லைவ் ஸ்ட்ரீம்களில் ஏற்படும் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள்

பதிப்புரிமை பெற்ற மற்றொரு நேரலை ஒளிபரப்பு உள்ளிட்ட மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்துடன் பொருந்துகிறதா என அனைத்து லைவ் ஸ்ட்ரீம்களும் ஸ்கேன் செய்யப்படும்.

உங்கள் லைவ் ஸ்ட்ரீமில் மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் கண்டறியப்பட்டால் அது ஒதுக்கிடப் படத்தால் மாற்றப்படக்கூடும். மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கப்படுவீர்கள். இந்த எச்சரிக்கைக்கு இணங்கி சிக்கல்களைச் சரிசெய்தால் உங்கள் லைவ் ஸ்ட்ரீமைத் தொடரலாம்.

உங்கள் லைவ் ஸ்ட்ரீமில் மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்ந்து இருந்தால் ஸ்ட்ரீம் செய்வது தற்காலிகமாகத் தடைபடும் அல்லது முடக்கப்படும். பதிப்புரிமை அல்லது சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பைப் பெற்றிருந்தாலும் உங்கள் ஸ்ட்ரீம் முடக்கப்படலாம்.

லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கான அணுகலை மீட்டெடுத்தல்

உங்கள் லைவ் ஸ்ட்ரீம் நிறுத்தப்பட்டால் எதிர்ப்புகள் எதுவும் உள்ளதா என்று YouTube Studio டாஷ்போர்டில் பார்க்கவும். குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களை நீங்கள் சரிசெய்தால் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கான அணுகலை மீட்டெடுக்கலாம். லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கான கட்டுப்பாடுகளைத் தீர்ப்பது பற்றி மேலும் அறிக.

மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு உரிமம் பெற்ற லைவ் ஸ்ட்ரீம்

ஸ்ட்ரீமில் பயன்படுத்துவதற்கு உரிமம் பெற்ற மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் உங்களிடம் இருந்தால் Content ID மூலம் உங்கள் சேனலை ஏற்புப் பட்டியலில் சேர்க்கும்படி உள்ளடக்கத்தின் உரிமையாளரிடம் கேளுங்கள்.

உரிமம் பெற்ற மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் உங்களிடம் இருந்தாலும்கூட உங்கள் சேனலை அவர்களின் ஏற்புப் பட்டியலில் சேர்க்கவில்லையெனில் உங்கள் லைவ் ஸ்ட்ரீம் தடைபடலாம். உள்ளடக்க உரிமையாளரின் ஏற்புப் பட்டியலில் உங்கள் சேனல் சேர்க்கப்படாவிட்டால், உள்ளடக்கத்திற்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் வைத்திருக்கும் பிராந்தியங்களில் மட்டும் கிடைக்கும்படி கட்டுப்படுத்தினாலும் கூட உங்கள் லைவ் ஸ்ட்ரீம் தடைபடலாம்.

காப்பகப்படுத்தப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்களில் இருக்கும் Content ID உரிமைகோரல்கள்

நீங்கள் வீடியோவைக் காப்பகப்படுத்த முடிவுசெய்தால் லைவ் ஸ்ட்ரீம்களை நிறைவுசெய்த பிறகு மட்டுமே Content ID உரிமைகோரல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. Content ID உரிமைகோரல்கள் பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2878374471024781560
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false