YouTube செயல்பாட்டு வழிகாட்டி

வரவேற்கிறோம்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

YouTubeல் உங்கள் இயக்கச் செயல்முறைகளை நிர்வகிக்க உதவும் முக்கிய உதவிக்குறிப்புகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகளைக் கொண்ட விரிவான மற்றும் சமீபத்திய தகவல்மூலத்தை எங்கள் கூட்டாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். YouTubeல் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே உங்கள் உள்ளடக்க உரிமையாளர் டாஷ்போர்டின் அனைத்துச் செயல்பாடுகளையும் நீங்கள் நிர்வகிப்பதற்காக, சமீபத்திய சிறந்த நடைமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

இந்தத் தகவல்மூலம் எங்கள் கூட்டாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் எங்களின் மிகவும் அனுபவமிக்க கூட்டாளர்களை மனதில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சில அடிப்படைக் கருவிகள் குறித்த தகவல்களை நினைவூட்டும் விதமாகப் பிளேபுக்கின் முதல் பகுதி அமைந்துள்ளது. நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது உரிமைகள் நிர்வாகம், உள்ளடக்கப் பரிமாற்றம் போன்ற மேம்பட்ட தலைப்புகளில் அமைந்த எங்களின் கட்டுரைகளையும் காண்பீர்கள். இந்தத் தகவல்கள் உங்கள் இயக்கச் செயல்முறைக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்!

  பயனுள்ள உதவிக்குறிப்புகள்

ஒவ்வொரு பிரிவின் இறுதியிலும் எங்களின் அனுபவமிக்க YouTube செயல்பாட்டுக் குழுவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கூட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும் செயல்திறனை மேம்படுத்துவதில் வல்லுநர்கள் போல் செயல்படுகிறோம், எனவே இந்த உதவிக்குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.

 மேம்பட்ட தகவல்மூலங்கள்:

குறிப்பிட்ட தலைப்புகள், கேஸ் ஸ்டடிகள் மற்றும் பிற உதவி முறைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய இந்த இணைப்புகள் மூலம் எங்களின் உதவி மையத்திற்கும் பிற உதவிக் கட்டுரைகளுக்கும் செல்லுங்கள். கூடுதல் வழிகாட்டுதலுக்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் YouTube கூட்டாளர் நிர்வாகியைத் தொடர்புகொள்ளலாம். எனினும் இந்தப் பிளேபுக்கை முழுவதுமாகப் படித்து முடித்ததும் உங்களுக்கு அந்தத் தேவை இருக்காது!

தொடங்கலாம்!

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6382213116368139552
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false