கருத்து பற்றிய அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் சேனலில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு (புதிய கருத்துகள், பதில்கள் உட்பட) குறித்த மின்னஞ்சலையும் மொபைல் அறிவிப்புகளையும் பெறுகிறீர்களா என்பதை நிர்வகிக்க அறிவிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும்.

அமைப்புகளைச் சரிபார்க்கும்போது வீடியோவைப் பற்றிய தொடர்ச்சியான கருத்துகள் அனைத்திற்கும் தனித்தனியே அறிவிப்புகள் காட்டப்படாமல் போகக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். அதற்குப் பதிலாக, அவ்வப்போது உங்களுக்கு அறிவிப்பை அனுப்புவோம்.

அறிவிப்புகளை நிர்வகித்தல்

உங்கள் சாதனத்தில் YouTube அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அதன் பிறகு ஆப்ஸ் & அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. ஆப்ஸ் பட்டியலில் YouTubeஐக் கண்டறிந்து, அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. ஆப்ஸ் பட்டியலில் YouTube Studioவைக் கண்டறிந்து, அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

Android சாதனத்திற்கான YouTube ஆப்ஸ்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. ஆப்ஸ் பட்டியலில் YouTubeஐக் கண்டறிந்து, அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

கருத்து அறிவிப்புகளை நிர்வகித்தல்

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. அமைப்புகள்  அதன் பிறகு புஷ் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்களுக்குத் தேவையான அறிவிப்புகளை இயக்கவும்/முடக்கவும்: கருத்துகள், பகுப்பாய்வுகள், சாதனைகள், கொள்கை மற்றும் வருமானம் ஈட்டுதல்.

Android சாதனத்திற்கான YouTube ஆப்ஸ்

YouTube ஆப்ஸை திறக்கவும்.
உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
அமைப்புகள்  அதன் பிறகு புஷ் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
உங்களுக்குத் தேவையான அறிவிப்புகளை இயக்கவும்/முடக்கவும்: கருத்துகள், பகுப்பாய்வுகள், சாதனைகள், கொள்கை மற்றும் வருமானம் ஈட்டுதல்.

மொபைல் அறிவிப்புகள் தொடர்பாக மேலும் பலவற்றைச் செய்ய YouTube அறிவிப்புகளை நிர்வகித்தல் என்பதைப் பாருங்கள்.

கருத்தைப் பார்க்க முடியவில்லையா?
அறிவிப்பைப் பெற்ற பிறகும் உங்களால் கருத்தைப் பார்க்க முடியாமல் போகலாம். பொதுவாக, பயனர் தனது கருத்தை நீக்கியிருந்தாலோ கொள்கை காரணமாகக் கருத்து அகற்றப்பட்டிருந்தாலோ நீங்கள் அதைப் பார்க்க முடியாமல் போகலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14003614422507029390
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false