Aspera ட்ராப்பாக்ஸுடன் இணைத்தல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

உங்கள் ட்ராப்பாக்ஸை உள்ளமைத்ததும், Aspera கிளையண்ட் மற்றும் ட்ராப்பாக்ஸுக்கு இடையே மீண்டும் உபயோகிக்கக்கூடிய இணைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும்.

டிராப்பாக்ஸ் பெயரும் IP முகவரியும் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்; இடதுபுறத்திலுள்ள அமைப்புகள் மெனுவில் பதிவேற்றுபவர் கணக்குகள் என்பதற்குக் கீழே இந்தத் தகவல்களைப் பார்க்கலாம்.

Aspera இணைப்பை உருவாக்க:

  1. Aspera கிளையண்டைத் திறக்கவும்.

  2. இணைப்பு நிர்வாகியைத் திறக்க, இணைப்புகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. புதிய இணைப்பை உருவாக்க + என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் கூட்டாளர் பிரதிநிதி வழங்கிய டிராப்பாக்ஸின் ஹோஸ்ட்பெயரை ஹோஸ்ட் வாக்கியப் பெட்டியில் உள்ளிடவும். ஹோஸ்ட்பெயர் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் புவியியல் இருப்பிடத்துடன் பொருந்த வேண்டும்:

    • us.aspera.googleusercontent.com

    • eu.aspera.googleusercontent.com

    • asia.aspera.googleusercontent.com

  5. பயனர் வாக்கியப் பெட்டியில் டிராப்பாக்ஸ் பெயரை உள்ளிடவும். இது "asp-" எனத் தொடங்க வேண்டும்

  6. அங்கீகரிப்பு விருப்பமாகப் பொதுக் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய குறியீடுகள் பட்டியலில் இருந்து இந்த டிராப்பாக்ஸுக்கான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. மேம்பட்ட இணைப்பு அமைப்புகளைப் பார்க்க, மேம்பட்டவை பட்டனைக் கிளிக் செய்யவும்.

  8. SSH போர்ட் (TCP) மதிப்பை 33001 என மாற்றவும்.

  9. உங்கள் மாற்றங்கள் சேமிக்கப்பட்டு முதன்மை Aspera கிளையண்ட் திரைக்குத் திரும்ப, சரி என்பதை இருமுறை கிளிக் செய்யவும்.

    உங்கள் புதிய இணைப்பு திரையின் வலதுபுறத்தில் தோன்றும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13052379903042244386
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false