YouTube சேனலை நீக்குதல் அல்லது மறைத்தல்

உங்கள் சேனலிலுள்ள உள்ளடக்கத்தைத் தற்காலிகமாக மறைக்கவோ சேனலை நிரந்தரமாக நீக்கவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

How to hide or delete your YouTube channel

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

சேனலைத் தற்காலிகமாக மறைத்தல் 

உங்கள் YouTube சேனலிலுள்ள உள்ளடக்கத்தை நீங்கள் மறைக்கலாம், மீண்டும் அதைக் காட்டுமாறு தேர்வுசெய்து கொள்ளலாம். உங்கள் சேனலை மறைத்தால் சேனல் பெயர், வீடியோக்கள், விருப்பங்கள், சந்தாதாரர்கள், சந்தாக்கள் ஆகியவை உங்களுக்கு மட்டும் தெரியும்படி மாற்றப்படும்.

உங்கள் சேனலையோ சேனலிலுள்ள உள்ளடக்கத்தையோ மறைக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுறப் பக்கப்பட்டியில், அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சேனல் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கீழே, YouTube உள்ளடக்கத்தை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கவனத்திற்கு: உங்கள் சேனலை நீக்கவோ மறைக்கவோ செய்வதற்கான பக்கத்திற்கு உங்களை இந்த இணைப்பு எடுத்துச் செல்லும். உள்நுழைவு விவரங்களை உள்ளிடுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
  5. எனது உள்ளடக்கத்தை மறைக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் சேனலில் எவற்றை மறைக்க வேண்டுமென்று குறிப்பிடும் பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. எனது சேனலை மறை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் உள்ளடக்கத்தைப் பிறருக்குக் காட்டவேண்டும் என்று விரும்பினாலோ பதிவேற்ற, கருத்து தெரிவிக்க அல்லது பிளேலிஸ்ட்டைப் பயன்படுத்த விரும்பினாலோ சேனலை மீண்டும் இயக்கலாம்.

சேனலை நிரந்தரமாக நீக்குதல்

உங்கள் YouTube சேனலை நீக்கினால் வீடியோக்கள், கருத்துகள், மெசேஜ்கள், பிளேலிஸ்ட்கள், இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் உட்பட உங்கள் உள்ளடக்கம் நிரந்தரமாக நீக்கப்படும். தற்போது மொபைல் சாதனங்களில் சேனலை நீக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் சேனலை நிரந்தரமாக நீக்க முடிவுசெய்தால், உங்கள் கணக்கை மீட்டெடுப்பது எங்களுக்குக் கடினமானதாக இருக்கக்கூடும்.

உங்கள் YouTube சேனலை நீக்குதல்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுறப் பக்கப்பட்டியில், அமைப்புகள்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சேனல் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கீழே, YouTube உள்ளடக்கத்தை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் உள்நுழைவு விவரங்கள் கேட்கப்பட்டால் அவற்றை உள்ளிடவும்.
  5. எனது உள்ளடக்கத்தை நிரந்தரமாக நீக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் சேனலை நீக்குவதை உறுதிசெய்ய, பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. எனது உள்ளடக்கத்தை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் சேனல் நிரந்தரமாக நீக்கப்படுவதற்குச் சிறிது நேரம் ஆகலாம். அதுவரை தளத்தில் உங்கள் வீடியோக்களின் சிறுபடங்கள் தொடர்ந்து காட்டப்படலாம்.

கவனத்திற்கு: இந்தப் படிகள் உங்கள் YouTube சேனலை மட்டுமே நீக்கும், அதில் உள்நுழையப் பயன்படுத்திய Google கணக்கு நீக்கப்படாது. Google கணக்கு முழுவதையும் நீக்குவது எப்படி என அறிக.

சேனலை நீக்கிய பிறகு, சேனல் URLலையும் சேனல் பெயரையும் YouTube பகுப்பாய்வுகளில் பார்க்கவோ தேடவோ முடியாது. 'பார்த்த நேரம்' போன்ற சேனலுடன் தொடர்புடைய தகவல்கள், ஒருங்கிணைந்த அறிக்கைகளின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட சேனலுடன் குறிப்பிட்டுத் தொடர்புப்படுத்தப்படாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16053392390674523315
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false