வீடியோவையும் ஆடியோவையும் வடிவமைப்பதற்கான விவரக்குறிப்புகள்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.
நீங்கள் YouTubeல் பதிவேற்றும் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்கள் அனைத்திற்கும் பதிப்புரிமை பெற்றவராகவோ பதிப்புரிமையாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகவோ நீங்கள் இருக்க வேண்டும்.

வீடியோ வடிவமைப்பு பற்றிய வழிகாட்டுதல்கள்

YouTubeல் மிகச் சிறந்த தரத்தில் வீடியோக்களைப் பிளே செய்வதற்கு ஏற்ற வடிவமைப்பதற்கான விவரக்குறிப்புகள் குறித்து பின்வரும் வழிகாட்டுதல்கள் விளக்குகின்றன. உங்கள் வீடியோக்கள் உயர் தரத்தில் (HQ) பிளே செய்யப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க அசல் வீடியோவின் தரத்திற்கு இணையாக இருக்கும், உயர்தரத்தில் பிளே ஆகும் வடிவமைப்பில் இருக்கும் வீடியோக்களைப் பதிவேற்றுமாறு கூட்டாளர்களை YouTube ஊக்குவிக்கிறது. தன்னுடைய வீடியோ இயக்கத் தரத்தை மேம்படுத்துவதற்காக YouTube எப்போது வேண்டுமானாலும் வீடியோக்களை மீண்டும் என்கோடிங் செய்யும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

  • ஃபைல் வடிவம்: உங்கள் டிஜிட்டல் உள்ளடக்க லைப்ரரியில் இருக்கும் 1080பி. HD ஒளிபரப்பு வடிவம், DVDயுடன் இணங்கும் .MPG நீட்டிப்புடன் சேமிக்கப்பட்ட MPEG-2 நிரல் ஸ்ட்ரீம்கள் போன்ற அசல் ஃபைல்களையே YouTube விரும்புகிறது. உங்களால் MPEG-2 வடிவத்தில் வீடியோக்களைச் சமர்ப்பிக்க முடியவில்லையெனில் அடுத்த விருப்பமான வடிவம் MPEG-4 ஆகும். பின்வரும் விவரக்குறிப்புகள் MPEG-2 மற்றும் MPEG-4 வீடியோக்களுக்கு உகந்த பிளேபேக்கை வழங்குகின்றன:

    • MPEG-2

      • ஆடியோ கோடெக்: MPEG Layer II அல்லது Dolby AC-3
      • ஆடியோ பிட் விகிதம்: 128 kbps அல்லது அதைவிடச் சிறந்தது
    • MPEG-4

      • வீடியோ கோடெக்: H.264
      • ஆடியோ கோடெக்: AAC
      • ஆடியோ பிட் விகிதம்: 128 kbps அல்லது அதைவிடச் சிறந்தது
  • குறைந்தபட்ச ஆடியோ விஷுவல் கால அளவு: 33 வினாடிகள் (வீடியோ சேனலில் கருப்பு மற்றும் நிலையான படங்களையும் ஆடியோ சேனலில் நிசப்தம் மற்றும் பின்புல இரைச்சலையும் தவிர்த்து)

  • ஃபிரேம் வீதம்: வீடியோக்கள் மறுசீரமைக்கப்படாமல் அவற்றின் அசல் ஃபிரேம் வீதங்களிலேயே இருக்க வேண்டும். திரைப்பட மூலங்களுக்கு, 24fps அல்லது 25fps என்ற அளவிலுள்ள ஃபிரேம்கள் சிறந்த தரத்தைத் தரும். பொதுவாக, ஃபிரேம் வீதங்கள் வினாடிக்கு 24, 25 அல்லது 30 ஃபிரேம்கள் என்ற அளவில் அமைக்கப்படும். மறுசீரமைப்புத் தொழில்நுட்பங்கள் படங்களை மங்கலாக்குவதுடன் சில சமயங்களில் வீடியோவின் தரத்தைக் குறைக்கக்கூடும் என்பதால் இவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அதிகச் சீரமைப்பு, Telecine புல்டவுன் போன்ற மாற்றுச் செயலாக்கங்கள் ஆகியவை விரும்பப்படாத தொழில்நுட்பங்களுக்கு உதாரணங்களாகும்.

  • தோற்ற விகிதம்: வீடியோக்கள் அவற்றின் அசல் தோற்ற விகிதங்களில் இருக்க வேண்டும். பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் லெட்டர்பாக்ஸிங் அல்லது பில்லர்பாக்ஸிங் பட்டிகள் எப்போதும் இருக்கக்கூடாது. வீடியோவோ பிளேயரோ எந்த அளவில் இருந்தாலும், வீடியோக்கள் சரியாகக் காட்சிப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அவற்றைச் செதுக்காமலோ அளவைப் பெரிதாக்காமலோ திரைக்கு ஏற்றவாறு YouTube பிளேயர் தானாகவே அவற்றை ஃபிரேம் செய்யும். விஷுவல் உதாரணங்களுக்கு மேம்பட்ட என்கோடிங் என்பதைப் பார்க்கவும்.

    • வீடியோவின் அசல் தோற்ற விகிதமும் மொத்த ஃபிரேம் அளவின் தோற்ற விகிதமும் 1.77:1 என இருந்தால் 16:9 மேட்டிங்கைச் சதுரப் பிக்சல்களுடனும் பார்டர் இல்லாமலும் பயன்படுத்தவும்.
    • வீடியோவின் அசல் தோற்ற விகிதம் 1.77:1 என இருந்து மொத்த ஃபிரேம் அளவு 1.77:1 தோற்ற விகிதத்தைக் கொண்டிருக்கவில்லை எனில் 16:9 மேட்டிங்கைச் சதுரப் பிக்சல்களுடனும் காலப்போக்கில் மாறுபடாத ஒற்றை வண்ண பார்டருடனும் பயன்படுத்தவும்.
    • வீடியோவின் அசல் தோற்ற விகிதமும் மொத்த ஃபிரேம் அளவின் தோற்ற விகிதமும் 1.33:1 என இருந்தால் 4:3 மேட்டிங்கைச் சதுரப் பிக்சல்களுடனும் பார்டர் இல்லாமலும் பயன்படுத்தவும்.
    • வீடியோவின் அசல் தோற்ற விகிதம் 1.33:1 என இருந்து மொத்த ஃபிரேம் அளவு 1.33:1 தோற்ற விகிதத்தைக் கொண்டிருக்கவில்லை எனில் 4:3 மேட்டிங்கைச் சதுரப் பிக்சல்களுடனும் காலப்போக்கில் மாறுபடாத ஒற்றை வண்ண பார்டருடனும் பயன்படுத்தவும்.

    தியேட்டர் வெளியீடுகளில் "பான் அண்ட் ஸ்கேன்" பதிப்பும் அசல் 16:9 பதிப்பும் இருந்தால் இரண்டு பதிப்புகளையும் தனித்தனியாகப் பதிவேற்றவும்.

  • வீடியோ தெளிவுத்திறன்: உயர் தெளிவுத்திறன் வீடியோக்களையே YouTube விரும்புகிறது. பொதுவாக, என்கோடிங்கிலும் வீடியோவின் இயக்கச் செயலாக்கத்திலும் அதிக இணக்கத்தன்மையை வழங்க, கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த தெளிவுத்திறனில் நீங்கள் வீடியோக்களை வழங்க வேண்டும். விற்பனை அல்லது வாடகை நோக்கத்திற்காகப் பதிவேற்றப்படும் வீடியோக்களை 1920x1080 எனும் குறைந்தபட்சத் தெளிவுத்திறனில் 16:9 என்ற தோற்ற விகிதத்துடன் நீங்கள் வழங்க வேண்டும். விளம்பரமுள்ள அல்லது விளம்பரமற்ற வீடியோவிற்கான குறைந்தபட்சத் தெளிவுத்திறனை YouTube குறிப்பிடவில்லை. ஆனால் 16:9 தோற்ற விகிதத்தைக் கொண்ட வீடியோவிற்குக் குறைந்தது 1280x720 தெளிவுத்திறனையும் 4:3 தோற்ற விகிதத்தைக் கொண்ட வீடியோவிற்குக் குறைந்தது 640x480 தெளிவுத்திறனையும் பரிந்துரைக்கிறது.

    YouTubeல் பொதுவில் காட்டப்படாத வீடியோக்களையும் Content ID குறிப்புகளுக்காகப் பதிவேற்றப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே குறைவான தரத்தில் நீங்கள் வழங்கலாம். இந்த வீடியோக்கள் வழக்கமாக "நான்கில் ஒரு பங்கு" – அதாவது 320x240 தெளிவுத்திறனுடன் இருக்கும். இருப்பினும், இந்த வீடியோக்கள் சரியாகத் தெரிய இவற்றில் 200 கோடுகளுக்கு மேல் இருக்க வேண்டும்.

  • வீடியோ பிட் விகிதம்: பிட் விகிதம் பெரும்பாலும் கோடெக்கைச் சார்ந்திருப்பதால் இதற்கான குறைந்தபட்ச மதிப்பு எதுவும் பரிந்துரைக்கப்படுவதில்லை. வீடியோக்கள் பிட் விகிதத்தைக் காட்டிலும் ஃபிரேம் வீதம், தோற்ற விகிதம், தெளிவுத்திறன் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்க வேண்டும். விற்பனை அல்லது வாடகை நோக்கத்திற்காகப் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கான பிட் விகிதங்கள் 50 அல்லது 80Mbps என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

விருப்பமான வடிவங்களைப் பயன்படுத்தி வீடியோக்களை என்கோடிங் செய்ய முடியவில்லையெனில் .WMV, .AVI, .MOV, .FLV ஆகிய நீட்டிப்பு வடிவங்களிலும் உங்கள் வீடியோவைச் சமர்ப்பிக்கலாம். இந்தச் சூழ்நிலையில் முடிந்தவரை மிகச் சிறந்த தரத்திலான வீடியோவைப் பதிவேற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். YouTube இப்போதும் உங்கள் வீடியோவை ஏற்றுக்கொள்ளும். அதன்பிறகு, தேவைப்பட்டால் வீடியோ ஃபைல்களை மீண்டும் என்கோடிங் செய்யும். எனினும் உங்கள் வீடியோவின் தரம் குறைவாக இருக்கலாம். இது உங்கள் வீடியோக்கள் HQ என்கோடிங்கிற்கான தகுதியை இழக்கும்படி செய்யலாம். விருப்பமான வடிவங்களைப் பயன்படுத்தி வீடியோக்களை என்கோடிங் செய்ய முடியவில்லையெனில் YouTubeல் வீடியோவின் தரம் உங்களுக்குத் திருப்தியாக இருந்தது என்பதை உறுதிசெய்ய, சில பரிசோதனை வீடியோக்களைப் பதிவேற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

ஆடியோ ஃபைலுக்கான வழிகாட்டுதல்கள்

பின்வரும் வழிகாட்டுதல்கள் நீங்கள் YouTubeக்கு வழங்கும் ஆடியோ டிராக்குகள் தொடர்பானவை. YouTubeல் மிகச் சிறந்த தரத்தில் வீடியோக்களைப் பிளே செய்வதற்கு ஏற்ற வடிவமைப்பதற்கான விவரக்குறிப்புகளையும் பயனரால் பதிவேற்றப்பட்ட வீடியோக்களின் ஆடியோ டிராக்குகளை உங்கள் ஆடியோ டிராக்குகளுடன் பொருத்துவதற்கான விவரக்குறிப்புகளையும் பின்வரும் வழிகாட்டுதல்கள் விளக்குகின்றன. YouTubeன் ஆடியோ ஸ்வாப் திட்டத்தில் டிராக்கைச் சேர்ப்பதற்கு நீங்கள் அனுமதி வழங்கியிருந்தால் மட்டுமே YouTubeல் ஆடியோ டிராக் இயங்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பொதுவாக, முடிந்தவரை மிகச் சிறந்த தரத்திலான ஆடியோவைப் பதிவேற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

  • ஆதரிக்கப்படும் ஃபைல் வடிவங்கள்:
    • MP3/WAV கண்டெய்னரில் MP3 ஆடியோ
    • WAV கண்டெய்னரில் PCM ஆடியோ
    • MOV கண்டெய்னரில் AAC ஆடியோ
    • FLAC ஆடியோ
  • சில தரவை இழந்த வடிவங்களுக்கான குறைந்தபட்ச ஆடியோ பிட் விகிதம்: 64 kbps
  • கேட்கக்கூடிய குறைந்தபட்சக் கால அளவு: 33 வினாடிகள் (நிசப்தம் மற்றும் பின்னணிச் சத்தம் தவிர்த்து)
  • அதிகபட்சக் கால அளவு: எதுவுமில்லை

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4832165925447413930
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false