வீடியோக்களையும் சேனல்களையும் பகிர்தல்

YouTube வீடியோக்களைப் பகிர்தல்

  1. youtube.com தளத்தில் ஒரு வீடியோவைப் பார்க்கத் தொடங்கவும்.

  2. வீடியோவிற்குக் கீழேயுள்ள பகிர்  என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பகிர்வதற்கான பல்வேறு விருப்பங்களைக் கொண்ட ஒரு பேனல் தோன்றும்:
    • சமூக வலைதளங்கள்: வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர, சமூக வலைதள ஐகானை (எ.கா. Facebook, Twitter) கிளிக் செய்யவும்.
    • மின்னஞ்சல்: உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள இயல்பு மின்னஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்ப, மின்னஞ்சல் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உட்பொதித்தல்: உட்பொதி பட்டனைக் கிளிக் செய்து ஒரு குறியீட்டை உருவாக்கி, இணையதளத்தில் வீடியோவை உட்பொதிக்க அதைப் பயன்படுத்தலாம்.
    • இணைப்பை நகலெடுத்தல்: வீடியோவிற்கான இணைப்பை நகலெடுக்க, நகலெடு பட்டனைக் கிளிக் செய்து அந்த இணைப்பை எங்கு வேண்டுமானாலும் (உதாரணமாக, மின்னஞ்சல் மெசேஜில் ஒட்டுதல்) ஒட்டிக் கொள்ளலாம்.
    • தொடக்க நேரம்: வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்துச் செல்ல, இணைப்பை நகலெடுப்பதற்கு முன்பு இந்தப் பெட்டியைத் தேர்வுசெய்து தொடக்க நேரத்தை உள்ளிடவும். உதாரணமாக, 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் இருந்து வீடியோ தொடங்க பெட்டியைத் தேர்வுசெய்து “2:30” என உள்ளிடவும்.
    • சமூக இடுகை: சமூகப் பிரிவிற்கான அணுகல் உங்களுக்கு இருந்தால் ஒரு வீடியோவைப் பொது இடுகையில் பகிரலாம்.

YouTube சேனல்களைப் பகிர்தல்

  1. சேனல் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. உலாவியின் முகவரிப் பட்டியிலுள்ள URLலை நகலெடுக்கவும்.
  3. நீங்கள் பகிர விரும்புபவற்றில் அந்த URLலை ஒட்டவும்.

எளிதாகப் பகிரக்கூடிய வகையில் பிரத்தியேகச் சேனல் URLலை உருவாக்க விரும்பினால் YouTube URLலில் உங்கள் YouTube சேனலின் பெயரைச் சேர்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15578301513249449209
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false