மொழி அல்லது இருப்பிட அமைப்புகளை மாற்றுதல்

 

உங்கள் கம்ப்யூட்டர், YouTube ஆப்ஸ் அல்லது மொபைல் உலாவியைப் பயன்படுத்தி விருப்பமான மொழியையும் இருப்பிடத்தையும் YouTubeல் தேர்ந்தெடுக்கலாம். 

சேனல் பெயர், வீடியோ தலைப்பு (கிடைக்கும்போது) போன்ற வீடியோ தரவுத்தகவல்களையும் குரல் தேடலுக்கான மொழியையும் மொழி அமைப்புகள் மாற்றும். இந்தப் பிரிவுகளில் காட்டப்படும் வீடியோக்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து வேறுபடும்: 

  • பரிந்துரைகள்
  • பிரபலமடைபவை
  • செய்திகள்

YouTube கிடைக்கக்கூடிய அனைத்து நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் மொழிகளுக்கும் மொழி மற்றும் வீடியோ விருப்பத்தேர்வுகளை YouTube வழங்குகிறது. அதிகப் பயனர்களைச் சென்றடையும் வகையில் YouTubeன் திறனை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துகிறோம். உங்கள் மொழியையோ நாட்டையோ பிராந்தியத்தையோ கண்டறிய முடியவில்லையெனில் உங்கள் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் மிகப் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தை YouTube கண்டறிய முடியவில்லை எனில் இயல்பு இருப்பிடமாக 'அமெரிக்கா' தேர்வுசெய்யப்படும்.

இணையத்தில் அல்லது YouTube ஆப்ஸில் மொழியை மாற்றுதல்

YouTube ஆப்ஸிலோ மொபைல் தளத்திலோ கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

YouTube ஆப்ஸ்

  1. உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும்.
  2. அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  3. பொது என்பதைத் தட்டவும்.
  4. இருப்பிடம் அல்லது ஆப்ஸ் மொழி என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழி அல்லது இருப்பிடத்தைத் தட்டவும்.

மொபைல் வலை

இயல்பாக, YouTube மொபைல் தளம் உங்கள் சாதனத்தின் மொழி அமைப்பைப் பின்பற்றும். மொபைல் தளத்தில் மொழி மற்றும் இருப்பிட அமைப்புகளை மாற்றலாம்.

  1. உங்கள் கணக்கிற்கு  செல்லவும்.
  2. அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  3. கணக்கு  என்பதைத் தட்டவும்.
  4. வேறொரு மொழியைத் தேர்ந்தெடுக்க மொழி என்பதைத் தட்டவும்.
  5. வேறொரு இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க இருப்பிடம் என்பதைத் தட்டவும்.

டிவியில் YouTube

  1. டிவியில் YouTube ஆப்ஸில் 'அமைப்புகள் ' என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “மொழியும் இருப்பிடமும்” பிரிவிற்குச் செல்லவும்.
  3. மொழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கு நகர்த்தவும்.
  6. மாற்றத்தை உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

How to change the language and country settings on YouTube from your mobile device

மின்னஞ்சல் அறிவிப்புகளுக்கான மொழியை மாற்றுதல்

YouTubeல் இருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் உங்கள் நாட்டிற்கான இயல்பு மொழியில் அனுப்பப்படும். YouTube மொழி அமைப்புகளை நீங்கள் மாற்றியிருந்தால் அதற்குப் பொருந்தும் வகையில் உங்கள் மின்னஞ்சல் அமைப்புகளை மாற்றலாம்:

  1. மின்னஞ்சல் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. உங்கள் மின்னஞ்சல் அறிவிப்பு மொழியை மாற்ற "மொழி" என்பதற்குச் செல்லவும்.

ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், கேம் கன்சோல்கள் ஆகியவற்றில் மொழி அல்லது இருப்பிடத்தை மாற்றுதல்


இயல்பாக, ஸ்மார்ட் டிவிகளிலும் ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் கேம் கன்சோல்களிலும் உள்ள YouTube ஆப்ஸ் உங்கள் சாதனத்தின் மொழி மற்றும் இருப்பிட அமைப்புகளைப் பயன்படுத்தும். YouTubeக்கான இந்த அமைப்புகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இந்த அமைப்புகளை மாற்ற:

  1. உங்கள் சாதனத்தில் YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வேறொரு மொழியைத் தேர்வுசெய்ய மொழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வேறொரு இருப்பிடத்தைத் தேர்வுசெய்ய இருப்பிடம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் கீபோர்டின் தேடல் மொழியை மாற்றுதல்

தேடல் கீபோர்டுக்கான 'தேடல் மொழி' அமைப்பையும் நீங்கள் மாற்றலாம்:

  1. உங்கள் ஸ்மார்ட் டிவி, ஸ்ட்ரீமிங் சாதனம் அல்லது கேம் கன்சோலில் YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. தேடல் என்பதைத் தேர்ந்தெடுத்து ஒரு மொழியைத் தேர்வுசெய்யவும்.

தேடல் கீபோர்டில் பின்வரும் மொழிகளைப் பயன்படுத்தலாம்:
 

  • அரபிக்
  • கொரியன்
  • சைனீஸ் (எளிதாக்கப்பட்டது) 
  • நார்வேஜியன்
  • மரபுவழி சைனீஸ் (ஹாங்காங்)
  • போலிஷ்
  • மரபுவழி சைனீஸ் (தைவான்)
  • போர்ச்சுகீஸ்
  • டேனிஷ்
  • போர்ச்சுகீஸ் (பிரேசில்)
  • டச்சு
  • ரஷ்யன்
  • ஆங்கிலம்
  • ஸ்பானிஷ்
  • ஃபிரெஞ்சு
  • ஸ்பானிஷ் (மெக்சிகோ)
  • ஃபிரெஞ்சு (கனடா)
  • ஸ்பானிஷ் (அமெரிக்கா)
  • ஜெர்மன்
  • ஸ்வீடிஷ்
  • கிரேக்கம்
  • தாய்
  • ஹீப்ரு
  • டர்கிஷ்
  • ஹங்கேரியன்
  • உக்ரைனியன்
  • இத்தாலியன்
  • வியட்நாமீஸ்
  • ஜாப்பனீஸ்

 

குறிப்பு: உங்கள் ஆப்ஸ் மொழி ஆதரிக்கப்படவில்லை எனில், ஆங்கிலமே தேடல் கீபோர்டின் இயல்பு மொழியாக இருக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14356921653857537613
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false