SSL செயல்திறன்

யாரேனும் ஒருவர் உள்நுழைந்துள்ளாரா அல்லது வெளியேறியுள்ளாரா என்பதைப் பொறுத்து பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற இணைப்பின் மூலமாக YouTube பக்கங்கள் ஏற்றப்படலாம். SSL தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இணைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. பார்வையாளரின் உலாவியில் எச்சரிக்கைச் செய்திகள் வருவதைத் தவிர்க்க விளம்பரங்கள், கிரியேட்டிவ்கள் மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் தகுந்த இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்:

  • பாதுகாப்பற்ற பக்கங்களுக்கு (HTTP://) விளம்பரம், கிரியேட்டிவ் மற்றும் கண்காணிப்புப் பிக்சல்கள் HTTP அல்லது HTTPSஸைப் பயன்படுத்தலாம்.
  • பாதுகாப்பான பக்கங்களுக்கு (HTTPS://) விளம்பரம், கிரியேட்டிவ் மற்றும் கண்காணிப்புப் பிக்சல்கள் HTTPS மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் HTTPS:// எனும் பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தும் விளம்பரங்கள் மற்றும் கிரியேட்டிவ்களுக்கு அடுத்தடுத்த ஊடக உடைமைகளுக்கான கோரிக்கைகளும் கண்காணிப்பு URLகளுக்கான கோரிக்கைகளும் HTTPS:// இணைப்பையே பயன்படுத்த வேண்டும். அனைத்துக் கிரியேட்டிவ்களும் சிறப்பு டிராஃபிக்கிங் செய்ய வேண்டிய தேவையின்றி HTTP மற்றும் HTTPS மூலம் வழங்க வேண்டும். கண்காணிப்புப் பிக்சல் URLகள் வழங்கப்பட்டிருப்பின் அவை SSL உடன் இணக்கமானவையாக இருக்கவேண்டும் (HTTPS:// எனத் தொடங்குபவை). விளம்பரத்தில் SSL இணக்கமற்றதாக இருக்க அனுமதிக்கப்படும் ஒரே பகுதி 'கிளிக் URL' மட்டுமேயாகும் (இலக்கு முகப்புப் பக்கம்).

கூடுதல் விவரங்கள்

மூன்றாம் தரப்பினர் வழங்கும் காட்சி விளம்பரங்கள்

சில விற்பனையாளர்கள் தங்களது கிரியேட்டிவை SSL உடன் இணக்கமாக இருக்க, தானாகத் திருத்தும் மென்பொருளைப் பயன்படுத்துவார்கள். இந்த விற்பனையாளர்களுக்கு SSL உடன் உங்கள் கிரியேட்டிவ் இணக்கமுள்ளதாக இருப்பதற்குச் சிறு மாற்றம் செய்ய வேண்டும். விற்பனையாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

VAST கண்காணிப்புப் பிக்சல்கள்

இன்ஸ்ட்ரீம், இன்வீடியோ போன்ற VAST விளம்பரங்களைக் கண்காணிக்க, பாதுகாப்பற்ற URLகளைப் பாதுகாப்பான இணைப்பின் மூலம் கோருவோம். URLலைக் கோருவதற்கு முன் HTTP://க்குப் பதில் HTTPS://ஐ இடமாற்றுவதன் மூலம் இதைச் செய்வோம். கண்காணிப்பில் ஈடுபடும் உங்கள் விற்பனையாளரால் இந்தச் செயல்பாட்டை ஆதரிக்க முடியாவிட்டால் வழங்கப்படும் கண்காணிப்பு URL, SSL உடன் இணக்கமானதாக இருக்க வேண்டும் (HTTPS:// உடன் தொடங்குவது). விற்பனையாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மூன்றாம் தரப்பு வழங்கும் VAST விளம்பரங்கள்

மூன்றாம் தரப்பு VAST விளம்பரங்கள் அனைத்தும் SSL உடன் இணக்கமாக இருக்க வேண்டும். VAST பதிலளிப்பிற்குள் இருக்கும் URL எதுவும் தகுந்த இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

  • பாதுகாப்பற்ற பக்கங்களுக்கு (HTTP://) கிரியேட்டிவ் படைப்புகளும் கண்காணிப்புப் பிக்சல்களும் HTTP அல்லது HTTPSஸைப் பயன்படுத்தலாம்.
  • பாதுகாப்பான பக்கங்களுக்கு (HTTPS://) கிரியேட்டிவ் மற்றும் கண்காணிப்புப் பிக்சல்கள் HTTPSஸை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் உங்கள் விற்பனையாளர் தகுந்த நெறிமுறையில் தானாகத் திருத்தும் மென்பொருளைப் பயன்படுத்தி விளம்பரப் பதிலளிப்பைத் திருத்தாமலோ HTTP://க்குப் பதில் HTTPS://ஐ இடமாற்றாமலோ இருப்பார். அப்போது VAST விளம்பரத்திலிருக்கும் அனைத்து ஊடக மற்றும் கண்காணிப்பு URLகளும் இயல்பாக HTTPS://ஐப் பயன்படுத்த வேண்டும்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10246262657615400196
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false