தரவுத்தகவலைச் சரிபார்த்தல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

பதிவேற்றும் முன் உங்கள் DDEX ஃபைலையோ விரிதாளையோ சரிபார்க்க வேண்டும். CSV அல்லது DDEX ஃபைலில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இந்தச் செயல்முறையின்போது கொடியிடப்படும். இது பதிவேற்றங்கள் தோல்வியடைவதைத் தவிர்க்கக்கூடும். குறிப்பாக, ஏதேனும் தானியங்குச் செயல்முறை முடிவையோ CSV அல்லது DDEX ஃபைலை உருவாக்கும் பிரத்தியேகக் குறியீட்டையோ சரிபார்க்க இந்தப் படி உதவியாக இருக்கும்.

தரவுத்தகவல் ஃபைலைச் சரிபார்க்க:

  1. YouTube Studioவின் இடதுபுற மெனுவில் உள்ளடக்க வழங்கல் என்பதன் கீழ் தோன்றும் சரிபார்த்து பதிவேற்று பட்டனைக் கிளிக் செய்யவும்.
  2. சரிபார்ப்பதற்கு, ஃபைல்களைத் தேர்ந்தெடுங்கள் என்பதைக் கிளிக் செய்து, சரிபார்க்க விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.  உங்கள் கம்ப்யூட்டரிலிருந்தும் ஃபைல்களைக் கிளிக் செய்து உலாவிச் சாளரத்திற்குள் இழுத்துவிடலாம்.

    ஃபைல்கள் பட்டியலில் சரியான தரவுத்தகவல் ஃபைல் ஒன்று இருக்க வேண்டும். அது விரிதாளாகவோ DDEX ஃபைலாகவோ இருக்கலாம். ஃபைலைச் சேர்த்ததும் சரிபார்ப்புச் செயல்முறையைத் தரவுத்தகவல் ஃபைல் தானாகத் தொடங்கும் (ஒரு சுழலும் ஐகான் தோன்றும்.)
     
  3. சிவப்பு ஐகானுக்கு அடுத்துள்ள பட்டனைக் கிளிக் செய்து பிழை ஏதேனும் இருந்தால் மதிப்பாய்வு செய்யவும்.

    அசல் ஃபைலில் உள்ள தரவுத்தகவலை மாற்றவும். அது முடிந்ததும் பதிவேற்றுதல் பக்கத்தில் ஃபைலை மீண்டும் சேர்க்கவும். ஃபைல் பெயர் மாறவில்லை எனில் YouTube அதன் புதிய பதிப்பைப் பயன்படுத்தி சரிபார்ப்புச் செயல்முறையை மீண்டும் தொடங்கும்.
    • தரவை மட்டும் உங்கள் ஃபைல் மாற்றுகிறது எனில், அதாவது ஆடியோ அல்லது வீடியோ ஃபைல்கள் அதில் இல்லையெனில் தொகுப்பைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்து தொகுப்பைச் செயல்படுத்தச் சமர்ப்பிக்கலாம்.
    • தொகுப்பிற்கு ஆடியோ அல்லது வீடியோ ஃபைல்கள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றைப் பதிவேற்றத் தயாராக உள்ளீர்கள் எனில், அந்தக் கூடுதல் ஃபைல்களையும் தொகுப்பில் சேர்த்துவிட்டு சரிபார்ப்பு முடியும்வரை காத்திருக்கவும்.  தொகுப்பைச் செயல்படுத்துவதற்குச் சமர்ப்பிக்க, தொகுப்பைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தரவுத்தகவல் ஃபைலைச் சரிபார்க்க மட்டுமே செய்கிறீர்கள், அது இன்னும் பதிவேற்றத் தயாராகவில்லை எனில் வரைவை நீக்கு பட்டனைக் கிளிக் செய்து தொகுப்பை நிராகரிக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4001856933931908292
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false