'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட' வீடியோக்களைப் பார்த்தல்

சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்துடனும் (COPPA - Children’s Online Privacy Protection Act) பிற சட்டங்களுடனும் இணங்க, 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை' என அமைக்கப்பட்ட உள்ளடக்கத்திற்குச் சில அம்சங்கள் கட்டுப்படுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம்.

Features impacted by COPPA: Made for Kids content

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ முகப்பு அல்லது வீடியோ இயக்கப் பக்கங்களில் கிடைக்காத அம்சங்கள்:

  • முகப்புப்பக்கத்தில் வீடியோக்களைத் தானாக இயக்குதல்
  • கார்டுகள் அல்லது இறுதித் திரைகள்
  • வீடியோ வாட்டர்மார்க்குகள்
  • சேனல் மெம்பர்ஷிப்கள்
  • கருத்துகள்
  • நன்கொடை பட்டன்
  • நேரலை அரட்டை அல்லது நேரலை அரட்டையில் நன்கொடை பெறுதல்
  • விற்பனைப் பொருட்கள் மற்றும் டிக்கெட் விற்பனை
  • அறிவிப்புகள்
  • பிரத்தியேக விளம்பரங்கள்
  • மினிபிளேயரில் வீடியோவை இயக்குதல்
  • Super Chat அல்லது Super Stickers
  • பிளேலிஸ்ட்டில் சேமித்தல் மற்றும் பிறகு பார்ப்பதற்குச் சேமித்தல்

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட சேனல்களில் கிடைக்காத அம்சங்கள்:

  • சேனல் மெம்பர்ஷிப்கள்
  • அறிவிப்புகள்
  • இடுகைகள்
  • கதைகள்

'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட' வீடியோ என்றால் என்ன?

சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்திலுள்ள (COPPA - Children’s Online Privacy Protection Act) FTCயின் வழிகாட்டுதலின்படி, இவ்வாறு இருந்தால் ஒரு வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும்:

  • சிறுவர்களை முதன்மைப் பார்வையாளர்களாகக் கொண்டது.
  • சிறுவர்கள் முதன்மைப் பார்வையாளர்களாக இல்லை என்றாலும், வீடியோவின் முக்கிய விவரங்களான சிறுவர் கதாபாத்திரங்கள், கதைகள், பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் பல காரணிகளின் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதன் அடிப்படையில் அது சிறுவர்களுக்குக் காட்டப்படுகிறது.

உங்கள் வீடியோ "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை" எனத் தீர்மானிப்பது பற்றி மேலும் அறிக. அத்துடன் அது தொடர்பாக எங்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளையும் பாருங்கள்.

கவனத்திற்கு: “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” என அமைக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சிறுவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமென நாங்கள் தானாகக் கருதுவதில்லை. YouTubeல் உள்ள வீடியோக்களின் பொருந்தும்தன்மையைத் தீர்மானிக்க எங்களிடம் பிற சிஸ்டங்கள் உள்ளன. பொதுவான கேள்விகளைப் பார்ப்பதன் மூலம் YouTubeல் பொருந்தும்தன்மையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

"சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை" என அமைக்கப்பட்ட வீடியோக்களில் விளம்பரங்களைப் பார்த்தல்

சில குறிப்பிட்ட வகை விளம்பரங்கள் "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை" என அமைக்கப்பட்ட வீடியோக்களில் தொடர்ந்து காட்டப்படலாம். மேலும் அந்த வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்கு வீடியோ விளம்பரம் காட்டப்படுவதற்கு முன்பும் பின்பும் ஒரு விளம்பர பம்பர் காட்டப்படலாம். ஒரு விளம்பரம் தொடங்கும்போதும் முடியும்போதும் அவர்களுக்குத் தெரியப்படுத்த இது உதவுகிறது.

“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட” வீடியோக்களில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான விளம்பரதாரர் கொள்கைகளைப் புரிந்துகொள்ள, எங்களின் “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட” வீடியோக்களுக்கான விளம்பரக் கொள்கையைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1295060587466445441
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false