பதிப்புரிமை மீறல் அறிவிப்புகளுக்கான தேவைகள்: வீடியோக்கள்

உதவிக்குறிப்பு: உங்கள் பதிப்புரிமையை மீறியதாகக் கருதும் வீடியோவை அகற்றுவதற்குக் கேட்க, எங்கள் இணையப்படிவத்தைப் பயன்படுத்துவதே எளிய வழியாகும்.

சேனல் பேனர் படங்கள் போன்ற வீடியோ அல்லாத உள்ளடக்கங்களை அகற்றுவதற்குக் கேட்க, உங்கள் கோரிக்கையில் இந்தத் தேவைப்படும் தகவல்களைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.

வீடியோவுக்குப் பதிப்புரிமை மீறல் அறிவிப்பைக் கேட்க இங்கே பட்டியலிடப்பட்டுள்ள தேவைப்படும் தகவல்களைச் சேர்க்க வேண்டும். இந்தத் தகவல்கள் இல்லாமல் உங்கள் கோரிக்கையை எங்களால் செயலாக்க முடியாது.

copyright@youtube.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்தத் தகவல்களை மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் (இணைப்பில் அல்ல) சமர்ப்பிக்கலாம் அல்லது ஃபேக்ஸ், தபால் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

1. உங்கள் தொடர்புத் தகவல்கள்

உங்கள் கோரிக்கை பற்றிய தகவல்களுக்காக YouTubeம் நீங்கள் அகற்றக் கேட்கும் வீடியோவைப் பதிவேற்றியவரும் உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும். இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை உங்கள் கோரிக்கையில் சேர்க்கவும்:

  • மின்னஞ்சல் முகவரி
  • உங்கள் இருப்பிட முகவரி
  • உங்கள் தொலைபேசி எண்

2. பதிப்புரிமை பெற்ற உங்கள் வீடியோ குறித்த விளக்கம்

நீங்கள் பாதுகாக்க முயலும் பதிப்புரிமை பெற்ற வீடியோ குறித்துத் தெளிவாகவும் முழுமையாகவும் உங்கள் கோரிக்கையில் விவரிப்பதை உறுதிசெய்யவும்.

உங்கள் பதிப்புரிமை பெற்ற வீடியோக்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை மீறப்பட்டுள்ளன என நீங்கள் கருதினால் உங்கள் கோரிக்கையில் அந்தப் படைப்புகளின் பிரதிநிதிப் பட்டியலைச் சேர்க்க சட்டம் அனுமதிக்கும்.

3. பிரச்சனைக்குரிய வீடியோக்களின் குறிப்பிட்ட URLகள்

உங்கள் பதிப்புரிமையை மீறியதாகக் கருதும் வீடியோ அல்லது வீடியோக்களின் குறிப்பிட்ட இணைப்புகளை உங்கள் கோரிக்கையில் சேர்க்க வேண்டும். 

சரியான வீடியோவின் URL அல்லது வீடியோக்களின் URLகளை இந்த வடிவத்தில் சேர்க்கவும்:
 
www.youtube.com/watch?v=xxxxxxxxxxx

சேனல் பெயர், சேனல் URL போன்ற பொதுவான தகவல்கள் தேவையில்லை.

4. இந்த இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றைச் சேர்க்க வேண்டும்:

“புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைப் பதிப்புரிமையாளரோ ஏஜெண்ட்டோ சட்டமோ அங்கீகரிக்கவில்லை என்று எனக்கு நன்னம்பிக்கை உள்ளது.”

"இந்த அறிவிப்பிலுள்ள தகவல்கள் சரியானவை என்றும் உண்மையை மறைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து, மீறப்பட்டதாகக் கூறப்படும் பிரத்தியேக உரிமைக்கு நானே உரிமையாளர் அல்லது உரிமையாளர் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் என்றும் உறுதியளிக்கிறேன்.”

5. உங்கள் கையொப்பம்

முழுமையாக நீக்குவதற்கான கோரிக்கைகளுக்கு, பதிப்புரிமையாளர் அல்லது அவரின் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டின் அசல் கையொப்பம் அல்லது மின்னணுக் கையொப்பம் தேவை.

இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய, பதிப்புரிமையாளரோ அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோ கோரிக்கையின் கீழ்ப்பகுதியில் அவர்களின் சட்டப்பூர்வமான முழுப் பெயரைக் கையொப்பமாக உள்ளிடலாம். சட்டப்பூர்வமான முழுப் பெயர் என்பது முதல் மற்றும் கடைசிப் பெயராக இருக்க வேண்டும், நிறுவனத்தின் பெயராக அல்ல.

இந்தத் தகவல்களை மின்னஞ்சல் உள்ளடக்கத்தில் (இணைப்பில் அல்ல) சேர்த்து copyright@youtube.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஃபேக்ஸ் அல்லது தபால் அஞ்சல் மூலமாகவும் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8012677801612446447
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false