அறிவிப்புகள்: நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கை

நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கை, YouTube ஆப்ஸிலிருந்து நாள் முழுதும் பெறக்கூடிய புஷ் அறிவிப்புகளை ஒருங்கிணைத்து அதற்குப் பதிலாக ஒரு தினசரி ஈமெயில் அறிக்கை அறிவிப்பை மட்டும் உங்களுக்கு அனுப்பும். நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கையைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு: நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கையில் லைவ் ஸ்ட்ரீம்கள், பதிவேற்றம், கருத்து அறிவிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புஷ் அறிவிப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், அது முடியும் வரை லைவ் ஸ்ட்ரீமைப் பார்க்க முடியாமல் போகக்கூடும்.

இயல்பாக, நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கை “முடக்கப்பட்டிருக்கும்”.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

இந்த அம்சம் தற்போது மொபைல்களில் மட்டுமே கிடைக்கிறது, டேப்லெட்களில் கிடைப்பதில்லை. 

அறிவிப்புகளுக்கான நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கையை இயக்க மற்றும் பிரத்தியேகமாக்க: 

  1. உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும். 
  2. அமைப்புகள் என்பதைத் தட்டவும். 
  3. அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. நேரம் திட்டமிடப்பட்ட ஈமெயில் அறிக்கை என்பதைத் தட்டவும்.
  5. உங்களுக்கேற்ற டெலிவரி நேரத்தை அமைக்க தட்டவும்.  

உங்கள் அறிவிப்புகளை நிர்வகிப்பது குறித்து இங்கே மேலும் அறிக. 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
iPhone & iPad Android
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
162001412082203570
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false