YouTube சேனல்களை நிர்வகித்தல்

உங்கள் YouTube சேனலில் 'பிராண்டு கணக்கு' குறித்த புதிய குறிப்பிடல்களைப் பார்க்கலாம் அல்லது உங்கள் கணக்கை மாற்றியில் புதிய கணக்கைப் பார்க்கலாம். சமீபத்திய YouTube புதுப்பிப்பின்போது பிராண்டு கணக்குடன் உங்கள் சேனல் இணைக்கப்பட்டதே இதற்குக் காரணம். சேனல்கள் பிராண்டு கணக்குகளுக்கு நகர்த்தப்படுவது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் YouTube சேனல்களை நீங்களோ பல்வேறு நபர்களோ நிர்வகிக்குமாறு அமைக்கலாம். YouTube சேனலுக்கு இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்:

  • சேனலைத் தனிப்பட்ட Google கணக்குடன் இணைத்தல்: உங்கள் Google கணக்கின் பெயரையும் படத்தையும் சேனல் பயன்படுத்தும்.
  • சேனலை பிராண்டு கணக்குடன் இணைத்தல்: உங்கள் Google கணக்கின் பெயர் இல்லாமல் வேறொரு பெயரை YouTube சேனல் பயன்படுத்தலாம்.

சேனலை பிராண்டு கணக்குடனோ உங்கள் தனிப்பட்ட Google கணக்குடனோ இணைக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். உங்கள் சேனலின் அடையாளத்தைச் சரிபார்க்க இணைத்தல் செயல்முறை உதவலாம்.

Google கணக்கைப் பயன்படுத்துதல்

Google கணக்கு ஒருவரை மட்டுமே குறிப்பிடுவதாகும். அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் YouTube சேனல் உட்பட அனைத்து Google சேவைகளிலும் ஒரே பெயரையும் அடையாளத்தையும் மட்டுமே பயன்படுத்தும்.

உங்கள் YouTube சேனலில் Google கணக்கை இணையுங்கள்

Google கணக்குடன் உங்கள் YouTube சேனலை இணைத்தால்:

  • சேனலை யார் நிர்வகிக்கலாம்: நீங்கள் மட்டுமே YouTube சேனலை அணுக முடியும், மேலும் Google கணக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • எந்தப் பெயரும் படமும் காட்டப்படும்: உங்கள் Google கணக்கிலிருக்கும் அதே பெயரையும் படத்தையும் YouTube சேனல் (Gmail, Google Docs போன்ற பிற Google சேவைகளும்) பயன்படுத்தும்.

பிராண்டு கணக்கைப் பயன்படுத்துதல்

பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்ட YouTube சேனலைப் பல்வேறு கணக்குகளுடன் பகிரலாம்.

பிராண்டு கணக்குடன் உங்கள் YouTube சேனலை இணைத்தால்:

  • சேனலை யார் நிர்வகிக்கலாம் உரிமைகொள்ளலாம்: ஒரு பிராண்டு கணக்கை பல்வேறு Google கணக்குகள் மூலம் நிர்வகிக்கலாம் உரிமைகொள்ளலாம். மேலும் அதன் நிர்வாகிகளும் உரிமையாளர்களும் அதனுடன் இணைந்திருக்கும் YouTube சேனலையும் அணுகலாம். சேனலுக்கு மற்ற உரிமையாளர்களைச் சேர்த்தால் சேனலை நீக்குதல், மற்ற உரிமையாளர்களை நீக்குதல் போன்ற முழு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம்.
  • எந்தப் பெயரும் படமும் காட்டப்படும்: உங்கள் Google கணக்கிலும் வேறு நிர்வாகியின் Google கணக்குகளிலும் இருக்கும் பெயரும் படமும் இல்லாமல் YouTube சேனல் வேறொன்றைக் கொண்டிருக்கலாம்.

Google கணக்கால் நிர்வகிக்கப்படும் பிராண்டு கணக்குகளைப் பயன்படுத்துதல்

YouTube சேனலுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு பிராண்டு கணக்குகளை நிர்வகிக்க, ஒரு Google கணக்கைப் பயன்படுத்தலாம்.

உங்கள் Google கணக்கால் மட்டுமே நிர்வகிக்கப்படும் பிராண்டு கணக்குடன் உங்கள் YouTube சேனலை இணைத்தால்:

  • சேனலை யார் நிர்வகிக்கலாம்: பிராண்டு கணக்குகளுடன் பல்வேறு YouTube சேனல்கள் இணைக்கப்பட்டிருந்தால் அவை அனைத்தையும் ஒரே Google கணக்கின் மூலம் வெளியேறாமல் நிர்வகிக்கலாம். நீங்கள் நிர்வகிக்கும் சேனல்களுக்கிடையே மாறுவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.
  • எந்தப் பெயரும் படமும் காட்டப்படும்: உங்கள் Google கணக்கிலும் அதனால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு பிராண்டு கணக்குகளிலும் இருக்கும் பெயரும் படமும் இல்லாமல் YouTube சேனல் வேறொன்றைக் கொண்டிருக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1399379080605129708
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false