தொகுப்புப் பதிவேற்றியின் மூலம் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல்

YouTube Studio உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும். அணுகலைப் பெற, உங்கள் YouTube கூட்டாளர் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொகுப்புப் பதிவேற்றி மூலமாகத் தரவுத்தகவல், ஒலிப்பதிவுகள், வீடியோ ஃபைல்கள் போன்றவற்றை மொத்தமாக YouTubeல் விரைவாகப் பதிவேற்றலாம். நீங்கள் பதிவேற்ற விரும்பும் ஃபைல்களை இழுத்து விடுவதற்கு வரைகலைப் பயனர் இடைமுகத்தை இது வழங்குகிறது. புதிய உடைமைகளை உருவாக்கவோ ஏற்கெனவே உள்ள உடைமைகளை மாற்றவோ அனைத்து உடைமைகளுக்கான மீடியா ஃபைல்களுடன் தரவுத்தகவல் ஃபைலைப் பதிவேற்ற வேண்டும் (விரிதாள் அல்லது DDEX ஃபைல்).

தொகுப்புப் பதிவேற்றியைப் பயன்படுத்தி ஃபைல்களைப் பதிவேற்றுவதற்கு:

  1. இடதுபுற மெனுவில் உள்ளடக்க வழங்கல் என்பதைக் கிளிக் செய்யவும்.

    இதுவரை எந்த உள்ளடக்க வழங்கல் அம்சத்தையும் பயன்படுத்தவில்லை எனில் உள்ளடக்க வழங்கல் பக்கங்களில் ஒன்றை முதல் முறையாகப் பார்க்கும்போது YouTube தானாகவே ஒரு பதிவேற்றுபவர் கணக்கை உருவாக்கும். இடதுபுற மெனுவிலுள்ள அமைப்புகள் என்பதற்குக் கீழ் பதிவேற்றுபவரின் கணக்குகள் என்பதற்குச் சென்று பதிவேற்றுபவரின் மின்னஞ்சல் முகவரியையோ இயல்புநிலைச் சேனலையோ நீங்கள் மாற்றலாம்

  2. மதிப்பாய்வு செய்து பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பதிவேற்றுவதற்கான ஃபைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

    ஃபைல் பட்டியலில் இரண்டு வழிகளில் ஃபைல்களைச் சேர்க்கலாம்:

    • கம்ப்யூட்டரிலிருந்து ஃபைல்களை இழுத்து அவற்றை ஃபைல் பட்டியலில் வைக்கவும்.

    • ஃபைல்களைத் தேர்ந்தெடு பட்டனைக் கிளிக் செய்து நீங்கள் பதிவேற்ற விரும்பும் ஃபைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

    ஃபைல்கள் பட்டியலில் சரியான தரவுத்தகவல் ஃபைல் ஒன்று இருக்க வேண்டும். அது விரிதாளாகவோ DDEX ஃபைலாகவோ இருக்கலாம். சேர்க்கப்பட்டதும் தரவுத்தகவல் ஃபைலானது சரிபார்ப்புச் செயலாக்கத்தைத் தானாகத் தொடங்கும் (சுழலும் ஐகான் தோன்றும்.) தேவையெனில் அனைத்து ஆடியோ ஃபைல்களையும் வீடியோ ஃபைல்களையும் தொகுப்பில் சேர்க்கவும்.

  4. உங்கள் தரவுத்தகவல் ஃபைலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்யவும்.

    பதிவேற்றப்படுவதைத் தடுக்கும் பிழை ஏதேனும் தரவுத்தகவலில் இருந்தால் சிவப்பு நிற ஐகான் தோன்றும். இந்த ஃபைலிலுள்ள பிழைகளைக் காட்டுவதற்கான பட்டனைக் கிளிக் செய்யவும்.

    • அசல் ஃபைலில் உள்ள தரவுத்தகவலைத் திருத்தவும். முடிந்ததும், பதிவேற்றும் பக்கத்தில் ஃபைலை மீண்டும் சேர்க்கவும். ஃபைலின் பெயர் மாறவில்லையெனில் YouTube அதன் புதிய பதிப்பைப் பயன்படுத்திச் சரிபார்ப்புச் செயலாக்கத்தை மீண்டும் தொடங்கும்.

    ஃபைல்கள் இல்லையெனில் பதிவேற்றும் பக்கத்தில் ஃபைல்களைச் சேர்க்கவும். சரிபார்ப்பு தானாகவே மீண்டும் தொடங்கும். தரவுத்தகவல் ஃபைலில் பிழைகள் எவையும் இல்லாதபோது தொகுப்பைச் செயல்படுத்து எனும் பட்டனைக் கிளிக் செய்யலாம்.

  5. தொகுப்பைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

    பதிவேற்றப்பட்ட ஃபைல்களின் எண்ணிக்கை, அளவு, செய்யப்பட்ட மாற்றங்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தப் பதிவேற்றச் செயலாக்கத்தையும் நிறைவுசெய்ய ஒரு சில நிமிடங்களிலிருந்து சில மணிநேரம் வரை ஆகலாம். உள்ளடக்க வழங்கல் பக்கத்தின் எனது தொகுப்புகள் பிரிவில் உங்கள் தொகுப்பின் செயலாக்கத்தையும் பிழைச் செய்திகளையும் (ஏதேனும் இருப்பின்) பார்க்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11933700570379044935
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false