உங்கள் மொபைல் சாதனத்தில் பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தைப் பயன்படுத்துதல்

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் (PiP - Picture-in-picture) அம்சம் வீடியோவைச் சுருக்கி சிறிய பிளேயரில் காட்டும். எனவே உங்கள் மொபைல் சாதனத்தில் பிற ஆப்ஸைப் பயன்படுத்தும்போதும் வீடியோவைத் தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் சாதனத்தின் முகப்புத் திரையில் சிறிய பிளேயரை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம், பிற ஆப்ஸின் மீதும் அதை வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் மொபைல் சாதனத்தில் பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறை

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தைப் பயன்படுத்துதல்

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் (PiP) அம்சத்தைப் பயன்படுத்த, வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும்போதே YouTube ஆப்ஸில் இருந்து வெளியேறவும். PiP அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் PiP சாளரத்திற்குள் வீடியோ சுருங்கிவிடும். PiP சாளரத்தைத் திரையின் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்த்திக் கொள்ளலாம், பிற ஆப்ஸின் மீது வீடியோ இயங்குவதை இது பாதிக்காது. YouTubeல் இருந்து வெளியேறுவதற்கு முன்பு வீடியோவை இடைநிறுத்துவது அல்லது நிறுத்துவதன் மூலம் PiP சாளரத்தில் வீடியோ பிளே ஆகாமல் தவிர்க்கலாம்.

YouTube Premium மெம்பர்ஷிப் உங்களிடம் இருந்தால், பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் (PiP) அம்சத்தைப் பயன்படுத்தி YouTube வீடியோக்களைப் பார்க்கலாம். நீங்கள் அமெரிக்காவில் வசித்தால், உங்களிடம் YouTube Premium இல்லையென்றாலும் PiP அம்சத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் குறிப்பிட்ட சில வீடியோக்களை (இசை வீடியோக்கள் போன்றவை) உங்களால் பார்க்க முடியாது.

கவனத்திற்கு: நீங்கள் அமெரிக்காவில் வசிக்கவில்லை என்றால், PiP அம்சத்தைப் பயன்படுத்தி YouTube வீடியோக்களைப் பார்க்க YouTube Premium மெம்பர்ஷிப் தேவை.
கவனத்திற்கு: உங்கள் சாதனத்தில் பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தைப் பயன்படுத்த, உங்களிடம் YouTube Premium மெம்பர்ஷிப் இருப்பதையும் நீங்கள் iOS 15.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தை முடக்குதல்

  1. YouTube ஆப்ஸ் அமைப்புகள்  And then பொது என்பதற்குச் செல்லவும்.
  2. முடக்க, பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தை முடக்கும் நிலைமாற்றும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தை இயக்குதல்

YouTube ஆப்ஸில் பின்னணி இயக்கம் அம்சம் இயக்கப்பட்டுள்ள சாதனங்களிலும் iOS 15.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களிலும் பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சம் தானாகவே இயக்கப்பட்டிருக்கும்.

  1.  iOS சாதன அமைப்புகள் And then பொது And then பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் என்பதற்குச் செல்லவும்.
  2. இயக்க, PiP அம்சத்தைத் தானாக இயக்கு என்பதைத் தட்டவும். 
  3. YouTube ஆப்ஸ் அமைப்புகள்  And then பொது என்பதற்குச் செல்லவும்.
  4. இயக்க, பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் அம்சத்தை இயக்கும் நிலைமாற்றும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் சாளரத்தை மூடுதல்

கட்டுப்பாடுகளைப் பார்க்க, PiP பிளேயரைத் தட்டி PiP பிளேயரின் மேல் இடது மூலையில் உள்ள X ஐகானைத் தட்டவும். 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
iPhone & iPad Android
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14072988854993992332
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false