கிருந்து பெறப்படுகிறது?

இணையம் முழுவதிலும் உள்ள நிறுவனங்களிடமிருந்தும் வேலைவாய்ப்புத் தளங்களில் இருந்தும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் பெறப்படுகின்றன.

பயனர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்கும் வகையில் பலன்கள், ஒப்பந்த வகை, உடல்நலக் காப்பீடு போன்ற விவரங்களை வேலை தொடர்பான விளக்கத்தில் இருந்து Google தானாகவே கண்டறியலாம். பண்புக்கூறு ஐகான்கள் போன்ற வித்தியாசமான வேலை தேடல் அம்சங்களில் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம்.

வேலைகளைத் தேடுதல்

இருப்பிடத்தின் அடிப்படையில் தேடுதல்

  • உங்களுக்கு அருகில் உள்ள வேலைகளைத் தேடுதல்உணவு பரிமாறுபவருக்கான (சர்வர்) வேலைகள் போன்று இருப்பிட விவரமின்றி வேலையைத் தேடவும். அல்லது: எனக்கு அருகில் உள்ள உணவு பரிமாறுபவருக்கான (சர்வர்) வேலைகள் என டைப் செய்யவும்.
  • வேறு எங்காவது வேலை தேடுதல்: இருப்பிடத்தைத் தேடலில் சேர்க்கவும். உதாரணமாக, சென்னையில் காசாளர் வேலைகள்.
  • வீட்டில் இருந்து பணிபுரியக்கூடிய வேலைகளைத் தேடுதல்வீட்டிலிருந்து பணிபுரிதல் எனத் தேடவும் அல்லது அது தொடர்பான குறிப்பிட்ட வேலைகளைத் தேடவும். உதாரணமாக,  வீட்டில் இருந்தே பணிபுரியும் வகையிலான வாடிக்கையாளர் சேவை வேலைகள். வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய வேலைகளைத் தேட 'வீட்டிலிருந்து பணிபுரிதல்' வடிப்பானையும் பயன்படுத்தலாம்.
  • துல்லியமான முடிவுகளைப் பெற வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.

பட்டம் அல்லது பாடப் பிரிவின்படி தேடுதல்

முக்கியமானது: இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது.

  1. Googleளுக்குச் செல்லவும்.
  2. வேலைகள் எனத் தேடவும்.
    • இருப்பிடத்தைக் குறிப்பிடாமல் தேட: உயிரியல் பட்டதாரிகளுக்கான வேலைகள் எனத் தேடவும்.
    • குறிப்பிட்ட இருப்பிடத்திற்குள் தேட:பொருளாதாரப் பட்டதாரிகளுக்கு நியூயார்க் நகரத்தில் உள்ள வேலைகள் எனத் தேடவும்.
  3. முடிவுகளைச் சுருக்க வேலைவாய்ப்பு விவரங்களுக்கு மேலே தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தேடலைச் சுருக்குதல்

  1. Googleளுக்குச் செல்லவும். வேலையைத் தேடவும்.
  2. நீல வண்ணப் பெட்டியில் வேலைகள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  3. முடிவுகளைச் சுருக்க, வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் ஆங்கிலத்தில் தேடும்போது 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' இயக்கப்பட்டிருந்தால் Googleளில் வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட முந்தைய தேடல் செயல்பாடுகளின் அடிப்படையில் நீங்கள் இதுவரை பார்த்திராத வேலைகள் மட்டும் கிடைக்குமாறு முடிவுகளைச் சுருக்க முடியும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை எப்படி நிர்வகிப்பது என அறிக. 

குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து வேலைகளைப் பார்த்தல்

  1. Googleளுக்குச் செல்லவும். வேலையைத் தேடவும்.
  2. நீல வண்ணப் பெட்டிக்குக் கீழ் வேலையைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  3. "விண்ணப்பி" என்பதற்குக் கீழ் வேலையை வெளியிட்ட தளத்தைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

இராணுவ வேலைப் பிரிவிற்கான (MOS) குறியீட்டின் அடிப்படையில் தேடுதல்

அமெரிக்க இராணுவத்தில் உள்ளீர்கள் அல்லது அதிலிருந்து ஓய்வு பெறப்போகிறீர்கள் எனில் உங்கள் திறன்களுக்கு ஏற்ப குடிமைப் பணிகளைக் கண்டறியலாம். உங்களின்  MOS, AFSC அல்லது NECயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது அமெரிக்காவில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் MOSஸின் படி வேலைகளைத் தேட முடியும். அர்ஜெண்டினா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, இந்தியா, கென்யா, மெக்சிகோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் யூகே உட்பட மற்ற சில நாடுகளிலும் உங்களால் தேட முடியும்.

  1. Googleளுக்குச் செல்லவும்.
  2. வேலைகளைத் தேடவும்.
    • நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான வேலைகள் எனத் தேடவும்.
    • நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு டெக்சாஸில் உள்ள வேலைகள் என அமெரிக்க இருப்பிடத்தையும் சேர்த்துக் குறிப்பிடவும்.
  3. நீல வண்ணப் பெட்டியில் உங்கள் MOS குறியீட்டை டைப் செய்யவும். எ.கா. 11B.

வேலைக்குச் சென்று வருவதற்கான பயண நேரத்தைப் பெறுதல்

வீட்டிலிருந்து வேலைக்குச் செல்ல ஆகக்கூடிய வழக்கமான பயண நேரத்தை நீங்கள் பார்க்க முடியும்.

  1. வீட்டு முகவரியைச் சேர்க்கவும். அதைச் சேர்க்கவில்லை எனில் உங்களது தற்போதைய இருப்பிடத்தில் இருந்து வேலைக்கான பயண நேரத்தைக் காட்ட Google முயற்சி செய்யும்.
  2. Googleளுக்குச் செல்லவும். வேலையைத் தேடவும்.
  3. நீல வண்ணப் பெட்டியில் வேலைகள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  4. வேலையின் பெயருக்குக் கீழே வேலைக்கான பயண நேரம் காட்டப்படும்Commute time. நேரம் காட்டப்படவில்லை எனில் அந்த வேலைக்கான பயண நேரம் கிடைக்கவில்லை என அர்த்தம்.

வேலையைச் சேமித்தல்

  1. Googleக்குச் செல்லவும் . வேலையைத் தேடவும்.
  2. நீல வண்ணப் பெட்டியில் வேலைகள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  3. வேலைக்கு அடுத்துள்ள சேமி Add to என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சேமித்த வேலைகளைக் கண்டறிய வேலை ஒன்றைத் தேடி சேமிக்கப்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.

Googleளில் வேலைகளைச் சேர்த்தல்

உங்கள் வணிகத்தில் வேலைவாய்ப்புகள் இருந்தால் அவற்றை Googleளில் தேடுவதற்கு உதவும் தன்மையில் அமைப்பது எப்படி என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1582209251328588967
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false