பிளேலிஸ்ட்களைத் திருத்துதல்

பிளேலிஸ்ட் தலைப்புகளையும் விளக்கங்களையும் சேர்க்கலாம் திருத்தலாம், பிளேலிஸ்ட்டிலிருக்கும் வீடியோக்கள் வரிசையை மாற்றி அமைக்கலாம், வீடியோக்களை அகற்றலாம்.

குறிப்பு: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறைகளில் இந்த அம்சம் கிடைக்காமல் போகலாம். மேலும் அறிக.

பிளேலிஸ்ட்டின் விளக்கத்தைச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், ஒரு பிளேலிஸ்ட்டை வழிகாட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  2. திருத்து அதன் பிறகு விளக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பிளேலிஸ்ட் குறித்த விவரங்களை உள்ளிடவும்.
  3. சேமிக்க, திருத்தும் பெட்டியில் 'சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.

பிளேலிஸ்ட்டின் தலைப்பு/விளக்கத்தைத் திருத்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், ஒரு பிளேலிஸ்ட்டை வழிகாட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  2. திருத்து  என்பதைக் கிளிக் செய்து, பிளேலிஸ்ட்டின் தலைப்பு/விளக்கத்தைக் கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி அதைத் திருத்தவும்.
  3. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

பிளேலிஸ்ட்டில் உள்ளவற்றை மறுவரிசைப்படுத்துதல்

  1. உங்கள் பிளேலிஸ்ட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வீடியோ/Shorts வீடியோவின் சிறுபடத்திற்கு அருகிலுள்ள  ஐகானைக் கிளிக் செய்து பிடித்திருக்கவும்.
  3. வீடியோ/Shorts வீடியோவை மேலேயோ கீழேயோ இழுத்து பிளேலிஸ்ட்டை மறுவரிசைப்படுத்தவும்.

பிளேலிஸ்ட்டை வீடியோ வகைப்படி வடிகட்டுதல்

  1. நீங்கள் திருத்த விரும்பும் பிளேலிஸ்ட்டை வழிகாட்டியில் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் பிளேலிஸ்ட்டில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ வகையைக் கொண்ட சிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. எல்லாம்: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட அனைத்து வகை வீடியோக்களையும் காட்டும்.
    2. Shorts: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட Shorts வீடியோக்களைக் காட்டும்.
    3. வீடியோக்கள்: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட நீள வடிவ வீடியோக்களைக் காட்டும்.

பிளேலிஸ்ட்டில் இருந்து வீடியோக்களை அகற்றுதல்

  1. பிளேலிஸ்ட்டைத் திறக்கவும்.
  2. நீங்கள் அகற்ற விரும்பும் வீடியோ/Shorts வீடியோவிற்கு அடுத்துள்ள 'மேலும் ''' என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. [PLAYLIST NAME] என்பதில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை எனில், நீங்கள் பயன்படுத்துவது YouTubeன் பழைய பதிப்பாக இருக்கக்கூடும். உங்கள் உலாவியின் பதிப்பு சமீபத்தியது எனில் YouTubeன் தற்போதைய பதிப்பிற்குப் புதுப்பியுங்கள்.
உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள YouTube Studio ஆப்ஸ் மூலமும் உங்கள் பிளேலிஸ்ட்களில் மாற்றங்கள் செய்யலாம். YouTube Studio ஆப்ஸின் உதவி மையத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10884815742709319510
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false