மறைக்கப்பட்ட சேனலை மீண்டும் காட்டுதல்

"உங்கள் YouTube சேனலில் உள்ளடக்கம் உள்ளது ஆனாலும் முடக்கப்பட்டுள்ளது" எனும் மெசேஜ் உங்கள் உள்ளடக்கப் பக்கத்தில் காட்டப்படலாம். அப்படிக் காட்டப்பட்டால் உங்கள் சேனல் மறைக்கப்பட்டுள்ளது, உங்கள் வீடியோக்களையும் பிற உள்ளடக்கத்தையும் தற்போது பிறரால் பார்க்க முடியாது என்று அர்த்தம்.

Google கணக்கு அமைப்புகள் வழியாக எனது சேனலை மறைஎன்பதை நீங்கள் தேர்ந்தெடுத்ததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இப்போதும் தொடர்ந்து நீங்கள் வீடியோக்களைப் பார்க்கலாம் விருப்பம் தெரிவிக்கலாம் குழுசேரலாம், உங்களைத் தவிர மற்றவர்களுக்கு இவை காட்டப்படாது. உங்கள் வீடியோவைப் பிறருக்குக் காட்ட விரும்பினாலோ பிற அம்சங்களைப் பயன்படுத்த விரும்பினாலோ சேனலை மீண்டும் இயக்க வேண்டும்.

உங்கள் சேனலை இயக்கி உள்ளடக்கத்தைக் காட்டுவதற்கான வழிமுறை

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. சேனலை உருவாக்கு என்பதற்குச் சென்று படிவத்தை நிரப்பவும். இந்தச் செயல் உங்கள் YouTube சேனலை மீட்டெடுக்கும்.
    • படிவத்தில் "பிசினஸ் அல்லது வேறு பெயரைப் பயன்படுத்த இங்கே கிளிக் செய்க" என்பதைக் கிளிக் செய்ய வேண்டாம். இந்தச் செயல் மறைக்கப்பட்டுள்ள உங்கள் சேனலை மீட்டெடுப்பதற்குப் பதிலாக ஒரு சேனலை உருவாக்கும்.
  3. உங்கள் சேனலைப் பொதுவில் மீண்டும் உருவாக்கியபிறகு, 'வீடியோக்கள்' பக்கத்தில் உங்கள் வீடியோக்களையும் பிளேலிஸ்ட்களையும் அனைவரும் பார்க்கும்படி மாற்றலாம்.

உங்களிடம் பிராண்டு கணக்கு இருந்தால்

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  4. கணக்கு அதன் பிறகு உங்கள் சேனல்களைச் சேருங்கள்/நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  5. மறைக்கப்பட்ட சேனலைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேனலை உருவாக்குமாறு கேட்கப்படும்போது சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15512683289475875974
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false