பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளில் இடம்பெறும் தொடர்புத் தகவல்கள்

எங்கள் இணையப் படிவம் மூலம் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும்போது சில தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும்.

உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம்

  • பதிப்புரிமை மீறலுக்காக ஒரு வீடியோ அகற்றப்பட்டால், YouTubeல் அந்த வீடியோவிற்குப் பதிலாகப் பதிப்புரிமையாளரின் பெயர் காட்டப்படும்.
    • தகுந்த சட்டப்பூர்வ மாற்றுப் பெயரை (நிறுவனத்தின் பெயர், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் பெயர் போன்றவை) நீங்கள் வழங்கும்பட்சத்தில், நாங்கள் அதைச் சரிபார்த்து தகுந்தது எனக் கருதினால் பயன்படுத்துவோம்.
    • நீங்கள் உள்ளிடும் பதிப்புரிமையாளர் பெயர் உங்கள் கோரிக்கையின் பொதுப் பதிவின் ஒரு பகுதியாக இருக்கும். உங்கள் அகற்றுதல் கோரிக்கையின் பொதுப் பதிவு குறித்து மேலும் அறிக.
  • பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நிறைவுசெய்ய உங்கள் சட்டப்பூர்வமான முழுப் பெயர் தேவை. பதிப்புரிமை மீறலுக்காக அகற்றப்படும் வீடியோவைப் பதிவேற்றியவருடன் இந்தப் பெயர் பகிரப்படலாம்.
  • அகற்றுதல் கோரிக்கையிலுள்ள உங்கள் முதன்மை மின்னஞ்சல் முகவரி பதிப்புரிமை மீறலுக்காக அகற்றப்படும் வீடியோவைப் பதிவேற்றியவருடன் பகிரப்படலாம். சம்பந்தப்பட்ட பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்க்க அவர் உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும்.
  • நீதிமன்ற வழக்கிற்காகக் கேட்கப்படாத பட்சத்தில் உங்கள் இருப்பிட முகவரியும் ஃபோன் எண்ணும் ரகசியமாகவே இருக்கும். ஏதேனும் தகவல்களை YouTube பகிர வேண்டியிருந்தால் அவற்றைப் பகிரும் முன் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
  • பதிப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் படைப்பின் விளக்கம் பதிப்புரிமை மீறலுக்காக அகற்றப்படும் வீடியோவைப் பதிவேற்றியவருடன் பகிரப்படும். வீடியோ ஏன் அகற்றப்பட்டது என்பதை இதன்மூலம் அவர்கள் தெரிந்துகொள்ளலாம். 

அகற்றுதல் கோரிக்கைகளின் பொதுப் பதிவு

பதிப்புரிமை மீறல் வீடியோவைப் பதிவேற்றியவர் உங்கள் அகற்றுதல் கோரிக்கையின் நகலைக் கோரலாம். இந்தப் பொதுப் பதிவில் காட்டப்படும் தகவல்கள்:

  • பதிப்புரிமையாளரின் பெயர்
  • முதன்மை மின்னஞ்சல் முகவரி
  • இரண்டாம்நிலை மின்னஞ்சல் முகவரி (இணையப்படிவத்தில் இருக்கும் விருப்பத்திற்குட்பட்ட புலம்)
  • உங்கள் சட்டப்பூர்வமான முழுப் பெயர்
  • பதிப்புரிமை மீறியதாகக் கூறப்படும் வீடியோவைப் பற்றிய உங்கள் விளக்கம்
  • கூடுதல் தகவல்களுக்காக YouTube கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் பதில்கள். முதலில் சமர்ப்பிக்கப்பட்ட அகற்றுதல் கோரிக்கை முழுமையடையாமலோ தவறாகவோ இருந்தால் கூடுதல் தகவல்களை YouTube கேட்கும்.

தொடர்புத் தகவல்களைப் பகிர்வது தொடர்பான தயக்கங்கள்

யாராவது உங்களை YouTubeல் உபத்திரவம் செய்வதாகத் தோன்றினால் பதிப்புரிமை மீறலுக்குப் பதிலாக உபத்திரவம் மற்றும் இணையவழி துன்புறுத்தல் பற்றிப் புகாரளிப்பது குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.

இது உபத்திரவமா பதிப்புரிமை மீறலா என்ற குழப்பம் சில நேரங்களில் ஏற்படலாம். இந்தச் சூழல்களில் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பது சிறந்த தீர்வாக இருக்காது. பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன்பு, நியாயமான பயன்பாடு போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகளைப் பற்றியும் நீங்கள் மேலும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.

பதிப்புரிமையாளர் சார்பாக ஓர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வழக்கறிஞர் போன்றோர்) பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி தனது சொந்த YouTube கணக்கைப் பயன்படுத்தி கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், அகற்றுதல் கோரிக்கையில் பதிப்புரிமையாளருடனான தனது உறவை அவர் குறிப்பிட வேண்டும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1397786171304781804
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false