உங்கள் SFTP டிராப்பாக்ஸை இணைத்தல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

உங்கள் YouTube கூட்டாளர் நிர்வாகி டிராப்பாக்ஸை உள்ளமைத்ததும் SFTP கிளையண்ட்டுக்கும் டிராப்பாக்ஸ் சேவையகத்திற்கும் இடையே மீண்டும் பயன்படுத்தக்கூடிய இணைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்தக் கட்டுரை Cyberduck ஆப்ஸைப் பயன்படுத்தி இணைப்பை உருவாக்குவது எப்படி என்று விளக்குகிறது. ஆனால் SFTP இணைப்புகளை ஆதரிக்கும் எந்தவொரு கிளையண்ட் மென்பொருளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

SFTP இணைப்பை உருவாக்க:

  1. Cyberduck ஆப்ஸைப் பதிவிறக்கி நிறுவவும்.

  2. Cyberduck ஆப்ஸை இயக்கவும்.

  3. ஃபைல் > இணைப்பைத் திற​ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. கீழ் தோன்றும் மெனுவிலிருந்து SFTP (SSH ஃபைல் பரிமாற்ற நெறிமுறை) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேவையகம் வாக்கியப் பெட்டியில் partnerupload.google.com என்பதை டைப் செய்யவும்.

  6. போர்ட் வாக்கியப் பெட்டியில் 19321 என்பதை டைப் செய்யவும்

  7. பயனர்பெயர் வாக்கியப் பெட்டியில் உங்கள் டிராப்பாக்ஸின் பெயரை டைப் செய்யவும்.
    டிராப்பாக்ஸின் பெயர் “yt-” என்று தொடங்கும். மேலும் இது கூட்டாளர் நிர்வாகியால் உங்களுக்காக அமைக்கப்பட்டது.

  8. கூடுதல் தகவல்கள் என்பதை விரிவாக்கவும்.

  9. பொதுக் குறியீடு அடையாளத்தைப் பயன்படுத்து என்ற பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

  10. ஏற்கெனவே நீங்கள் உருவாக்கிய SSH தனிப்பட்ட குறியீட்டு ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.

  11. அமைப்புகள் உரையாடலை மூடுவதற்கு இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17031160724093338588
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false