SFTP ட்ராப்பாக்ஸுக்கான Secure Shell (SSH) இரட்டைக் குறியீட்டை உருவாக்குதல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

Secure Shell (SSH) இணைப்பைப் பயன்படுத்தி உங்கள் YouTube ட்ராப்பாக்ஸுடன் இணையுமாறு YouTube கோருகிறது. SSH என்பது பாதுகாப்பான தரவுப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தும் நெட்வொர்க் நெறிமுறையாகும்.

பொதுக் குறியீடு கிரிப்டோகிராஃபி மூலம் SSH உங்களை அங்கீகரிக்கிறது. இரண்டு குறியீடுகளை நீங்கள் உருவாக்கலாம்: உங்கள் கிளையண்ட் கம்ப்யூட்டரில் இடம்பெற்றிருக்கும் தனிப்பட்ட குறியீடு மற்றும் உங்கள் ட்ராப்பாக்ஸ் சேவையகம் பயன்படுத்தும் பொதுக் குறியீடு. உங்கள் கம்ப்யூட்டரை ட்ராப்பாக்ஸுடன் இணைக்க இரண்டு குறியீடுகளும் இருக்க வேண்டும்.

கூட்டாளர் பிரதிநிதி உங்கள் ட்ராப்பாக்ஸை உருவாக்குவதற்கு முன்பாகப் பொது SSH குறியீட்டை அவரிடம் நீங்கள் வழங்க வேண்டும். பொதுக் குறியீடு என்பது ssh-rsa என்ற வார்த்தையில் தொடங்கி உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு முடிவடையும் நடுவில் நீளமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு:

ssh-rsa
AAAAB3NzaC1yc2EAAAADAQABAAABAQCXsM9ycbHV6E6t2L+B4p/uYHn9Q0jmu5gU XMYnFnnf4l39xrznfDo8KCASzRrqUkRnuzrno059CvZVzcljkbwWLzKKoE1EwbzH L3nYahMB4MdYNWhBbHbB+ybq6RNO7hkoKDBIQCfqQDY0FEB6sV3d3F1WYl0bAMjp 15yyZJzMKa/rRnZKWetHlcL1X+gFWmW2hQ93foPD463gb58/25GujjsS/tzjngw7 UJMVkm08U1QEY3z3DE/R++7ovJozTCzH0CTNDN0AH3/oSC3dmG+yDh3ZXFATjWjy PXJSOziNrp9TXgJhlqSmoHcPvpotMVjx21kIZ+T+SusQmnG+hK+L
user@yourdomain.com

குறிப்பு: இந்தக் குறியீட்டில் புதிய வரி நிறுத்தங்கள் இருக்கக்கூடாது.

கூட்டாளர் பிரதிநிதிக்கு அனுப்பப்படும் பொதுக் குறியீட்டின் இறுதியில் உங்கள் மின்னஞ்சல் முகவரி சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
Windowsஸில் SSH இரட்டைக் குறியீட்டை உருவாக்க:
  1. PuTTYgen.exe கருவியைப் பதிவிறக்கி இயக்கவும்.

  2. பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு அருகிலுள்ள அளவுருக்கள் பிரிவில் RSA ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உருவாக்கு பட்டனைக் கிளிக் செய்யவும்.

  4. இரட்டைக் குறியீட்டை PuTTYgen கருவி உருவாக்கும் வரை திரையில் அறிவுறுத்தப்படும் வழிமுறைகளின்படி காலியான பகுதியில் மவுஸை நகர்த்தவும்.

    குறியீட்டை PuTTYgen கருவி உருவாக்கியதும் காலியான பகுதியைத் தொடர் வாக்கியப் பெட்டிகளைக் கொண்டு (பொதுக் குறியீட்டைக் காட்டும் வாக்கியப் பெட்டி உட்பட) இது மாற்றியமைக்கும்.

  5. குறியீடுக்கான கருத்து எனும் வாக்கியப் பெட்டியில் நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும்.

    ஏற்கெனவே பெட்டியில் இருக்கும் எந்தவொரு வார்த்தையின் இறுதியிலும் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும். பிற வாக்கியப் பெட்டிகளை எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டுவிடவும்.

  6. பொதுக் குறியீட்டைச் சேமி பட்டனைக் கிளிக் செய்து C:\Documents and Settings\username\.ssh ஃபோல்டரில் id-rsa என்ற பெயரில் பொதுக் குறியீட்டைச் சேமிக்கவும். இங்கே பயனர்பெயர் என்பது உங்கள் Windows பயனர் பெயரைக் குறிக்கும்.

  7. தனிப்பட்ட குறியீட்டைச் சேமி பட்டனைக் கிளிக் செய்து அதே ஃபோல்டரில் id-rsa.ppk என்ற பெயரில் தனிப்பட்ட குறியீட்டைச் சேமிக்கவும்.

  8. OpenSSH authorized_keys ஃபைலில் ஒட்டுவதற்காகப் பொதுக் குறியீட்டின் வாக்கியப் பெட்டியிலுள்ள வார்த்தைகளைக் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கவும்.

    ssh-rsa எனத் தொடங்குவது முதல் நீங்கள் படி ஐந்தில் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரியுடன் முடியும்வரை இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் நகலெடுப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

  9. PuTTYgen கருவியை மூடவும்.

  10. பொதுக் குறியீட்டை உரை எடிட்டரில் ஒட்டவும், வரி நிறுத்தங்களை அகற்றவும், வார்த்தைகள் முழுவதையும் கிளிப்போர்டுக்கு மீண்டும் நகலெடுக்கவும்.

  11. பொதுக் குறியீட்டை மின்னஞ்சலில் ஒட்டி அதை உங்கள் கூட்டாளர் பிரதிநிதிக்கு அனுப்பவும்.

    ஏற்கெனவே உள்ள ட்ராப்பாக்ஸுக்கான இரட்டைக் குறியீட்டை நீங்கள் மீண்டும் உருவாக்கினால் ட்ராப்பாக்ஸ் உள்ளமைவுப் பக்கத்திலுள்ள SSH பொதுக் குறியீடுகள் பெட்டியில் பொதுக் குறியீட்டை ஒட்டலாம்.

Macintosh அல்லது Linuxஸில் SSH இரட்டைக் குறியீட்டை உருவாக்க:
  1. டெர்மினல் சாளரத்தைத் திறக்கவும்.

  2. இந்தக் கட்டளை வரியை உள்ளிடவும்:

    ssh-keygen -t rsa

  3. அனைத்து விருப்பத் தேர்வுகளுக்கும் இயல்பு மதிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

    home/username/.ssh எனும் டைரக்டரியில் id_rsa, id_rsa.pub ஆகிய இரண்டு SSH குறியீட்டு ஃபைல்களை இந்தக் கட்டளை உருவாக்கும். இங்கே பயனர்பெயர் என்பது உங்கள் பயனர் பெயரைக் குறிக்கும்.

  4. id_rsa.pub எனும் பொதுக் குறியீட்டு ஃபைலை உங்கள் கூட்டாளர் பிரதிநிதிக்கு அனுப்பவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5295544666698497942
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false