YouTubeக்கு Google கணக்கைப் பயன்படுத்துதல்

YouTubeல் உள்நுழைய Google கணக்கு தேவை. Google கணக்கை Gmail, Blogger, Maps, YouTube மற்றும் பல Google தயாரிப்புகளில் பயன்படுத்தலாம்.

தொடங்குங்கள் | YouTubeல் உள்நுழைந்து YouTube சேனலை உருவாக்குவது எப்படி மற்றும் ஏன்?

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

இந்தத் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இதற்கு முன் உள்நுழைந்திருந்தால், உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கு உள்ளது என்று அர்த்தமாகும். உள்நுழைய, இந்தத் தயாரிப்புகளில் நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள். உதாரணமாக, நீங்கள் Gmailலைப் பயன்படுத்தினால் அது உங்கள் Gmail பயனர்பெயர் ஆகும். உங்களிடம் Google கணக்கு இல்லையெனில், YouTubeல் ஒன்றை உருவாக்கலாம்.

Google கணக்குகள் மற்றும் YouTube குறித்து நினைவில்கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்:

  • உங்கள் Google கணக்கு மூலம் YouTubeல் உள்நுழையலாம். YouTubeல் உள்நுழைய, உங்கள் Google கணக்கின் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் உள்ளிடவும். YouTubeக்குப் பதிவுசெய்த பிறகு, மற்றொரு Google சேவையில் Google கணக்கு மூலம் உள்நுழைவது தானாகவே உங்களை YouTubeல் உள்நுழையச் செய்யும்.
  • உங்கள் Google கணக்கை நீக்கினால் YouTube தரவும் நீக்கப்படும், அனைத்து வீடியோக்களும் கருத்துகளும் சந்தாக்களும் இதிலடங்கும். உங்கள் Google கணக்கை நீக்குவதற்கு முன், YouTube உட்பட அனைத்து Google சேவைகளிலுள்ள உங்கள் தரவையும் நிரந்தரமாக நீக்குவதைப் புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மே 2009க்கு முன்பு உருவாக்கப்பட்ட சில பழைய, பயன்படுத்தப்படாத YouTube சேனல்கள் Google கணக்கின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். இந்தச் சேனல்களைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றை Google கணக்குடன் சேர்க்க வேண்டியிருக்கும்.

உங்கள் Google கணக்கு மூலம் YouTubeல் உள்நுழையும்போது பல்வேறு YouTube அம்சங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்:

  • வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவித்தல்
  • பிடித்தவற்றைச் சேமித்தல்
  • சேனல்களில் குழு சேர்தல்
  • பிறகு பார்த்தல்
  • இதுவரை பார்த்தவை
  • வீடியோக்களைப் புகாரளித்தல்

நீங்கள் பார்த்த வீடியோக்கள் மற்றும் குழு சேர்ந்ததன் அடிப்படையில் வீடியோ பரிந்துரைகளையும் YouTube பிரத்தியேகமாக்கலாம்.

இதுவரை பார்த்தவை பிரிவில் போதுமான பதிவுகள் இல்லையெனில், YouTube முகப்புப் பக்கத்தில் உள்ள பரிந்துரைகள் போன்று அவற்றைச் சார்ந்து வீடியோ பரிந்துரைகளை அனுப்பும் YouTube அம்சங்கள் அகற்றப்படும்.
 
ஒரு சேனலை உருவாக்கும் வரை YouTubeல் உங்களின் செயல்பாடு மற்றவர்களுக்குக் காட்டப்படாது. அவை முழுவதும் தனிப்பட்டதாக இருக்கும். உங்கள் சொந்த வீடியோக்களைப் பதிவேற்றவோ, வீடியோக்களில் கருத்துகள் தெரிவிக்கவோ, பிளேலிஸ்ட்களை உருவாக்கவோ விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு YouTube சேனலை உருவாக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3308036890235648435
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false