டிராப்பாக்ஸை உள்ளமைத்தல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

கூட்டாளர் பிரதிநிதி உங்கள் டிராப்பாக்ஸை உருவாக்கிய பிறகு, கணக்கிற்கான இயல்புநிலைகளை நீங்கள் உள்ளமைக்க வேண்டும்.

டிராப்பாக்ஸை உள்ளமைக்க:

  1. YouTube உள்ளடக்க நிர்வாகியில் உள்நுழையவும்

  2. இடதுபுற மெனுவிலுள்ள அமைப்புகளில் பதிவேற்றுபவரின் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. டிராப்பாக்ஸின் பெயரையும் முகவரியையும் பதிவுசெய்யவும்.

    டிராப்பாக்ஸுடன் இணைப்பதற்கு இந்தத் தகவல்கள் தேவைப்படும்.

    Aspera டிராப்பாக்ஸ்களின் பெயர் asp- என்றும் SFTP டிராப்பாக்ஸ்களின் பெயர் yt- என்றும் தொடங்கும். Aspera டிராப்பாக்ஸிற்கான முகவரி சேவையக முகவரி என்று காட்டப்படும், SFTP டிராப்பாக்ஸிற்கான முகவரி partnerupload.google.com என்பதாகும்.

    ஏராளமான உள்ளடக்க உரிமையாளர்களைக் கொண்ட கணக்குகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டிராப்பாக்ஸ்கள் இருக்கலாம். உங்கள் டிராப்பாக்ஸுக்கான தகவல்களைப் பதிவுசெய்வதை உறுதிசெய்துகொள்ளவும்.
  4. இயல்புநிலைச் சேனலும் SSH பொதுக் குறியீடும் சரியாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

    உள்ளடக்க ஊட்டம் வேறு உரிமையாளரைக் குறிப்பிடாத பட்சத்தில் இயல்பான YouTube பயனர், பதி்வேற்றிய வீடியோக்களின் உரிமையாளர் கணக்கை (சேனலை) கண்டறிவர்.

    SSH பொதுக் குறியீடுகள் பெட்டியில் கூட்டாளர் பிரதிநிதிக்கு நீங்கள் வழங்கிய SSH குறியீடு இருக்க வேண்டும். குறியீட்டின் இறுதியில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

  5. நிலை அறிக்கைகளை YouTube எந்தெந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை  அறிவிப்பு மின்னஞ்சல்கள் வாக்கியப் பெட்டியில் உள்ளிடவும்.

    ஒரு வரிக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி என்ற கணக்கில் பல மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்.  சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு டிராப்பாக்ஸ் ஒரு உள்ளடக்க உரிமையாளருக்கானது, சேனலுக்கு அல்ல என்பதை நினைவில்கொள்ளவும். அதாவது, ஒரு டிராப்பாக்ஸைப் பயன்படுத்தி பல்வேறு சேனல்களில் பதிவேற்றலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3715967504226953432
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false