YouTube கூட்டாளர் நிர்வாகி பற்றிய அறிமுகம்

உங்கள் YouTube சேனலில் இருந்து நீங்கள் அதிகப் பலன்களைப் பெறுவதற்கு உதவ YouTube கூட்டாளர் நிர்வாகி குழு உள்ளது. அழைப்பின் பேரில் மட்டுமே இணையக்கூடிய எங்களின் திட்டமானது கிரியேட்டர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவுகிறது. தளத்தில் மேன்மேலும் வளர்வதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் கிரியேட்டர்கள், ஒத்த சிந்தனையுடைய கிரியேட்டர்களுடன் இணையவோ YouTube பற்றி நன்கு அறிந்த ஒருவருடன் உரையாடவோ விரும்புகின்றனர்.

கூட்டாளர் நிர்வாகி என்றால் என்ன?

கிரியேட்டர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர உதவுவதே கூட்டாளர் நிர்வாகியின் பணியாகும். கூட்டாளர் நிர்வாகியை உங்களின் தனிப்பட்ட YouTube நிபுணர் போன்று நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

உங்கள் YouTube சேனலுக்கு அதிகப் பார்வைகளைப் பெற, கூட்டாளர் நிர்வாகி உங்களுக்கு உதவக்கூடிய வழிகளில் சில இங்குள்ளன:

  • நேரடி உதவி: இதில் வழக்கமாகக் கூட்டாளர் நிர்வாகிகள் உங்களை நேரடியாகச் சந்திப்பார்கள். தனிப்பட்ட சேனல் இலக்குகளை உருவாக்குவது, சேனலை மேம்படுத்துவதற்கான உத்திகள் ஆகியவை பற்றிப் பேசலாம், YouTube சேனலை இயக்குவது குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகளைக் கேட்கலாம்.
  • கிரியேட்டர் நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளுக்கான பிரத்தியேக அழைப்பு: YouTube ஸ்பான்சர் செய்த நிகழ்வுகள், கல்விப் பயிற்சிகளில் ஒத்த சிந்தனையுடைய கிரியேட்டர்களுடன் இணைதல் போன்றவற்றுக்கான அழைப்புகளைக் கூட்டாளர் நிர்வாகி மூலம் நீங்கள் அவ்வப்போது பெறலாம்.
  • புதிய கிரியேட்டர் திட்டங்கள் & ஆஃபர்களுக்கான முதற்கட்ட அணுகல்: புதிய YouTube அம்சங்களுக்கான அணுகல், பரிசோதனைக் கட்டத்தில் உள்ள முன்னோட்டத் திட்டங்களில் பங்கேற்றல் போன்ற புதிய கிரியேட்டர் திட்டங்கள் குறித்து அறிகின்ற முதல் ஒரு சில நபர்களில் ஒருவராக இருக்கலாம்.

எங்களின் கூட்டாளர் நிர்வாகித் திட்டத்தை அழைப்பின் பேரில் மட்டுமே பெற முடியும் (குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே). எங்கள் தகுதிநிலை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சில சேனல்களுக்கு 6 மாத காலத்திற்கு இதை நாங்கள் வழங்குகிறோம். சேனல் அளவு, சேனல் செயல்பாடு, YouTube சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்குதல் ஆகியவற்றின்படி கூட்டாளரின் தகுதிநிலையை நாங்கள் தீர்மானிக்கிறோம். மேலும் அறிக

YouTube கிரியேட்டர்கள் இணையதளத்தில் கூட்டாளர் நிர்வாகியைப் பெறுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

YouTube பார்ட்னர்ஷிப்கள் குழுவின் FAQகள்

யாரெல்லாம் கூட்டாளர் நிர்வாகியைப் பெறலாம்?
எங்கள் கூட்டாளர் நிர்வாகி திட்டத்தைத் தற்போது அழைப்பின் பேரில் மட்டுமே பெற முடியும்.
பொதுவாக, பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சேனல்களுடன் மட்டுமே நாங்கள் பணியாற்றுகிறோம்:
  • கூட்டாளர் நிர்வாகிகள் கிடைக்கும் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமைந்துள்ளவை
  • YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ளவை
  • வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளவை
  • சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகள் எதுவும் இல்லாதவை
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்க்கப்படாத பதிப்புரிமை எதிர்ப்பு எதுவும் இல்லாதவை
  • எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்குபவை
கூட்டாளர் நிர்வாகி திட்டத்திற்கு எந்தெந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தகுதிபெறுகின்றன?
நீங்கள் பின்வரும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்தால், ஒரு கூட்டாளர் நிர்வாகியைப் பெறத் தகுதிபெறலாம்:
  • அர்ஜென்டினா
  • ஆஸ்திரேலியா
  • ஆஸ்திரியா
  • பஹ்ரைன்
  • பெலாரஸ்
  • பெல்ஜியம்
  • பிரேசில்
  • கனடா
  • சீனா
  • டென்மார்க்
  • எகிப்து
  • ஃபின்லாந்து
  • ஃபிரான்ஸ்
  • ஜெர்மனி
  • ஹாங்காங்
  • ஐஸ்லாந்து
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • ஈரான்
  • ஈராக்
  • அயர்லாந்து
  • இத்தாலி
  • ஜப்பான்
  • ஜோர்டான்
  • கஜகஸ்தான்
  • கொரியா
  • குவைத்
  • லெபனான்
  • மெக்சிகோ
  • மொராக்கோ
  • நியூசிலாந்து
  • நார்வே
  • ஓமன்
  • ஃபிலிப்பைன்ஸ்
  • போலந்து
  • போர்ச்சுகல்
  • ரஷ்யா
  • சவுதி அரேபியா
  • ஸ்பெயின்
  • ஸ்வீடன்
  • சுவிட்சர்லாந்து
  • தைவான்
  • தாய்லாந்து
  • நெதர்லாந்து
  • துருக்கி
  • உக்ரைன்
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  • யுனைடெட் கிங்டம்
  • அமெரிக்கா
  • வியட்நாம்
  • ஏமன்
கூட்டாளர் நிர்வாகிக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
கூட்டாளர் நிர்வாகியைப் பெற நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
நான் MCN (மல்டி-சேனல் நெட்வொர்க்) உடன் தொடர்புடைய ஒரு கிரியேட்டர். இருந்தாலும் என்னால் பதிவு செய்ய முடியுமா?
ஆம். MCN உடன் தொடர்புடைய கிரியேட்டர்களும் கூட்டாளர் நிர்வாகியைப் பெறலாம்.
நான் தகுதிபெறவில்லை என அறிந்தேன். நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் சேனலை வளர்க்கவும் சமூகத்தை உருவாக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவக்கூடிய பல தகவல்கள் உள்ளன! உங்களுக்குக் கிடைக்கக்கூடியவற்றை அறிந்துகொள்ள கிரியேட்டர் மையத்தைப் பாருங்கள்.
நான் பெறும் மின்னஞ்சல்கள் YouTubeல் இருந்துதான் வந்துள்ளன என்பதை எவ்வாறு உறுதிசெய்வது?
உங்கள் சேனலைப் பற்றிப் பலர் உங்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதை நாங்கள் அறிவோம். ஒரு மின்னஞ்சல் YouTube குழுவிலிருந்துதான் வந்துள்ளதா என்பதை உறுதிசெய்வதற்கான வழிமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
  • மின்னஞ்சல் டொமைனைச் சரிபார்க்கவும்: மின்னஞ்சல் @google.com, @youtube.com, @partnerships.withyoutube.com போன்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். YouTube அல்லது Google என்று கூறிக்கொண்டு வேறு எந்த டொமைன்களிலிருந்தும் பெறப்படும் மின்னஞ்சல்கள் போலியானவையாக இருக்கலாம்.
  • இணைப்புகளைச் சரிபார்க்கவும்: மின்னஞ்சலில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் அல்லது படிவங்களின் URL youtube.com, withgoogle.com, withyoutube.com, youtube.secure.force.com, youtube.force.com என முடிகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14863428250436949338
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false