Nintendo Switchசில் YouTubeஐப் பார்த்தல்

இப்போது Nintendo Switchசில் YouTube வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களைப் பார்க்கலாம், வீடியோக்களைத் தேடலாம், உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட்டாகப் பயன்படுத்தலாம்.

YouTube ஆப்ஸைப் பதிவிறக்குதல்

YouTubeல் உள்நுழைதல் அல்லது வெளியேறுதல்

  1. உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்கு இருந்தால் YouTubeல் நீங்கள் பயன்படுத்தும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைந்த பிறகு உங்கள் கணக்குடன் தொடர்புடைய Google அடையாளங்களின் பட்டியலை நீங்கள் பார்க்கக்கூடும். உங்கள் YouTube சேனலுடன் இணைக்கப்பட்ட கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். YouTube சேனல் இல்லாத பிராண்டு கணக்கைத் தேர்ந்தெடுத்தால் உங்களால் உள்நுழைய முடியாது.
கவனத்திற்கு: ஆப்ஸைத் திறக்கும்போது, பயன்படுத்த வேண்டிய Nintendo கணக்கைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்படுவீர்கள். YouTubeஐப் பயன்படுத்த எந்த Nintendo கணக்கையும் பயன்படுத்தலாம்.

Nintendo Switchசில் இருந்து உங்கள் கணக்கின் இணைப்பை நீக்குவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வீடியோ கட்டுப்பாடுகள்

இணைக்கப்பட்ட எந்தவொரு கண்ட்ரோலரிலும் டி-பேடையோ இடது ஜாய்ஸ்டிக்கையோ பயன்படுத்தி YouTubeல் உலாவலாம். ஸ்வைப் சைகைகள் அம்சம் தற்சமயம் YouTube ஆப்ஸில் ஆதரிக்கப்படவில்லை.
பிளே செய்வதற்கு ஒரு வீடியோவைத் தேர்ந்தெடுத்தவுடன் பிளேயர் கட்டுப்பாடுகள் பட்டி தோன்றும், அதில் இவற்றைச் செய்யலாம்:
  • முகப்பு: B பட்டனைத் தட்டுவதன் மூலம் முகப்புத் திரைக்குச் செல்லலாம்.
  • பிளே Play icon: வீடியோவைப் பிளே செய்யும் அல்லது மீண்டும் தொடங்கும். நீங்கள் A பட்டனையும் தட்டலாம்.
  • வசனங்கள் : வீடியோவில் வசனங்கள் இருந்தால் அவற்றைக் காட்டும்.

வீடியோவைப் பிளே செய்யும்போது “மேலும் செயல்கள்" என்பதைத் தேர்ந்தெடுத்தால் பின்வரும் விருப்பங்கள் காட்டப்படும்:

  • சேனலில் குழு சேர்தல்.
  • வீடியோவிற்கு ரேட்டிங் வழங்குதல்.
  • சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோவைப் புகாரளித்தல்.
கவனத்திற்கு: Nintendo Switchசில் உள்ள ஸ்கிரீன்ஷாட் செயல்பாடு YouTube ஆப்ஸில் ஆதரிக்கப்படவில்லை.

வீடியோக்களைத் தேடுதல்

வீடியோக்களைத் தேட, YouTubeன் முதன்மை மெனுவில் X பட்டனை அழுத்தவும். தேடும்போது, இடைவெளியைச் சேர்க்க Y பட்டனையும், ஓர் எழுத்தை நீக்க B பட்டனையும் அழுத்தவும்.
  • வீடியோக்களைத் தேடுதல்: தேடும்போது திரையின் கீழ்ப்பகுதியில் தொடர்புடைய வீடியோக்கள் காட்டப்படும். வீடியோவுக்கான தேடல் முடிவுகளில் உலாவ, டி-பேடிலோ இடதுபுற ஸ்டிக்கிலோ இடது அல்லது வலதுபுறமாக அழுத்தவும்.
  • தேடலைத் திருத்துதல்: மீண்டும் X பட்டனை அழுத்தவும் அல்லது டைப் செய்வதற்குக் கீபோர்டைத் திறக்க, கீபோர்டு ஐகானைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: கையடக்கப் பயன்முறையில் சாதனத்தைப் பயன்படுத்தும்போது தேடல் கீபோர்டில் டச்ஸ்கிரீன் அம்சம் வேலை செய்யும்.

இதுவரை பார்த்தவற்றையும் தேடியவற்றையும் அழித்தல்

இதுவரை தேடியவற்றை/பார்த்தவற்றை அழிக்க:
  1. அமைப்புகளுக்கு செல்லவும்.
  2. இதுவரை பார்த்தவற்றை அழி அல்லது இதுவரை தேடியவற்றை அழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தச் செயல் அனைத்துச் சாதனங்களில் இருந்தும் உங்கள் கணக்கில் இதுவரை பார்த்தவற்றை/தேடியவற்றை அழிக்கும். மேலும் இதுவரை பார்த்த கதைகளையும் அழிக்கும்.

Nintendo பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் உள்நுழைவு

Nintendo Switch ஆப்ஸில் கன்சோலின் சிஸ்டம் அமைப்புகளில் பெற்றோர் கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர் கட்டுப்பாடுகள் இயக்கப்பட்டிருந்தால் YouTube ஆப்ஸ் பூட்டப்படலாம்.

Nintendo Switch ஆப்ஸில் பெற்றோர் கட்டுப்பாடுகளை இயக்க/முடக்க:

  1. சிஸ்டம் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பெற்றோர் கட்டுப்பாடுகள் அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நான் ஆப்ஸை நிறுவியுள்ளேன். அடுத்து என்ன? அல்லது என்னிடம் ஸ்மார்ட் சாதனம் இல்லை! என்பதைத் தேர்ந்தெடுத்து, காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  5. உங்கள் விருப்பமான கட்டுப்பாட்டு நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.

“9-12 வயதுடையவர்கள்” மற்றும் “சிறுவர்கள்” கட்டுப்பாட்டு நிலைகள் அமைக்கப்பட்டால் Nintendo Switch ஆப்ஸைப் பயன்படுத்த முடியாது. “டீன் ஏஜர்கள்” மற்றும் “வரம்புகள் இல்லை” கட்டுப்பாட்டு நிலைகள் அமைக்கப்பட்டால் Nintendo Switch ஆப்ஸைப் பயன்படுத்த முடியும்.

கவனத்திற்கு: குறிப்பாக YouTube ஆப்ஸுக்கு என்றில்லாமல் பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பொதுவாக இயக்க விரும்பினால் கட்டுப்பாட்டு நிலை அதன் பிறகு பிரத்தியேக அமைப்புகள் அதன் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட மென்பொருள் என்பதற்குச் செல்லவும்.

உங்கள் மொபைலை இணைத்தல்

உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்தலாம். m.youtube.com, Android ஆப்ஸுக்கான YouTube அல்லது YouTube iOS ஆப்ஸ் மூலம் அதை இணைக்கலாம்.

பர்ச்சேஸ் செய்த வீடியோக்களைப் பார்த்தல்

நீங்கள் வாங்கிய வீடியோக்களை YouTube ஆப்ஸில் உள்ள லைப்ரரி பிரிவில் பார்க்கலாம்.
கவனத்திற்கு: இப்போது உங்களால் சாதனத்தில் நேரடியாக வீடியோக்களை வாங்க முடியாது.

360 டிகிரி வீடியோக்களைப் பார்த்தல்

Nintendo Switchசில் 360 டிகிரி வீடியோக்களைப் பார்க்கலாம். 360 டிகிரி வீடியோக்களைப் பார்க்கும்போது, இணைக்கப்பட்ட கன்ட்ரோலரில் இடது மற்றும் வலது ஜாய்ஸ்டிக்குகள் இரண்டையும் வீடியோவை நகர்த்திச் சுற்றிப் பார்க்கப் பயன்படுத்தலாம்.

வீடியோவின் தரம்

கையடக்கச் சாதனத்தைப் பயன்படுத்தும்போது உள்ளமைந்த டிஸ்ப்ளேயின் அதிகபட்சத் தெளிவுத்திறன் 720p. டாக் செய்யப்பட்ட பயன்முறையில் அதிகபட்சத் தெளிவுத்திறன் 1080p.
பார்க்கும்போதே வீடியோ தரத்தை மாற்ற:
  1. வீடியோ பிளேயரில் ‘மேலும்’ 3 dot menu icon என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. தரம்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்களுக்கு விருப்பமான வீடியோ தரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8955136783898971595
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false