வழங்கல் நிலை குறித்த அறிக்கைகள்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

உள்ளடக்க நிர்வாகியிலிருந்து நிலை ஃபைல்களைப் பதிவிறக்குதல்

விரிதாளைச் செயலாக்கிய பிறகு, தொகுப்புச் செயலாக்கத்தில் YouTube மேற்கொண்ட செயல்களையும் ஒவ்வொன்றும் சரியாகச் செயலாக்கப்பட்டதா என்பதையும் குறிப்பிடும் நிலை ஃபைல்களை YouTube வெளியிடும்.

உங்கள் பதிவேற்ற நிலை குறித்த ஃபைல்களைப் பார்க்க:

  1. இடதுபுற மெனுவில் உள்ளடக்க வழங்கல் என்பதற்குக் கீழே தோன்றும் எனது தொகுப்புகள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் தொகுப்பைக் கிளிக் செய்யவும்.  செயலாக்கப்பட்ட தொகுப்புகளுக்கு நிலை ஃபைல்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
  3. நிலை அறிக்கையைப் பதிவிறக்க பதிவிறக்கு பட்டனைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல் செய்யப்படும் நிலை ஃபைல்கள்

உங்கள் பதிவேற்ற அமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நிலை ஃபைல்களை (ஒரு தரவுத்தகவல் ஃபைலுக்கு ஒரு மின்னஞ்சல் எனும் வீதத்தில்) மின்னஞ்சல் மூலமாகவும் YouTube அனுப்பும்.  இடதுபுற மெனுவிலுள்ள அமைப்புகளில் காணப்படும் பதிவேற்றுபவரின் கணக்குகள் என்பதற்குச் சென்று பதிவேற்றுபவரின் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் மாற்றலாம்.

அறிக்கை ஃபைல்களின் பெயர்கள்

நிலை அறிக்கையின் பெயரானது வழங்கலில் பயன்படுத்தப்படும் தரவுத்தகவல் ஃபைலின் பெயரை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.  அசல் தரவுத்தகவல் ஃபைலுக்கு "metadata.csv" எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கருதி நிலை அறிக்கைக்கான ஃபைல் பெயரை பின்வரும் அட்டவணை விவரிக்கிறது:

ஃபைல் பெயர் வகை குறிப்புகள்
status-metadata.csv.xml XML நிலை ஃபைல் நிறுத்தப்பட்ட XML வடிவம்
report-metadata.csv CSV நிலை ஃபைல்  
errors-metadata.csv CSV பிழைகள் ஃபைல்  

அறிக்கை ஃபைல் பற்றிய விவரக்குறிப்புகள்

ஒவ்வொரு அறிக்கையிலும் தலைப்பும் வரிசைகளின் எண்ணிக்கையும் காற்புள்ளிகள் மூலம் பிரிக்கப்பட்டிருக்கும்.  தொகுப்பைப் பரிமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவுத்தகவல் டெம்ப்ளேட்டைப் பொறுத்து அவை பல வகையிலான நெடுவரிசைகளைக் கொண்டிருக்கக்கூடும்.  அறிக்கைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான இரண்டு நெடுவரிசைகள் இருக்கும் ( வரிசை எண் மற்றும் நிலை.)  வழங்கப்பட்ட தரவு வகையையும் டெம்ப்ளேட் வகையையும் பொறுத்து மற்ற நெடுவரிசைகள் மாறும்.  பயன்படுத்தப்படாவிட்டால் அறிக்கையிலிருந்து சில நெடுவரிசைகள் தவிர்க்கப்படக்கூடும்.

நெடுவரிசையின் பெயர் விளக்கம் டெம்ப்ளேட் வகைகள்
வரிசை எண் தரவுத்தகவல் டெம்ப்ளேட்டில் உள்ள வரிசை எண்ணுடன் தொடர்புடையது

அனைத்து டெம்ப்ளேட் வகைகளும்

நிலை "செயலாக்கப்பட்டது" அல்லது "பிழைகள்" அனைத்து டெம்ப்ளேட் வகைகளும்
சேனல் சேனல் ஐடி இணைய வீடியோ
பிரத்தியேக ஐடி வழங்கப்பட்ட பிரத்தியேக ஐடி உடைமைகளைப் புதுப்பிக்கும் அனைத்து டெம்ப்ளேட்களும்
பிரத்தியேகச் சிறுபடம் வழங்கப்பட்ட பிரத்தியேகச் சிறுபடத்தின் ஃபைல் பெயர் இணைய வீடியோ
வீடியோ ஐடி வீடியோ ஐடி இணைய வீடியோ, இசை வீடியோ, உள்ளூர்மயமாக்குதல்
உடைமை ஐடி உடைமை ஐடி உடைமைகளைப் புதுப்பிக்கும் அனைத்து டெம்ப்ளேட்களும்
உரிமைகோரல் ஐடி  உரிமைகோரல் ஐடி இணைய வீடியோ
வீடியோ ஃபைல் வழங்கப்பட்ட வீடியோ ஃபைல் இசை வீடியோ
ISRC ISRC குறியீடு இசை வீடியோ, ஒலிப்பதிவு
ஆடியோ டிராக் வழங்கப்பட்ட ஆடியோ ஃபைல் ஒலிப்பதிவு, உள்ளூர்மயமாக்குதல்
வசன ஃபைல் வழங்கப்பட்ட வசன ஃபைல் உள்ளூர்மயமாக்குதல்
இசைப் படைப்புக்கு வழங்கப்பட்ட உடைமை ஐடி asset_id நெடுவரிசை மதிப்பு இசைப் படைப்பு
இசைப் படைப்பின் புதுப்பிக்கப்பட்ட உடைமை ஐடி இசைப் படைப்பின் புதுப்பிக்கப்பட்ட உடைமைகள் இசைப் படைப்பு
ஒலிப்பதிவுக்கு வழங்கப்பட்ட உடைமை ஐடி related_asset_id நெடுவரிசை மதிப்புகள் இசைப் படைப்பு
ஒலிப்பதிவின் புதுப்பிக்கப்பட்ட உடைமை ஐடி ஒலிப்பதிவின் புதுப்பிக்கப்பட்ட உடைமைகள் இசைப் படைப்பு
ISWC ISWC குறியீடு இசைப் படைப்பு
அகலத்திரைக் கலைப்படைப்பு ஃபைல் வழங்கப்பட்ட அகலத்திரைக் கலைப்படைப்பு ஃபைல் ஷோ
சதுரமான கலைப்படைப்பு ஃபைல் வழங்கப்பட்ட சதுரமான கலைப்படைப்பு ஃபைல் ஷோ
ஷோவின் பிரத்தியேக ஐடி ஷோவுக்கான பிரத்தியேக ஐடி சீசன்
சீசனின் பிரத்தியேக ஐடி சீசனுக்கான பிரத்தியேக ஐடி சீசன்

பிழை ஃபைல் பற்றிய விவரக்குறிப்பு

நிலை அறிக்கையில் பிழைகள் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால், அவை குறித்த கூடுதல் விவரங்கள் பிழை ஃபைலில் வழங்கப்பட்டிருக்கும்.

நெடுவரிசையின் பெயர் விளக்கம்
பிழைக் குறியீடு அகப் பிழை குறியீடு, வார்த்தை
தீவிரத்தன்மை பிழையின் தீவிரத்தன்மை, "PERMANENT_ERROR" அல்லது "WARNING"
பிழைச் செய்தி பிழை பற்றிய விவரம்
பிழை ஏற்பட்டுள்ள இடங்கள் பிழையால் பாதிக்கப்படும் தரவுத்தகவல் டெம்ப்ளேட்டில் உள்ள வரிசைகள்

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3564324915660105874
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false