உங்கள் YouTube சேனலின் URLகள் குறித்துப் புரிந்துகொள்ளுதல்

பார்வையாளர்களை உங்கள் சேனலின் முகப்புப்பக்கத்திற்குக் கொண்டுசெல்லும் ஒன்றுக்கும் மேற்பட்ட URLகளை உங்கள் சேனலுக்கு வைத்துக்கொள்ள முடியும். இந்த URLகள் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். ஆனால் இவை அனைத்தும் பார்வையாளர்களை உங்கள் சேனலுக்கு மட்டுமே கொண்டுசெல்லும். ஹேண்டில் URLகள், பிரத்தியேக URLகள், லெகஸி பயனர்பெயர் URLகள் ஆகிய அனைத்தும் பிரத்தியேக URL வகைகளாகும். உங்கள் சேனலுடன் தொடர்புடைய URLகள் அனைத்தையும் youtube.com/handle பக்கத்தில் பார்க்கலாம்.

சேனல் URL (ஐடி அடிப்படையிலானது)

உதாரணம்: youtube.com/channel/UCUZHFZ9jIKrLroW8LcyJEQQ

இது YouTube சேனல்கள் பயன்படுத்தும் வழக்கமான URL ஆகும். இந்த URL உங்கள் தனிப்பட்ட சேனல் ஐடியைப் பயன்படுத்தும். அது URLலின் இறுதியில் எண்களும் எழுத்துகளுமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உங்கள் ஹேண்டில் URLலைக் கண்டறிதல்

உங்கள் சேனலின் ஹேண்டில் URLலைக் கண்டறிய:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல் அதன் பிறகு அடிப்படைத் தகவல்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஹேண்டில் என்பதன் கீழ் உங்கள் ஹேண்டில் URLலைப் பார்க்கலாம்.

ஹேண்டில் URL

உதாரணம்: youtube.com/@youtubecreators

ஒரு சேனல் உரிமையாளராக உங்கள் ஹேண்டிலை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது/மாற்றும்போது ஹேண்டில் URL தானாகவே உருவாக்கப்படும். URLலின் முடிவில், நீங்கள் தேர்வுசெய்த ஹேண்டில் “@” குறீயீட்டுடன் தொடங்கும். உங்களிடம் ஏற்கெனவே ஏதேனும் பிரத்தியேக URLகள் இருந்தால் அவை தொடர்ந்து செயலில் இருக்கும்.

உங்கள் ஹேண்டிலைப் பார்ப்பது/மாற்றுவது குறித்து மேலும் அறிக.

பிரத்தியேக URL

உதாரணம்: youtube.com/c/YouTubeCreators

புதிய பிரத்தியேக URLகளை இனி அமைக்க/மாற்ற முடியாது. உங்களிடம் ஏற்கெனவே ஏதேனும் பிரத்தியேக URLகள் இருந்தால் அவை தொடர்ந்து செயலில் இருக்கும். அனைத்து லெகஸி URLகளும் இனி உங்கள் ஹேண்டில் அடிப்படையிலான புதிய சேனல் URLலுக்குப் பயனர்களைத் திசைதிருப்பும். 

லெகஸி பயனர்பெயர் URL

உதாரணமாக: youtube.com/user/YouTube

உங்கள் சேனல் எப்போது உருவாக்கப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கொரு பயனர்பெயர் இருக்கக்கூடும். இன்றைய காலத்திலுள்ள சேனல்களுக்குப் பயனர்பெயர்கள் தேவையில்லை என்றாலும் உங்கள் சேனலுக்குப் பார்வையாளர்களைக் கொண்டு செல்ல இந்த URLலை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பயனர்பெயரைத் தேர்ந்தெடுத்த பிறகு, சேனல் பெயர் மாறியிருந்தாலும் கூட இந்த URLலைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே உள்ள பயனர்பெயர்களை மாற்ற முடியாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2741605036417546689
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false